Posts

Showing posts from April, 2014

வாடாமல்லிகை - குறுநாவல் பாகம் - 06.

Image
தேன் வதையை மொய்த்துக் கொண்டிருக்கும் தேனீக்களைப்போல கோட்டே புகையிரத நிலையம் இருந்தது . மக்கள் புகையிரத நிலையத்தில் உள்ளே போவதும் வருவதுமாக எனக்கு தேன் கூட்டையே நினைவுபடுத்திக் கொண்டிருந்தனர். தனது காரை நிறுத்துவதற்கு எனது மனைவியின் தோழி சிரமப்படுவதை பார்த்து புகையிரத நிலயத்தின் முன்பாகவே நாங்கள் இறங்கிக்கொண்டோம் . நாங்கள் சன வெள்ளத்தில் நீந்திக்கொண்டே உள்ளே சென்றோம். உள்ளே காதைப்பிளக்கும் சந்தைக்கடை இரைச்சலாக புகையிரத மேடை இருந்தது நாங்கள் செல்ல வேண்டிய யாழ் தேவி புகையிரத மேடையில் நீண்டு வளைந்து நின்று இருந்தது. புகையிரதத்தில் இடம் பிடிப்பதற்காக பல் முனைதாக்குதல்கள் சனங்களால் தொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஓர் இடத்தைப் பிடிப்பதில் எம்மவர்கள் என்றுமே பல விதமான உத்திகளை பிரயோகிப்பதை கண்டு வியந்திருக்கின்றேன். அதுவே அந்த யாழ் தேவியிலும் நடைபெற்றுக்கொண்டு இருந்தது . மனைவியின் நண்பி எமக்கு முதலாம் வகுப்பு பெட்டியில் முன்பதிவு செய்திருந்தார். நாங்கள் எமது இருக்கையின் இலக்கத்தை தேடி பிடித்து அமர்ந்து கொண்டோம். எமக்கு முன்பாக இருந்த இருக்கைகள் யாருக்குகாகவோ காத்துகொண்டு இருந்தன. வெளியே தேநீர்…

வாடாமல்லிகை - குறுநாவல் பாகம் - 05.

Image
நாங்கள் பதிவு செய்திருந்த ரக்சி எங்கள் அருகில் வந்து நின்றது . வண்டி சாரதி பவ்வியமாக இறங்கி வந்து எமது பயணப் பொதிகளை வாங்கி கார் டிக்கிக்குள் வைத்தான் .அவன் சிங்களவனாக இருக்க வேண்டும் என்று அனுமானித்துக்கொண்டென் .ரக்சியில் குறைந்த கட்டணம் ஐம்பது ரூபாவில் இருந்து தொடங்கியது . ரக்சி எங்களை ஏற்றிக்கொண்டு பம்பலப்பிட்டி பிளட்ஸ் நோக்கி வழுக்கியது . ரக்சி ஓடத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே வழக்கமான பாதையில் செல்லாது அதிவிரைவு பாதையில் செல்லத் தொடங்கியது . அந்த பாதை மகிந்த சிந்தனையில் உதித்து சீனத்தின் உதவியுடன் சமீபத்தில் திறக்கப்பட்ட அதி வேகப்பாதை என்று ரக்சி சாரதியுடன் கதைத்த பொழுது அறியக்கூடியதாக இருந்தது. ஏறத்தாழ இருபது நிமிடங்களை விழுங்கி விட்டு எமது ரக்சி கொழும்பு நகரினுள் நுழைந்தது .அந்த அதிகாலையில் கொழும்பு அரை அவியல் முட்டை நிலையில் இருந்தது ஆங்காங்கே மக்கள் தங்கள் நாளை தொடங்குவதற்கு ஆயத்தமாக பஸ் நிலையங்களில் காத்திருந்தனர். வீதிகளில் சோதனை சாவடிகளோ வீதி தடைகளோ காணப்படவில்லை . எந்த இடத்திலும் விளம்பரதட்டிகளில் நாட்டைக் காத்த மகிந்த ஒரு மந்தகாசப் புன்னைகையுடன் காணப்பட்டார் . இதுவும் ஒரு…

வாடாமல்லிகை - குறுநாவல் பாகம் - 04.

Image
தரையை விட்டு சாய்வு கோணத்தில் மேலே எழும்பிய அந்த இயந்திரப்பறவை சிறிது நிமிடங்களை விழுங்கி விட்டு நேர்கோட்டில் தன்னை நிலை நிறுத்தி விரைவு படுத்தியது . வெளியே எங்கும் அந்தகாரக் கரும் இருள் அப்பியிருந்தது . அங்காங்கே நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன . அவைகளை விட வேறு எதையும் வெளியில் என்னால் பார்க்க முடியவில்லை.இப்பொழுது அந்த விமானத்தில் முக்கால் வாசிபேர் இலங்கையரே நிரம்பியிருந்தனர்.அவர்கள் எல்லோருமே சவுதி அரேபியாவை வளப்படுத்த வந்த கடைநிலை ஊழியர்கள்.அரேபிய ஷேக்குளின் ஷோக்குகளுக்காக வீடுகளையும் தொழில் நிலையங்களையும் பராமரிக்கவென்று குறைந்த தினார்களில் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள் . அவர்களை நான் அவதானித்த அளவில் அவர்களுக்கு எழுத வாசிக்க தெரிந்திருக்கவில்லை.விமானத்தில் வழங்கப்பட்ட குடிவரவு விண்ணப்பங்களை நிரப்புவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.ஒரு சிலர் எல்லோருக்கும் விண்ணப்பப் படிவங்களை நிரப்பிக் கொடுத்து கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் சந்தைக்கடை போல இருந்த அந்த விமானத்தை, அமைதி தன் பிடியினுள் படிப்படியாகத் தன்வசம் கொண்டு வந்தது . மரங்கள் கூதல் காலத்தில் தங்கள் இலைகளை உதிர்த்து தங்…

வாடாமல்லிகை - குறுநாவல் - பாகம் 03.

Image
தரை தட்டிய விமானத்தில் உள்ள அரேபியர்களில் முக்கால் வாசியினர் ஐரோப்பிய நவநாகரீக உடைகளில் இருந்து விடுதலை அடைந்து, ஓர் வெள்ளை நிற நாலுமுழ வேட்டி போன்று உயர்த்திகட்டியும் , வெறும் உடலின் மேல் வெள்ளை நிறத்திலான ஓர் போர்வையுடனும் வெறும் கால்களுடனும் நின்றிருந்தார்கள் . இந்தக் காட்சியானது பட்டிக்கு வழிமாறி வந்த ஆட்டுக்குட்டியின் நிலையையே எனக்கு ஏற்படுத்தியது. மேற்கு நாடுகளுக்கு உல்லாசம் அனுபவிக்க வரும் இவர்கள் தங்கள் மண்ணை மிதிக்கும் பொழுது மட்டும் சட்டங்களினால் கட்டாயப்படுதப்பட்ட வாழ்வுநிலையை ஏற்றது எனது மனதை நெருடவே செய்தது . எல்லோரும் இறங்குவதற்கு முண்டியடித்தனர் .ஆனாலும் அத்தனை சுலபமாக அவர்களால் இறங்க முடியவில்லை .அதற்கான காரணத்தை நாங்கள் வெளியே போகும் பொழுது தான் அறிந்து கொண்டோம் . விமானம் , விமானநிலயத்துடன் இணைக்காது தொலை தூரத்தில் நின்றது .அதில் படிக்கட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன .அதன் வழியே உடல் பெருத்த அரேபியர்கள் இறங்குவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். விமான நிலையத்துக்கு குளிரூட்டிய பேரூந்துகள் பயணிகளை கொண்டு சென்று கொண்டிருந்தன. எல்லோருமே குழந்தயை கிணத்துக்கட்டில் விட்டு வ…

வாடாமல்லிகை - குறுநாவல் பாகம் 02.

Image
நாங்கள் பயண வேலைகளை செய்துகொண்டிருந்த பொழுது ஒருநாள் மாலை கனடாவில் இருந்து மனைவியின் அண்ணை எங்களுடன் தொடர்பு கொண்டார். அவர் எங்களை சந்தோசப்படுத்துகின்றேன் பேர்வழி என்று கனேடிய தபால் சேவை மூலம் ஒரு ஐ பாட் தங்கைக்கு அனுப்பிருந்தார் .தான் அனுப்பி ஒருமாதத்துக்கு மேல் என்றும் அவர் எம்மை எடுக்கசொன்ன செய்தியானது எமது பயணம் நெருங்கிய வேளையில் எனது வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருந்தது .ஏனெனில் அது கனடாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் தொங்குபறி நிலையில் நின்று கொண்டிருந்தது .இதனால் எனக்குப் பதட்டம் கூடியதே ஒழிய குறையவில்லை. ஆனாலும் எனது​ பதட்டங்களை வெளிக்காட்டாது எனது வேளைகளில் மூழ்கினேன். நான் வேலை செய்கின்ற உல்லாசவிடுதி மீள்கட்டுமானப்பணி முடிவடைந்த நிலையில் அண்மையிலேயே மீண்டும் வாடிக்கையாளர்களுக்காக திறக்கப்பட்டது . நான் வகிக்கின்ற பதவி காரணமாக விடுமுறையில் செல்வதற்கு முன்பே நான் பல ஆயுத்தங்களை எனது உதவியாளர்களுக்கு செய்யவேண்டியிருந்தது. அது தந்த உடல் களைப்பு எனக்கு மேலும் எப்பொழுது எனது பயண நாள் வரும் என்ற மன ஓட்டத்தினை அதிகரித்தவண்ணமே .இருந்தது . ஒருவழியாக மாசி மாத இறுதிப்பகுதி எம்மை நெர…

வாடாமல்லிகை - குறுநாவல் -பாகம் 01.

Image
கார்த்திகை திங்கள் 2013 ஒரு நாள் மதிய வேளையில் அலுத்துக் களைத்து வீடு திரும்பும் பொழுது எனது மனம் வழமைக்கு மாறாக ஊரைச் சுற்றியே ஊசலாடிக் கொண்டிருந்தது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை .கடந்த மூன்று வருடங்களாக அரிதார முகங்களையும் , அவற்றால் வரும் ஓட்டில்லாத சிரிப்புகளையும் பார்த்துச் சலித்த எனக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்ற ஓர் எண்ணம் சடுதியாக என் மனதில் சடுகுடு விளையாடியதில் வியப்பு ஏதும் இல்லை . மனதில் எழுந்த எண்ணத்தை செயலாக்கும் முடிவில் வீடு வந்த நான் ,என் எண்ணத்தை பள்ளியறையில் மஞ்சத்தில் ஆற அமர இருக்கும்பொழுது எனது மனைவியிடம் பகிர்ந்தேன் . அவளும் எனது மன ஓட்டத்தில் இருந்தாளோ என்னவோ எனது எண்ணத்துக்கு பச்சைக்கொடி காட்டினாள் . இருவரும் ஒன்றிணைந்து வருடாந்த விடுமுறையை நாம் வேலைசெய்யும் இடத்தில் கொடுக்கும் முடிவிற்கு வந்த பொழுது உடல் அலுப்பினால் தூக்கம் தானாகவே எம்மை அரவணைத்துக்கொண்டது .
நான் எமக்கான விடுமுறையை கொடுத்து விட்டு விமானப்பயணத்துக்கு வேண்டிய பதிவுகளை செய்ய கணணியை நோண்ட ஆரம்பித்தேன் .எனது வீக்கத்துக்கு எயார் சவுதியா என்முன்னே என்னை எடு என்று பிடித்தது .நான் அதிக நேரம் சவுதிஅர…

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

Image
41 எட்டி மரம் அல்லது காஞ்சிரை மரம் -The strychnine tree , nux vomica, poison nut, semen strychnos and quaker buttons - Strychnos nux-vomica. 
எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே கருதியவா றாமோ கருமம்-கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்ததேல் முற்பவத்திற் செய்த வினை.
எட்டி மரத்தின் பட்டை, காய், இலை முதலான அனைத்தும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. 'எட்டிக் கசப்பு' என்னும் வழக்கு இதன் சுவையை விளக்கப் போதுமானதாகும். எட்டிக்காயைக் 'காஞ்சிரங்காய்' என்று ஔவையார் குறிப்பிடுகிறார். வேண்டியனவற்றையெல்லாம் தரும் கற்பக மரம் உண்டாரைச் சாகச்செய்யும் காஞ்சிரங்காயை (எட்டுக்காயை)த் தந்தால் என்செய்வோம் எனக் குறிப்பிடுகிறார். வெள்ளாடு இந்தத் தழையை ஓரிரு வாய் கடிக்கும். அன்று அதன் பால் சற்றே கசக்கும். என்றாலும் அந்தப் பாலில் நச்சுத்தன்மை இல்லை. எட்டி மரத்தின் பாகங்களை நாட்டு மருந்துகளில் சேர்த்துகொள்வர்.
http://ta.wikipedia....wiki/எட்டி_மரம்
எட்டி மரம் தெய்வீக மூலிகைகளில் ஒன்றாகும். எட்டி மரம் ஒரு நடுத்தரமரம். எல்லா நிலங்களிலும் வளரக் கூடியது. இது எப்பொழுதும் பசுமையாக இருக்கும். இது ச…