படமெடுத்த பாம்பும் பயந்தோடிய யாழ் கள உறவுகளும் -அறிவியல் .


வணக்கம் கள உறவுகளே ! வாசகர்களே !

யாழ் இணையம் தனது பதினைந்தாவது அகவையில் கால் அடி எடுத்து வைக்கும் இந்த வேளையிலே அதற்கு எனது மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு , ஓர் போட்டிக் குறுந்தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . நான் ஏற்கனவே ஆரம்பித்த பூக்கள் , பறவைகள் , மீன்கள் , விலங்குகள் வரிசையில் நகரும் வகையைச் சேர்ந்த பாம்பு இனங்களை உறவுகளுக்கு அறிமுகம் செய்கின்றேன் . நான் ஒரு பாம்பின் படத்தைப் போடுவேன் . நீங்கள் அந்த பாம்பிற்கான தூய தமிழ்ச் சொல்லைத் தரவேண்டும் . சரியான தூய தமிழ்ப் பெயரைத் தருபவருக்கு என்னால் ஓர் சிறப்புப் பரிசு தரப்படும் . அதாவது சரியான தூயதமிழ் பெயரைச் சொல்லும் முதலாவது கள உறவிற்கு ஒரு பச்சைப் புள்ளி பரிசாகத் தரப்படும் . யாரும் அதற்கான பெயரைச் சொல்லாதுவிட்டால் 48 மணித்தியாலங்களின் பின்பு நான் போட்ட பாம்பு படத்திற்கான சரியான தூயதமிழ் பெயரை அறிவிக்கின்றேன் . எங்கே படம் எடுத்த பாம்பு என்கையில்............. பயப்பிடாது கிட்ட வந்து மகுடியை ஊதுங்கள் கள உறவுகளே ..............

கோமகன்01 கருநாகம் ( King cobra )


படம் ஒன்றிற்கான தாயதமிழ் கருநாகம் ஆகும் . இதுபற்றிய மேலதிக தகவலைத் தமிழில் பார்வையிட இங்கே அழுத்துங்கள் :http://ta.wikipedia....g/wiki/கருநாகம்

இதுபற்றிய மேலதிக தகவலைத் ஆங்கிலத்தில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்:http://en.wikipedia....wiki/King_cobra

02 மலை வீரியன் பாம்பு - adder  mountain.


படத்தில் உள்ள பாம்பின் சரியான பெயர் மலை வீரியன் பாம்பு ஆகும் . வீரியன் குடும்பத்தில் ஒன்றான இந்தப் பாம்பு கொடிய விசம் உடையதும் , மலைப்பரதேசங்களிலேயே அதிகமாகக் காணப்படும் . 

03 கருஞ்சாரைப் பாம்பு  black rat snake -Pobsoletus. 


படத்தில் உள்ள பாம்பிற்கான சரியான பெயர் கருஞ் சாரைப் பாம்பு ஆகும் . இதுபற்றிய தகவல்களை அறிய இங்கே அழுத்துங்கள் :


04 தொப்பை வீரியன் பாம்பு - Bitis arietans - adder puff. 


இந்தப் படத்தில் உள்ள பாம்பின் பெயர் தொப்பை வீரியன் பாம்பு ஆகும் . வீரியன் இனங்களில் அதிக விசத்தை உடையது தொப்பை வீரியனாகும் . இதன் கடியில் யாருமே உயிர் தப்ப முடியாது .இதுபற்றிய ஆங்கில விளக்கத்திற்கு இங்கே அழுத்துங்கள்


05 வெங்கிணாந்தி பாம்பு அல்லது இரைநெரி வெங்கிணாந்தி பாம்பு - Boa - Boa constrictor. 


படத்தில் உள்ள பாம்பின் பெயர் வெங்கிணாந்தி பாம்பு அல்லது இரைநெரி வெங்கிணாந்தி பாம்பு ஆகும் . இவை பிடிக்கின்ற இரைகளை முதலில் தனது பாரிய உடலால் இரையின் எலும்புகளை உடைத்து விட்டு இரையை லாவகமாக விழுங்கும் குணம் கொண்டவை . இவ்வகையான பாம்புகள் மெக்சிக்கோ , மத்திய மற்றும் தென் அமெரிக்கா , மடகஸ்கார் , ரெனியோன் தீவுகளில் அதிகமாகக் காணப்படுகின்றன இவை பற்றிய தகவல்களை ஆங்கிலத்தில் அறிய இங்கே அழுத்துங்கள் : http://en.wikipedia.org/wiki/Boa_(genus)

06 பொன்வரைப் பூனைப் பாம்பு - gold-ringed cat snake - mangrove snake -Boiga dendrophila.படத்தில் உள்ள பாம்பின் பெயர் பொன்வரை பூனைப் பாம்பு ஆகும் இது ஏறத்தாள 1 மீற்றரில் இருந்து 2.5 மீற்றர் வரை வளரக்கூடியது இது தென்கிழக்காசிய நாடுகளிலேயே அதிகமாகக் காணப்படுகின்றது மேலும் இதுபற்றிய தகவல்களை அறிய இங்கே அழுத்துங்கள் : http://en.wikipedia....inged_Cat_Snake

07 பற்றை வீரியன் - bushmaster. 


மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....hmaster_(snake)

08 பூனைப்பாம்பு - boiga - mangrove snake. 


படம் எட்டில் உள்ள பாம்பின் பெயர் பூனைப் பாம்பாகும் . இதில் , நாய்ப்பல் பூனைப் பாம்பு , பொன்வரைப் பூனைப் பாம்பு , நரைப்பூனைப் பாம்பு , புள்ளிப்பூனைப் பாம்பு , பழுப்பு மஞ்சள் பூனைப் பாம்பு என்று பல வகைகள் உள்ளன . இதுபற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia.org/wiki/Cat_snake

09 கருநாகம் - King cobra. 


படம் ஒன்பதிற்கான தூயதமிழ் கருநாகம் ஆகும் . இதுபற்றிய மேலதிக தகவலைத் தமிழில் பார்வையிட இங்கே அழுத்துங்கள் :


இதுபற்றிய மேலதிக தகவலைத் ஆங்கிலத்தில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்:


10 கண்ணாடி விரியன் -Russel's Viper - Daboia russelii.


கண்ணாடி விரியன் (Russel's Viper, Daboia russelii) என்பது நச்சுத் தன்மை கொண்ட பாம்பு. இவை ஆசியாவில் குறிப்பாக இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும், தென்கிழக்காசியா, சீனாவின் தெற்குப் பகுதி, தாய்வான் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இது பெரும் நான்கு எனப்படும் நான்கு பாம்புகளில் ஒன்று. இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஏறக்குறைய இவை நான்கே காரணம்.

உடல் தோற்றம் :

தடித்த உடல்; கழுத்தைவிடப் பெரிய முக்கோண-வடிவ தலை.

தலையின் மேற்பகுதியிலுள்ள செதில்கள் சிறியனவாகவும் அதிக எண்ணிக்கையிலும் உள்ளன. பெரிய மூக்குத்துளை உடையதாகவும், கண்மணி செங்குத்தாகவும் உள்ளன.

நிறம் மற்றும் குறிகள்:

பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிற உடலுடையது. உடலின் நீளவாக்கில் மூன்று வரிசைகளில் தெளிவாகத் தெரியும் பெரிய பழுப்பு (அல்லது கருப்பு) வட்ட (அல்லது நீள்வட்ட) குறிகள் காணப்படுகின்றன. இந்தக்குறிகள் ஒன்றுடன் மற்றொன்று சங்கிலி போல் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ காணப்படுகின்றன. உச்சந்தலைப்பகுதியில் முக்கோண வடிவ வெள்ளை நிறக்குறி உள்ளது. கண்ணுக்கு கீழேயும் பக்கவாட்டிலும் முக்கோண வடிவ கருங்குறிகள் உள்ளன. உடலின் கீழ்ப்பகுதி வெண்மையாகவும் பிறை-வடிவக் குறிகளுடனும் காணப்படுகிறது.

நச்சு:

விரியன் பாம்பின் நச்சு குருதிச் சிதைப்பானாகும். ஆகவே மருத்துவர்கள் இரத்தம் உறையும் நேரம் மற்றும் இரத்தம் வழியும் நேரம் ஆகியவற்றை மணிக்கொரு முறைச் சோதிப்பர்.


ஆங்கிலத்தில்: http://simple.wikipe...org/wiki/Daboia
Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.