படமெடுத்த பாம்பும் பயந்தோடிய யாழ் கள உறவுகளும் - அறிவியல் -பாகம் 0211 சங்கிலிப் பாம்பு  Rattlesnake - Crotalus Linnaeus.படம் பதினொன்றுக்கான பதில் சங்கிலிப் பாம்பாகும் . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....iki/Rattlesnake

12 உருட்டு வீரியன் Bothrops alternatus.இந்த பாம்பின் பெயர் உருட்டு வீரியன் ஆகும் . இது தென் அமெரிக்க நாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றது . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia.org/wiki/Urutu

13 அரத்தோல் பாம்பு - file snake - Acrochordidae. 
படம் பதின்மூன்றிற்கான சரியான பதில் அரத்தோல் பாம்பாகும் . இதை எமது நாட்டில் புடையன் பாம்பு என்றும் ( Little filesnake ) அழைப்பார்கள் அனால் புடையன் பாம்பு தோற்றத்தில் சிறிது வித்தியாசமானது . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....i/Acrochordidae

14 மினுங்கல் பாம்பு -Sunbeam snake - Xenopeltidae. 
பதின்நான்காம் படத்தில் உள்ள பாம்பின் பெயர் மினுங்கல் பாம்பாகும் . இந்தப் பாம்புகளின் தோலானது வெளிச்சத்துக்கு வானவில்லைப் போல நிறங்கள் மாறும் இயல்பு உடையது . இந்த வகையான பாம்புகள் தென்னாசியாவிலேயே அதிகம் காணப் படுகின்றன . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....i/Sunbeam_snake

15 மஞ்சள் நாகம் அல்லது செம்பு நாகம் - yellow cobra - Cape cobra copper cobra - Naja nivea. 
படம் பதினைந்திற்கான சரியான பெயர் மஞ்சள் நாகம் அல்லது செம்பு நாகம் ஆகும் ஏறத்தாள 1.5 மீறர்கள் வரை வளரக் கூடிய இந்த நாக பாம்பு அதிக அளவு தென்னாபிரிக்காவிலேயே காணப் படுகின்றது .


16 மணல் விரியன் - Cerastes vipera. 
படம் பதினாறுக்கான சரியான பதில் மணல் வீரியன் ஆகும் . இந்த வகையான பாம்புகள் மணல் பாலைவனங்களைக் கொண்ட வட ஆபிரிக்க நாடுகளிலேயே அதிகம் காணப்படுகின்றன . இவை 35 செ மீற்றரில் இருந்து 50 செ மீற்றர் வரை வளரக் கூடியவை . இவைகளில் பெண் மணல் வீரியன் ஆண் பாம்பை விடப் பெரியதாகும் . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....Cerastes_vipera

17 பவழப் பாம்பு - coral snake - elapid snakes.
படம் பதினெட்டுக்கான சரியான பதில் பவழப் பாம்பாகும் . இவை பொதுவாக சிவப்பு மஞ்சள் நிறத்திலோ அல்லது கறுப்பு வெள்ளை நிறத்திலோ காணப்படும் . இவை கூடுதலாக வட அமெரிக்காவிலேயே காணப்படுகின்றன . இவை மூன்று வகையாகப் பிரிக்கப் படுகின்றன ,

01 வட அமெரிக்காவை கொண்ட கிழக்குப் பவழப் பாம்பு Micrurus fulvius (Eastern or common coral snake),

02 டெக்ஸ்சாஸ் மாநிலத்தில் காணப் படும் டெக்ஸ்சாஸ் பவழப்பாம்பு ( Micrurus tener (Texas coral snake),

03 அரிசோனா மாநிலத்தில் காணப் படும் அரிசோனா பவழப்பாம்பு (Micruroides euryxanthus (Arizona coral snake )

இந்த வகையான பாம்புகள் 90 செ மீற்றரில் இருந்து 150 செ மீற்றர் வரை வளரக்கூடியன. மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....iki/Coral_snake

17 காட்டு நாகம் - forest cobra - Naja melanoleuca. 
காட்டு நாகம் forest cobra Naja melanoleuca ஆபிரிக்காவின் மத்திய மேற்கு பிராந்தியங்களில் அதிகமாக வசிக்கின்றது . இந்த நாகத்தை கருப்பு நாகம் அல்லது கருப்பு வெள்ளைச் சொண்டு நாகம் என்றும் அழைக்கின்றனர் . இது 1.4 மீற்றி ல் இருந்து 3.1 மீற்றர் வரை வளரக்கூடியது . இதன் விஷம் கொடியது . கடிபட்டவருக்கு விரைவாகவே அதாவது 30 நிமிடங்களில் மரணம் ஏற்படும் . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் http://en.wikipedia....ki/Forest_cobra

18 கட்டுவீரியன் - common krait - Bungarus caeruleus. 
படம் பதினெட்டில் உள்ளது கட்டு வீரியன் பாம்பு ஆகும் இந்தப் பாம்பை நீலக் கட்டு வீரியன் அல்லது கருங் கட்டு வீரியன் என்றும் அழைப்பர் .இந்தக் கட்டு வீரியன் 1.75 மீற்றர் வரை வளரக் கூடியது எங்கள் ஊரிலே இந்தக் கட்டு வீரியனைப் புடையன் பாம்பு என்று அழைப்பர் மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....ki/Common_krait

19 முரல் வீரியன் - hundred pacer viper- sharp-nosed viper - snorkel viper - Deinagkistrodon acutus. 
படம் பத்தொன்பதில் உள்ள பாம்பின் பெயர் முரல் வீரியன் ஆகும் . இந்தப் பாம்புகள் 0.8 மீற்றரில் இருந்து 1.50 மீற்றர் வரை வளரக் கூடியவை . இவை கூடுதலாக தென் சீனாவிலும் வட வியட்நாமிலும் காணப் படுகின்றன . இவைகள் கொடிய விஷமுடையவை . இதனால் கடிபட்டவர் ஏறத்தாள 90 அடி எடுத்து நடக்க முன்னரே இறந்து விடுவார் . மேலதிக தகவலுகளுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....Deinagkistrodon .

20 குத்து மூக்குப் புழுப் பாம்பு - longnose worm snake - Leptotyphlops macrorhynchus. 


படம் இருபதில் உள்ள பாம்பின் பெயர் குத்து மூக்குப் புழுப் பாம்பாகும் மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....s_macrorhynchus

21 அலகுக் கடல்ப் பாம்பு  beaked sea snake- hook-nosed sea snake- common sea snake - Valakadyn sea snake- the Enhydrina schistosa. 


படம் இருபத்தி ஒன்றில் உள்ள பாம்பின் பெயர் அலகுக் கடல்ப் பாம்பாகும் மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....drina_schistosa

22 நரிப் பாம்பு - Fox snake - Pantherophis. நரிப் பாம்பு என்று பொதுவாக அழைக்கப் பட்டாலும் இந்தப் பாம்பு இரண்டு வகையாக வேறு படுத்தப் படுகின்றது . அவையாவன மேற்கு நரிப் பாம்பு ( (Pantherophis vulpina ) கிழக்கு நரிப் பாம்பு ( (Pantherophis gloydi ) என்பதாகும் . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : 

http://en.wikipedia....iki/Fox_snake �

23 சுள்ளிப் பாம்பு அல்லது பறவைப் பாம்பு - twig snake bird snake - Thelotornis. 


படம் இருபத்தி மூன்றில் உள்ள பாம்பு சுள்ளிப் பாம்பு அல்லது பறவை பாம்பு ஆகும் . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....wiki/Twig_snake

24 ஓநாய்ப் பாம்பு - common wolf snake - Lycodon capucinus. 


படம் இருபத்தி நான்கில் உள்ள பாம்பின் பெயர் ஓநாய்ப் பாம்பாகும் . இந்த வகையான பாம்புகள் தென்கிழக்காசிய நாடுகள் , அவுஸ்திரேலியா , மொரீசியஸ் மற்றும் ரெனியொன் தீவுக் கூட்டங்களில் அதிகமாகக் காணப் படுகின்றன . இவை கூடுதலாக இரவு நேரங்களிலேயே உலாவித்திரிய வல்லன . இவை பற்றி மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : 


http://en.wikipedia....wiki/Wolf_snake

25 மழுங்குமூக்கு விரியன் - blunt-nosed viper - Lebetine viper - Levant viper - Macrovipera lebetina. 
படம் இருபத்தி ஐந்தில் உள்ள பாம்பின் பெயர் மழுங்குமூக்கு விரியன் பாம்பாகும் . இவை வட ஆபிரிக்கா மத்திய கிழக்கு நாடுகள் . இந்தியாவின் காஷ்மீர் பகுதிகளிலும் அதிகமாகக் காணப் படுகின்றன . இவை பொதுவாக 150 செ மீ வரை வளரக் கூடியவை இவை சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....vipera_lebetina

கோமகன் 
Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.