போரும் உடன் படிக்கையும் - கட்டுரை .கடந்த நூற்ராண்டு எமக்கு இரண்டு பெரிய கறுப்புப் பக்கங்களை விட்டுச் சென்றது . அமைதியாகச் சுழன்று கொண்டிருந்த பூமிப் பந்து முதலாம் உலகப்போர் என்ற புயலால் , 28 ஜூலை 1914 இல் இருந்து 11 நவம்பர் 1918 வரை தொடர்ந்து அதிர்ந்து கொண்டிருந்ததது . பல உயிர் இழப்புகளையும் , பொருள் இழப்புகளையும் சந்தித்த இந்த முதலாவது உலகப் போரானது , இறுதியில் கொம்பியேன் காடு என்ற இடத்தில் தொடரூந்துப் பெட்டி ஒன்றில் நேச நாடு அணிகளுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் 11 நவம்பர் 1918 காலை 11 மணியளவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது . அன்றில் இருந்து இந்த நாளை பிரான்ஸ் , பெல்ஜியம் , செர்பியா , நீயூசிலாந்து போன்ற நாடுகள் இந்தப் போரிலே உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் , அரச பொது விடுமுறையாக அறிவித்து இந்த நாளை மனதில் இருத்துகின்றன .


இன்று காலை 11 மணியளவில் நான் வேலை செய்யும் சார்ல்ஸ் து கோல் எத்துவால் இல் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவுத் தூபியான ஆர்க் து திறியோம்ப் இல் , நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி பிரான்சுவா ஹொலண்ட் மற்றும் அமைச்சர்கள் நேரில் வந்து முதலாம் உலகப் போரில் உயிர் தியாகம் செய்த அனைத்துப போர் வீரர்களுக்கும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்ததுடன் ஜனாதிபதி பங்குபற்றிய முன்னாள் படைவீரர்களையும் கௌரவித்தார் .

எனக்கு இந்த நிகழ்வுகள் நான் வாழும் நாடும் அந்த மக்களும் போர்வீரர்களை எந்த அளவுக்கு நேசிகின்றார்கள் என்று உணர்த்தினாலும் ஏனோ எனது மனம் இந்த நிகழ்வில் முழுமையாக ஈடுபடமுடியவில்லை . எனது இனமும் மண்ணும் இவர்களுக்கு ஈடாகவே பல இன்னல்களையும் இழப்புகளையும் நிகழ் காலச் சாட்சிகளாகச் உலகின் மனச் சாட்சிகளை உலுக்கி எடுத்தும் எமக்கான விடிவு தூரத்து விளக்காகத் தெரிவதும் ஒரு காரணம் என்ற வகையில் எனது மனம் ஒன்றுபட முடியவில்லை . இருந்தபோதிலும் நான் வாழுகின்ற இந்த நாட்டை பாதுகாத்த அந்தப் போர்வீரர்களுக்கு எனது அஞ்சலிகள் .

இந்த நிகழ்வுகள் சம்பந்தமான சில புகைப்படங்கள்

1918 டொரோண்டோ வில் நடைபெற்ற போர்வீரர் நினைவு நிகழ்வு

தொடரூந்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படல்

போர்காட்சிகளில் ஒன்று 


கோமகன் 

11 கார்த்திகை 2013 Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.