Posts

Showing posts from May, 2014

வாடாமல்லிகை - குறுநாவல் பாகம் 09.

Image
பொட்டலங்களாக பிரிந்து இருந்த பயணிகள் தங்கள் இருக்கைகளுக்கு திரும்பினார்கள். எனது பார்வையில் இருந்து பரந்தன் மெதுவாக மறைய தொடங்கியது. தூரத்தே ஆனையிறவு வருவதற்கு சாட்சியாக உப்புக்கலந்த காற்று என் முகத்தில் அடித்தது. எமது வாழ்விலும் ஆனையிறவு பல திருப்பங்களை தந்த இடமாகும் . மாற்றங்கள் என்பதனை மாறும் களங்களே தீர்மானிக்கின்றன என்பது போல நாங்கள் எடுத்த வியூகங்களும் பல மாறும் களங்களை எடுத்து தந்தன. அதுவே பலர் எம்மீது உறக்கத்தை தொலைத்த ஒரு காலமும் இருந்தது .உறக்கத்தை தொலைத்தவர்கள் நிதானமாக உறக்கத்தில் இருந்து மீள , நாங்களோ வெற்றி தந்த மிதப்பில் மீள முடியாத உறக்கத்துக்கு சென்ற காலப் பிறழ்வும் இங்கேயே ஆரம்பித்தது. இரு பக்கமும் ஆழம் குறைந்த கடல் ஆணை கட்ட. அதன் நடுவே இருந்த ஏ 9 பாதையால் பஸ் விரைந்து சென்றது . கடலில் அங்காங்கே திட்டு திட்டுகளாக வெள்ளையாக உப்பு படர்ந்து கொண்டு இருந்தது. இடையில் இருந்த குட்டைகளில் ஒரு மீனாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தில் பல கொக்குகள் ஒற்றைக்காலில் கால் கடுக்க நின்று கொண்டு இருந்தன. அந்த வெளியில் இருந்த ஒரே ஒரு படை முகாமையும் தாண்டி அந்த பஸ் இயக்கச்சியை ஊடறுத்து கண்டி …

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் அறிவியல் - இறுதி பாகம்.

Image
01 மிகப்பழங்கால தமிழ் நாகரித்தை அறிய உதவும் நூல் எது ?
தொல்காப்பியம்.
02 சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன் யார் ?
விஷ்ணுகோபன்.
03 முறையான எழுத்து முறை எதில் உருவானது?
சுமேரிய நாகரீகம்.
04 சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?
கௌதமபுத்தர். 
05 கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?
15 பகுதிகள். 
00000000000000000000000
01 நந்திக்கலம்பகதின் பாட்டுடைத் தலைவன் யார் ?
3ஆம் நந்திவர்மன். 
02 தமிழின் மறுமலர்ச்சிக்காலம் எது ?
19 ஆம் நூற்றாண்டு. 
03 நூலகத்தின் மறு பெயர்கள் எவை ?
ஏடகம், சுவடியகம் ,பண்டாரம் .
04 தீக்கோழி மணிக்கு எத்தனை கிலோ மீற்றர் வேகத்தில் ஒடக்கூடியது? 
74 கி .மீ. 
05 எறும்புகளில் எத்தனை வகைகள் உள்ளன ?
14000 வகைகள். 
0000000000000000000000000000
01 குறுந் தொகையை யார்தொகுத்தார் ?
பூரிக்கோ.
02 இலக்கியத்தில் "கவரி வீசியகாவலன் " எனப் போற்றப்படும் மன்னன் யார்?
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.
03 ஒருவருக்கு "பிரச்னை " என்கின்றோம் .பிரச்சனை என்றால் என்ன வரைவிலக்கணம் ?
ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அ…

வாடாமல்லிகை - குறுநாவல் -பாகம் 08.

Image
அதிகாலை வேளை ஆகையால் அந்த பஸ்ஸில் குறைந்த அளவு பயணிகளே இருந்தனர். வவுனியா நகரில் மெதுவாக சென்ற பஸ் ஏ 9 பாதையில் நிலை எடுத்து வேகமாக வழுக்கத் தொடங்கியது. இதே பாதையால் மூன்று வருடங்களுக்கு முன்பு நான் பயணித்த பொழுது இந்தப் பாதை எனக்கு கற்காலத்தையே நினைவு படுத்தியது. இதற்காகவே நான் பல விசேடமான பயிற்சிகளையும் அப்பொழுது எடுக்க வேண்டி இருந்தது. அனால் இன்றோ இந்தப் பாதை யாரோ இட்ட பிச்சையில் "கார்ப்பெட்" என்ற புதுவித நகை அணிந்து தன்னை முத்தமிடும் வாகனச் சில்லுகளுக்கு சேதாரத்தை கொடுக்காது இலகுவாகவே அவைகளை உருளப்பண்ணியது. எனது கண்களில் இருந்து வவுனியா மெதுமெதுவாக மறையத் தொடங்கியது. கிராமங்களின் ஊடாகவும் பரந்த பசுமை போர்த்திய வயல் வெளிகளின் ஊடாகவும் இப்பொழுது பஸ் சீறிப்பாய்ந்தது. நான் முன்பு பார்த்த பொழுது யுத்தத்தின் கோரமான வடுக்களை சுமந்த எமது விளைநிலங்கள் எல்லாம் இன்று வெட்ட வெட்ட தழைக்கும் எமது ஒர்ம குணத்தினால் பச்சைப்பசேலென என் கண்முன்னே விரிந்து மறைந்து கொண்டிருந்தன. இடையிடையே சின்னஞ் சிறு பற்றை வயல்களை எரித்து விட்டதனால் வந்த வாசம் மூக்கைத் துளைத்தது. உழைப்பினால் வந்த அந்த …

வாடாமல்லிகை - குறுநாவல் பாகம் - 07 .

Image
இந்த உலகில் ஒரு இனத்தின் வாழ்வில் ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு மேலாக புகையிரதத்தையும் அதன் தண்டவாளங்களையும் புகையிரத நிலையங்களையும் காணமல் விட்டது என்றால் அது நாங்களாகத் தான் இருந்திருப்போம். நான் வவுனியா புகையிரத நிலையத்தில் இறங்கியபொழுது எதோ ஒரு இனம் புரியாத பரவசம் என் மனதில் ஓடியது. எல்லோருக்கும் புகையிரதமும் அதன் நிலையங்களும் ஒரு தரிப்பிடமாகவே இருக்கும். ஆனால் எங்களுக்கோ அவைகள் எல்லாம் இரத்தமும், நிணமும், அழுகைகளும் சோகங்களும் என்று மனதில் அழியா வடுக்களாகவே இருந்திருக்கின்றன . நாங்கள் எமது பயணப் பொதிகளை சரி பார்த்துக்கொண்டு நுழைவாயிலை நோக்கி நகர்ந்தோம். யாழ்தேவி மீண்டும் பளையை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது. அந்த இரவு நேரத்தில் வெக்கை தணிந்து புகையிரத நிலைய சுற்றாடல் குளுமையாக இருந்தது. எங்களுக்காக அத்தான் தனது காரில் வந்து காத்திருந்தார். எனது கண்கள் என்னை அறியாமல் அக்காவை தேடின. நேரம் பத்து மணியை தாண்டி கொண்டிருந்து. அத்தானின் கார் எங்களை ஏற்றிக்கொண்டு வீட்டை நோக்கி ஓடியது.
எங்களுக்காக இரண்டு அக்காக்களும் மருமகனும் வீட்டு வாசலில் காத்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் அந்த இரவை கு…

ஐடியா சின்னத்தம்பியர் - பத்தி .

Image
ஒரு ஊரிலை சின்னதம்பி எண்டு ஒரு பெரிய ஆள் இருந்தார் . அவரிட்டை இருக்கிற ஒரு குணம் என்னவெண்டால் தீராத பிரச்னை எல்லாத்தையும் தீர்க்கிறதிலை சின்னதம்பியர் தான் சிங்கன் . இப்பிடித்தான் ஒருநாள் ஒருதற்றை வீட்டு ஆட்டுக்குட்டி ஒண்டு விளையாட்டுதனமாய் தன்ரை தலையை ஒரு மண் குடத்துக்கை குடுத்துப்போட்டுது . எல்லாரும் அட்டுகுட்டியை மண் குடத்துக்குள்ளாலை எடுக்க ட்ரை பண்ணியும் எடுக்கேலாமல் போய் சின்னதம்பியரிட்டை போய் ஐடியா கேட்டினம். சின்னத்தம்பியர் எப்பவும் யானையிலை நேரை ஸ்பொட்டுக்கு போய் தான் ஐடியாக்களை குடுக்கிறது வழக்கம் . சின்னதம்பியரும் யானையிலை பிரச்னை நடந்த இடத்துக்கு போனார் . அவற்ரை கெட்டகாலம் அவர் வந்த யானை வீட்டு மதிலுக்குள்ளாலை போகேலாமல் போச்சுது . உடனை சின்னதம்பியர் கீழை இருந்த ஆக்களை பாத்து மதிலை உடைக்க சொல்லி சொன்னார் . இப்ப அவற்றை யானை வலு கிளீனாய் ஆட்டுக்குட்டி பிரச்னை பட்ட இடத்துக்கு போச்சுது. அங்கை ஆட்டுக்குட்டி மண் குடத்துக்கை தலையை குடுத்த வேதனையிலை கத்திது . சனம் சினதம்பியரை என்ன செய்யலாம் எண்டு ஐடியா கேட்டுதுகள் . அப்ப வலு விலாசமாய் சினதம்பியர் சொன்னார் , " ஆட்டுக்குடியின்ரை…