Posts

Showing posts from September, 2014

புலம்பெயர் நாடுகளில் குடும்ப வன்மூறை - பத்தி.

Image
இந்த பெண்கள் எப்பொழுதும் சொல்கின்ற ஓர் சுலபமான சொல்லாடல் ஆணாதிக்கம். ஆனால் இவர்கள் பெண்ணாதிக்கங்களை இருட்டடிப்பு செய்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள். ஆம்பிளையானவன் என்ன காரணத்துக்காக 2-3 வேலைகள் செய்கின்றான் ?? அவனுக்கென்ன வயித்து வலியா ?? இத்தினை பவுணிலை தாலிக்கொடியும்( கலியாணத்திலை கட்டினதை திருப்பி செய்ய ), பவியோன் வீடும் (தனி வீடு வளவுடன் கூடியது ) , பீ எம் டபிள்யூ காரும் , அவனா கேக்கிறான்?? இந்தப் பெண்மணிகள் தங்கள் இனிஷல் பிரச்சனைக்காக இங்கிருந்து கொண்டு தாயகத்தில் இருந்து மாப்பிள்ளை எடுத்து கலியாணம் கட்டுகின்றார்கள். அவனுக்குரிய மரியாதையை அவர்கள் கொடுக்கிறார்களா என்றால் அதன் விடை துயரமானது அவனை செல்லப்பிராணி போலத்தான் அவர்கள் பார்கின்றார்கள் . இதன் மூலம் இந்தப் பெண்மணிகள் மறைமுகமாக உணர்த்தும் செய்தி என்னவென்றால், புலத்தில் உனக்கு நான்தான் வாழ்வு கொடுத்தேன் என்பதே. ( இதுவும் ஒருவகையான உளவியல் வன்முறையே) இதற்கு பல உதாரணங்களை என்னால் தரமுடியும் அனால் சம்பந்தப்பட்டவர்களின் கௌரவப் பிரச்னை என்ற ஒன்று உள்ளது. பிரச்சனைகள் என்று வரும் பொழுது இந்தப் பெண்மணிகள் நடுநிலைமையுடன் சொல்வதில்லை …

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு - பத்தி.

Image
நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? "கோமகா... அவதானமாய் நடந்துக்கோ ராசா" எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் "அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்" எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன்.
நான் காத்தாலை மூண்டு மணிக்…

வாடாமல்லிகை - குறுநாவல் - பாகம் 14.

Image
அந்தகாலை வேளையிலேயே வெய்யில் முகத்தில் பட்டு தன் குணத்தைக் காட்டியது. வியர்வையை அவ்வப்பொழுது கண்டு வந்த எனக்கு இந்த வெய்யிலும் அதனால் வரும் வியர்வையும் நன்றாகவே பிடித்துக்கொண்டது .சூரியக்கண்ணாடியை அணிந்து கொண்டு அருகே இருந்த மரத்தின் கீழே ஒதுங்கிக் கொண்டேன். ஊரையே கொழுத்திய எறிகணைகளின் நடுவே இந்த மரங்கள் சில தப்பிப் பிழைத்தது அதிசயம்தான். துரத்தே 751 பஸ் வருவது தெரிந்தது .என்னருகே வந்து பஸ் என்னையும் ஏற்றிக்கொண்டது . பஸ்ஸில் அதிகம் கூட்டம் இருக்கவில்லை . நான் இடம் பார்க்க வசதியாக முன்பக்கத்தில் ஜன்னல் ஓரமாக இருந்து கொண்டேன். பஸ்ஸில் இப்பொழுது வேலைக்கு செல்லும் ஆட்கள் ஏறத்தொடங்கினார்கள் . பஸ் கப்பல் கட்டும் தொழிற்சாலையை கடந்து சென்று, நாவலடி சந்தியில் வியாபாரி மூலைப்பக்கமாக திரும்பியது.
வியாபாரி மூலை காணுமிடமெல்லாம் பச்சைகளைப் போர்த்தி செழிப்பாகவே இருந்தது. புகையிலையும், வெங்காயமும், வாழைகளும் போட்டி போட்டு அந்த மண்ணை நிரவியிருந்தன. சிறிது நேர ஓட்டத்தின் பின்பு கடற்கரை சாலையில் திரும்பிய பஸ் இன்பிருட்டியினூடாக வேகமெடுத்தது. கடற்கரை காற்று உப்புக்கமறலுடன் என் முகத்தில் வீசியது. இன்பிருட…

கிளி அம்மான் - சிறுகதை - கோமகன்.

Image
இன்று எனக்கு விடுமுறை நாள் என்ற பொழுதும் நித்திரை என்வசப்படவில்லை.இன்று கிளி அண்ணையின் நினைவு நாள் என்பதால் அவரின் நினைவுகளே என்மனமெங்கும் நிரம்பியிருந்தன. நான் அதிகாலையிலேயே எழுந்து விட்டிருந்தேன்.என் மனைவி இன்னும் எழுந்திருக்கவில்லை.வேலைக்கு செல்லும் அவளை நான் குழப்ப விரும்பவில்லை.நான் எழும்பியவுடன் முதல் வேலையாக குளித்துவிட்டு ஓர் சாம்பிராணிக்குச்சியை கிளி அண்ணையின் படத்துக்கு முன்னால் கொழுத்தி வைத்து விட்டு அவரின் முகத்தை தொடர்ந்து பார்க்க திராணியற்றவனாக எனக்கான தேநீரைத் தயாரித்துக்கொண்டு பல்கணிக்கு வந்தேன்.பல்கணியின் முன்னே இருந்த மரங்கள் யாவும் பச்சையத்தை தொலைத்து உறைந்து போய் இருந்தன.குளிர் எலும்பை சில்லிட வைத்தது.கீழே தரையில் பனி மூடி வெண்மையாக இருந்தது.நேர் எதிரே இரண்டு மாடிக்கோபுரங்களுக்கு இடையில் முழு நிலவு அப்பளமாக வானில் பரவியிருந்தது. சாதாரணமாக இந்தக் காட்சிகளில் நேரக்கணக்காக மயங்கி நின்று இருக்கின்றேன்.ஆனால் இன்று கிளி அண்ணையின் நினைவுகள் என் மனதை வலிக்கச்செய்தன.எனது கைகள் தன்னிச்சையாக சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்தன.
0000000000000
ஏறத்தாழ இருபத்து நான்கு வருடங்களுக்கு …

நானும் என்ரை வாத்திமாரும் - பத்தி .

Image
பிள்ளையள் வணக்கம். எல்லாரும் இண்டைக்கு ஆசிரியர் தினம் எண்டும் , அதுக்கு தங்களை படிப்பிச்ச வாத்திமாரை வாழ்த்த வேணும் எண்டும், இண்டைக்கு ஒரு மார்க்கமாய் கறணமடிச்சு வாழ்த்துறாங்கள். எனக்கு உதுகளிலை சொட்டுக்கும் விருப்பமில்லை கண்டியளோ . ஏனெண்டால் நாங்கள் படிக்கிற காலத்திலை வாத்திமாருக்கு எப்பிடி, எந்த றேஞ்சிலை ஆப்படிக்கலாம் எண்டு யோசிச்சு மண்டை காஞ்சு போவம்; முக்கியமாய் சைக்கிள் சில்லு காத்தை கழட்டி விடுறது, குண்டூசியாலை குத்துறது, சிலநேரம் இருட்டடி குடுக்கிறது, நல்ல வடிவான பட்டங்கள் வைச்சு மல்ரிபறல் அற்ராக் செய்து அவை உரு ஏறி கலைக்க நாங்கள் ஓடிறது, எண்டு செய்யாத அனியாயங்கள் எல்லாம் செய்தம். நெஞ்சிலை கையை வைச்சு சொல்லுங்கோ........ உண்மைதானே?? அனால் அவையளும் லேசுப்பட்ட ஆக்களில்லை. காத்தாலை தோட்டத்துக்கு தண்ணி மாறிப்போட்டு வீட்டிலை மனுசிமாரோடை றாட்டுப்பட்டுப்போட்டு பள்ளிகூடம் வந்து வகுப்பிலை எங்களோடைதான் டிக்கி புளிக்க அடிக்கிறது. பெட்டையளுக்கு முன்னாலை நக்ஸ் நையாண்டி செய்யிறது. மனுசிமாற்றை கோபத்தை மேசைக்கு கீழை குனிய விட்டு துவரங்கம்பாலை விளாசிறது எண்டு அவையளும் கேம் கேக்கேக்கை, நாங்களும்…