ஐடியா சின்னத்தம்பியர் - பத்தி .
ஒரு ஊரிலை சின்னதம்பி எண்டு ஒரு பெரிய ஆள் இருந்தார் . அவரிட்டை இருக்கிற ஒரு குணம் என்னவெண்டால் தீராத பிரச்னை எல்லாத்தையும் தீர்க்கிறதிலை சின்னதம்பியர் தான் சிங்கன் . இப்பிடித்தான் ஒருநாள் ஒருதற்றை வீட்டு ஆட்டுக்குட்டி ஒண்டு விளையாட்டுதனமாய் தன்ரை தலையை ஒரு மண் குடத்துக்கை குடுத்துப்போட்டுது . எல்லாரும் அட்டுகுட்டியை மண் குடத்துக்குள்ளாலை எடுக்க ட்ரை பண்ணியும் எடுக்கேலாமல் போய் சின்னதம்பியரிட்டை போய் ஐடியா கேட்டினம். சின்னத்தம்பியர் எப்பவும் யானையிலை நேரை ஸ்பொட்டுக்கு போய் தான் ஐடியாக்களை குடுக்கிறது வழக்கம் . சின்னதம்பியரும் யானையிலை பிரச்னை நடந்த இடத்துக்கு போனார் . அவற்ரை கெட்டகாலம் அவர் வந்த யானை வீட்டு மதிலுக்குள்ளாலை போகேலாமல் போச்சுது . உடனை சின்னதம்பியர் கீழை இருந்த ஆக்களை பாத்து மதிலை உடைக்க சொல்லி சொன்னார் . இப்ப அவற்றை யானை வலு கிளீனாய் ஆட்டுக்குட்டி பிரச்னை பட்ட இடத்துக்கு போச்சுது. அங்கை ஆட்டுக்குட்டி மண் குடத்துக்கை தலையை குடுத்த வேதனையிலை கத்திது . சனம் சினதம்பியரை என்ன செய்யலாம் எண்டு ஐடியா கேட்டுதுகள் . அப்ப வலு விலாசமாய் சினதம்பியர் சொன்னார் , " ஆட்டுக்குடியின்ரை தலையை வெட்டுங்கோ " எண்டு . சனமும் வெட்ட மண் குடமும் அட்டுகுட்டியின்ரை தலையும் தரையிலை விழுந்திது . ஐடியா கேட்ட சனம் குழம்பீட்டுதுகள். " இப்ப மண்குடத்தை எப்பிடி சின்னத்தம்பியர் குட்டியின்ரை தலையிலை இருந்து எடுக்கிறது "?? எண்டு சனம் கேக்க சின்னதம்பியர் பேந்தும் எடுப்புசாய்ப்பாய் சொன்னார் , " மண் குடத்தை உடைச்சு விடுங்கோடாப்பா " எண்டு . இது எப்பிடி இருக்கு ..........................

0000000000000000000000

நான் படிச்சு கொண்டிருக்கிற சோபா சக்தியின் " பஞ்சத்துக்கு புலி " எண்ட கதையிலை வந்த ஒரு பகுதி . அதை என்ரை வசன நடயிலை மாத்தியிருக்கிறன் .


கோமகன்
2 comments

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.