வில்லண்டம் பிடிச்ச விலங்கும் லவட்டின பச்சையும்!!!!! 02

21 முள்ளம்பன்றி ( Porcupines or Hystricidae )


படத்தில் உள்ள மிருகத்தின் பெயர் முள்ளம்பன்றி ஆகும் . இந்த முள்ளம்பன்றிகள் எதிரிகள் தாக்கவரும்பொழுது உடலைச் சிலிர்த்து அதிலுள்ள முட்களாலேயே தாக்கவல்லன . இவைபற்றி தமிழல் அறிய இங்கே அழுத்துங்கள் : http://ta.wikipedia....ki/முள்ளம்பன்றி

 இவைபற்றி ஆங்கிலத்தில் அறிய இங்கே அழுத்துங்கள்: http://en.wikipedia.org/wiki/Porcupine

உங்களுக்குத்தான் இந்தமுறை பச்சை சிறியர்   . அப்ப அடுத்தவரைப் பாப்பமோ   ???

22 பெரியகரடிப்பூனை ( Panda or Ailuropoda melanoleuca )


படத்தில் உள்ள விலங்குக்கான சரியான பதில் பெரியகரடிப்பூனை அல்லது கருவெண்கரடி ஆகும் . இதுபற்றிய தகவலை தமிழில் அறிய இங்கே அழுத்துங்கள் :http://ta.wikipedia....org/wiki/பாண்டா

 இதுபற்றிய தகவலை ஆங்கிலத்தில் அறிய இங்கே அழுத்துங்கள்:http://en.wikipedia.org/wiki/Panda

சனம் எல்லாம் கருவெண்கரடி எண்டும் பண்டா கரடி எண்டும் சொல்ல , நானும் ஏதோ மல்லையர் குளப்பங்காசி வேலையள் பாக்கிறார் எண்டுதான் நினைச்சன்   . ஆனால் நான் புத்தகங்களை பிரட்டிப் பாத்ததிலை அண்ணாச்சி சொன்னதுதான் சரியாக் கிடக்கு . எங்களுக்கு தெரியாத பெயரை அவர் தந்ததாலை அவருக்கு பச்சையை தரவேண்டியதாய் போச்சு  . அதாலை இரண்டாவது முதலாவதாய்ச் சொன்ன தமிழினிக்கு என்னாலை பாராட்டுத்தான் சொல்லக் கூடியதாய் இருக்கு  . அடுத்தவர் வெயிட்டிங்கில இருக்கிறார் அவரை பாப்பம் என்ன   ?????

23 கரடித் தேவாங்கு ( Sloth bear or Melursus ursinus )


படத்தில் உள்ள விலங்கின் பெயர் கரடித் தேவாங்கு ஆகும் இதுபற்றிய விபரங்களை ஆங்கிலத்தில் அறிய இங்கே அழுத்துங்கள் : http://en.wikipedia....wiki/Sloth_bear

குடுங்கோ கையை நவீனன் . எல்லாரும் கறடி விட்டினம்  . என்ரை கூட்டாளிக்கு அப்பவும் சொன்னான் , மூஞ்சை சரியில்லை வடிவாய் பாருங்கோ எண்டு . சொல்வழி கேட்டால்தானே  . சும்மா கறடி விட்டதுதான் மிச்சம்  . எல்லாருக்கும் மனசு நிறைஞ்ச வாழ்த்துக்கள் . ஒருத்தர் வெயிற்றிங்கிலை நிக்கிறார் அவரை பாப்பமோ   ??

24 வேக வேட்டைநாய் ( Whippet or Snap dog ) 

படத்திலுள்ள விலங்கின் பெயர் " வேக வேட்டை நாயாகும் ". இதுபற்றிய தகவல்களுக்கு இங்கே அழுத்துங்கள் : http://en.wikipedia.org/wiki/Whippet

நவீனனுக்கு ரெண்டம்தரமும் பரிசு விழுந்து கிடக்கு  . சோணங்கி நாய் , குழிகாளைநாய் எண்டெல்லாம் பேருகள் சொல்லி இருக்கிறியள்  . உங்கடை ஆர்வத்தை என்னாலை பாராட்த்தான் முடியுது . அடுத்தவரையும் பாப்பம்   .

25 நிலப்பன்றி அல்லது எறும்பு தின்னிக்கூனி ( aardvark or Orycteropus afer)


படத்தில் உள்ள விலங்கின் பெயர் நிலப்பன்றி ஆகும் . இது பன்றி இனங்களைச் சேர்ந்த பாலூட்டி விலங்காகும் . இதன் பரவலாக்கம் ஆபிபிரிக்காவிலேயே அதிகமாகக் காணப்படுகின்றது . இதுபற்றிய தகவல் அறிய இங்கே அழுத்துங்கள் : http://en.wikipedia.org/wiki/Aardvark

அடிச்சாலும் அடிச்சியள் சிக்ஸ்சர் நவீனன்  . கையை குடுங்கோ . மல்லையர் நீங்கள் " நிலப்பன்றி " எண்டு சொன்னியள் . உங்களைப் பாராட்டிறன் . எங்களுக்குத் தெரிஞ்சது நிலப் பண்டியும் காட்டுப் பண்டியும் தான் . நீங்கள் தந்த புறூவ் லை ANT BEAR எண்டும் இருக்குது  . அதாலை நவீனனுக்குத்தான் பச்சை போகுது  . ********************************************

வணக்கம் வாசகர்களே !! கள உறவுகளே !!!

உங்களது வில்லண்டம் பிடிச்ச விலங்கும் லவட்டின பச்சையும்!!!!! இத்துடன் நிறைவுக்கு வருகின்றது . இந்த தொடரிலே என்னால் முடிந்த அளவு விலங்குகளை உங்கள் உதவியுடன் வகைப்படுத்தி யாழ் இணையத்தின் ஆவணமாக்கி இருக்கின்றேன் . இத்தொடரை நீடிக்க வைத்த அனைத்துக் கள உறவுகளுக்கும் எனது தலை சாய்கின்றது .

நேசமுடன் கோமகன்


***************************************************************
26 கருமுகக் குரங்கு ( vervet monkey or Chlorocebus pygerythrus .


படத்தில் உள்ள விலங்கிற்கான பெயர் கருமுகக் குரங்கு ஆகும் . இந்த இனம் தெற்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் அதிகமாக வசிக்கின்றது . இது பற்றிய தகவலை அறிய இங்கே அழுத்துங்கள் :

http://en.wikipedia.org/wiki/Vervet

இந்தமுறை பச்சை எனக்குத்தான்  . ஏனெண்டால் ஒருத்தர் சரியான பேரை சொன்னவர்தான் . ஆனால் நேர்சறி பழக்கத்திலை துப்பலாலை பூசி அழிச்சு எழுதியிருக்கிறார் . அதாலை அவருக்கு போட்டி விதிமுறை மேலதிக இணைப்பு 2ன் படி என்னாலை பரிசு குடுக்கேலாது கண்டியளோ  . மற்றது புங்கையர் கருங்குரங்கு எண்டியள் . நீங்கள் சொல்லிற கருங்குரங்கு இவர்தான் பேர் வாலில்லா கருங்குரங்கு (bonobo) .


கருங்குரங்கிலையும் வித்தியாசமான பேரோடை ஆக்கள் இருக்கினம் . சரி பிள்ளையள் அப்ப நான் வரட்டோ      .


   

Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.