Posts

Showing posts from August, 2014

வாடாமல்லிகை - குறுநாவல் - பாகம் 13.

Image
எங்களை தபால்பெட்டி இறக்கத்தில் இறக்கிவிட்டு இ போ சா பருத்தித்துறையை நோக்கி நகர்ந்தது. மாலை நேரம் நெருங்கியதால் வெய்யிலின் கொடுமை தணிந்திருந்தது. நான் வீட்டினுள் நுழைந்ததும் நேரடியாக கிணற்றடிக்கு சென்றேன். அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் இருந்த நீரை அள்ளி அள்ளி உடலில் ஊற்றினேன். உடம்பில் ஒட்டியிருந்த புழுதியும் வியர்வைப் பிசுபிசுப்பும் ஒரேசேர சவர்க்கார நுரையில் கறுப்பாகக் கரைந்தன. குளிர்ந்த நீர் உடலில் பட்டதும் உடலும் மனமும் ஒரேசேரப் புத்துணர்வாயின. மனைவி தந்த தேநீரை எடுத்துக்கொண்டு முற்றத்து மாமர நிழலில் அமர்ந்துகொண்டேன். மாமரத்தில் புலுனிகள் கலகலத்துக் கொண்டிருந்ததன. தூரத்தே இருந்து வந்த ஒற்றைக்குயிலின் கூவலில் என்மனதைப்போலவே ஒருவித சோகம் இழையோடியிருந்ததது. வானம் மீண்டும் சிவக்கத் தொடங்கியிருந்தது.ஒழுங்கையினால் மேச்சலுக்குப் போன மாடுகள் பட்டிக்குத் திரும்பிக்கொண்டிருந்தன. பிள்ளையார் தனக்கு பின்னேரப்பூசை ஆரம்பமாகப் போவதை கோயில் மணிமூலம் சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு ஏனோ பிள்ளையாரிடம் போய் குசலம் விசாரிக்கத் தோன்றவில்லை. தனது தம்பிக்காக ஒரு பெண்ணிடம் தூது சென்ற இந்தப் பிள்ளையார் இங்கிரு…

மனமே மலர்க - மெய்யியல் - பாகம் 20.

Image
அவரவர் பாடு அவரவர்க்கு.
ஒரு பூனை ஒரு நாயிடம் சொன்னது,''நண்பா,நீ முழு மனதுடன் இறைவனை பிரார்த்தனை செய்.தொடர்ந்து நீ அவ்வாறு செய்தால் ஒரு நான் இறைவன் உனக்கு அருள் புரிவார்.இதில் சந்தேகத்திற்கே இடமில்லை.இறைவனின் அருட்பார்வை உன் மீது பட்டுவிட்டால் போதும்.வானிலிருந்து எலிகள் மழையாய்ப் பொழியும்.நீ விரும்பும் அளவுக்கு அள்ளியள்ளி உண்ணலாம். ''இதைக் கேட்ட நாய்,விழுந்து விழுந்து சிரித்தது.அது பூனையிடம் சொன்னது, ''ஏ,முட்டாள் பூனையே,எனக்கு ஒன்றும் தெரியாது என்று முடிவு செய்து விட்டாயா?என் வீட்டிலும் பெரியவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் என்னிடம் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்கள்,'மனம் உருகிப் பிரார்த்தனை செய்தால் எலி மழை பொழியாது,எலும்பு மழை தான் பொழியும்.அதை நாம் ஆசை தீரக் கடித்துத் தின்று மகிழலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.''
கொல்லு அவனை....
ரோமாபுரியில் சீசர் வஞ்சகர்களால் கொல்லப்பட்டார்.எங்கு பார்த்தாலும் ஒரே கலவரம்.சீசர் கொலைக்கு உடந்தையானவர்கள் என்று யார் மீது சந்தேகம் வந்தாலும் அவர்கள் தாக்கப்பட்டனர்.சீசரின் ஆதரவாளர்கள் கும்பல் கும்பலாய் வெறியோடு அலைந்தனர்.அப…

அவர்கள் அப்படிதான் - சிறுகதை - கோமகன்.

Image
1985 ஆம் வருடம் அதிகாலை இருபாலை சோம்பலுடன் விழித்துக்கொண்டிருந்தது. கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அருகே இருந்த அந்த முகாமும் சோம்பலுடன் இயங்கிக் கொண்டிருக்க உறுமலுடன் நுழைந்து கிரீச் என்ற ஒலியுடன் நின்றது இளம்பிறையன் வந்த டட்சன் பிக்கப். பிராந்தியப் பொறுப்பாளரின் தீடீர் வருகையால் முகாம் பொறுப்பாளன் சிவா உட்பட எல்லோருமே பரபரப்பானார்கள். அவர்களின் பரபரப்பை இளம்பிறையன் உள்ளர ரசித்தாலும் அதை வெளிக்காட்டாது விறைப்பாக முகாமின் உள்ளே நுழைந்தான். இளம்பிறையன் அந்த முகாமின் ஹோலில் இருந்த மேசையில் இருந்து முகாமின் தினக்குறிப்பேட்டை படித்துக்கொண்டிருந்தான். அவனுக்காக தயாரித்த தேநீரை நடுக்கத்துடன் கொண்டு வைத்தான் ஒரு போராளி. அவனைப் பார்த்துப் புன்னகை ஒன்றை தவழ விட்டபடியே தேநீரை எடுத்துக்கொண்டான் இளம்பிறையன்.
வெளிநாடு சென்றிருந்த ஒரு குடும்பத்தின் இரட்டை மாடி வீடு ஒன்று அவர்களின் முகாமாக மாறியிருந்தது.அந்த இரட்டை மாடி வீடு விஸ்தாரமாக பல அறைகளுடன் இவர்களுக்கு வசதியாகவே இருந்தது. முகாமின் நுழைவாயிலிலும் பின்பக்கமாகவும் மண் மூட்டைகள் அடுக்கி சென்றிப் பொயின்ருகள் இருந்தன. அந்த சென்றியில் ஆள்ம…