படமெடுத்த பாம்பும் பயந்தோடிய யாழ் கள உறவுகளும் - அறிவியல் - இறுதிப் பாகம்

வணக்கம் கள உறவுகளே !!


படமெடுத்த பாம்பும் பயந்தோடிய யாழ் கள உறவுகளும் என்ற போட்டித் தொடரை இத்துடன் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . இத்தொடரில் ஆர்வமுடன் பங்கு பற்றி பரிசில்களை அள்ளிக் குவித்த அனைத்துக் கள உறவுகளுக்கும் எனது தலை சாய்கின்றது . பொதுவாகப் பாம்பு என்றாலே பயமும் அருவருப்பும் அடைகின்றோம் . அதனால் தானோ " பாம்பென்றால் படையும் நடுங்கும் " என்ற பழமொழியையும் " பாம்பின் காலைப் பாம்பு அறியும் " என்ற சொலவடையையும் எமது முன்னோர் விட்டுச் சென்றுள்ளனர் . தமிழர் வாழ்வில் நாக வழிபாடு அவர்கள் பாரம்பரியத்தில் ஊறிவிட்டதொன்று . இதற்கு ஈழத்திலே பரந்து விரிந்துள்ள நாகதம்பிரான் ஆலயங்கள் சாட்சியாக எம் முன்னே இருக்கின்றன . அத்துடன் ஈழத்திலே நாகர்கள் வாழ்ந்ததிற்கான பல வரலாற்று தடையங்கள் உள்ளன . நாகர்கள் பாம்பை தெய்வமாக வழிபட்டவர்கள் , இவாறான காரணங்களாலேயே இந்தத் தொடரை பொங்குதமிழ் பகுதியில் ஆரம்பித்தேன் . நேர காலங்கள் கூடிவரும் வேளையில் மீண்டும் ஒரு போட்டித் தொடரில் சந்திக்கும்வரை....................


கோமகன்
0000000000000000000000000


25 கருப்பு மாம்பா - The black mamba - Dendroaspis polylepis.

கருப்பு மாம்பா என்று அழைக்கப்படும் இந்தப் பாம்பு ஆபிரிக்காவின் கிழக்குப் பகுதியிலும் தெற்குப் பகுதியிலும் அதிகமாகக் காணப்படுகின்றது . பாம்பினங்களில் உலகிலேயே குறுகிய தூரத்தை மிக வேகமாக மணிக்கு 20 கி.மீ வேகத்தில் கடக்க வல்லது கருப்பு மாம்பாவாகும் . இந்தப் பாம்பு கடிக்கும் பொழுது இதன் நஞ்சுப் பையிலிருந்து 50 மில்லி கிராமில் இருந்து 120 மில்லி கிராம் வரை விஷத்தைப் பீச்சும் வல்லமையுள்ளது . சாதாரணாமாக 15 மில்லி கிராம் விஷம் இருந்தாலே ஒருவர் உடனடியாக மரணத்தைத் தழுவிக் கொள்வார் .


மேலும் இந்தக் கருப்பு மாம்பா பாம்பு உலகில் அருகி வரும் இனமாக இயற்கை ஆர்வலர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தப் போட்டித்தொடரின் இறுதிப் பாம்பாகச் சேர்த்துள்ளேன் . ஏறத்தாழ 25 வகையான பாம்புகளை உங்களுக்கு அறிமுகப் படுத்தியுள்ளேன் . போட்டியில் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் .

மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள். 

Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.