Posts

Showing posts from October, 2014

வாடாமல்லிகை - குறுநாவல் -பாகம் 15

Image
அந்த அதிகாலை வேளை பருத்தித்துறை பஸ்நிலையம் பல சோலிகளை கொண்ட மக்களால் திணறியது .வவுனியா செல்லும் பஸ் புறப்பட நேரம் இருந்ததால் பஸ் சனங்களின்றி வெறுமையாக இருந்தது நான் வழக்கமாக செல்லும் தேநீர்கடையினுள் நுழைந்து ஓர் வடையையும் தேநீரையும் எடுத்துக்கொண்டு கடைவாசலில் நின்று தேநீரை அருந்தியவாறே பஸ்நிலையத்தை வேடிக்கை பார்க்கத்தொடங்கினேன். ஐரோப்பாவின் இறுகிய வாழ்க்கை சூழலும் தலைதெறித்த பரபரப்பும் இல்லாத இந்த சூழல் என்னை கொள்ளை கொண்டது. இருந்தால் போல் என் மனதோ உன்னால் இங்கு தொடர்ந்து இருக்க முடியுமா?? நீ இந்த விடயத்தில் நடிக்கின்றாய்தானே?? என்று என்னை நக்கலாக கேட்டது. மனதுடன் பேச எனக்கு ஓர் சிகரட் தேவைப்பட்டது. கடையின் பின்னால் போய் அதில் இருந்த மா மரத்து நிழலில் நின்று கொண்டு சிகரட்டை பற்ற வைத்தேன் . என்மனமோ பதிலுக்கு காத்திதிருந்தது. சிகரட் புகையை ஆழமாக இழுத்து பின் பிடரி முழுவதும் தடவி மூக்கால் வெளிவிட்டுக்கொண்டே நான் மனத்திடம் பேச ஆரம்பித்தேன்." இங்கிருந்து புலம் பெயர்ந்தவர்கள் பெரும்பாலனவர்கள் காசை தேடவே போனார்கள். அப்படி போன இடத்தில் காசை தேட வசதிகள் வந்தது.அவர்கள் அதில் சுகம் கண்டார்க…

பாண் - சிறுகதை - கோமகன்.

Image
பெயர் : நரேன். தொழில் : பாண் போடுவது. தகுதி : இலங்கை அகதி . தந்தை பெயர் :வல்லிபுரம் . தொழில் :பாண்போடுவது. உபதொழில் :கள்ளு அடிப்பது .

0000000000000000000000000000
1997 ஆம் ஆண்டின் நடுப்பகுதி ஒன்றில் பிரான்சின் புறநகர் பகுதி ஒன் று காலை விடியலின் ஆரம்பத்தைக் காணத் தயாராகிக்கொண்டிருந்தது. வசந்த காலத்தின் மொக்கவிழ்க்கும் காலமாகையால் அந்த தொடர்மாடிக்குடியிருப்பின் முன்பு நின்றிருந்த அனைத்து மரங்களும் தங்கள் தவம் கலைந்து தங்களை பச்சை பூசி அலங்கரிக்கத் தொடங்கியிருந்தன. அவற்றின் மேலே இருந்த குருவிகள் வெளிச்சத்தைக் கண்ட சந்தோசத்தில் கிலுமுலு கிலுமுலு என்று துள்ளித்துள்ளி சத்தம் இட்டுக்கொண்டிருந்ததன. தூரத்தே தெரிந்த புகைபோக்கியினூடாக அந்த அதிகாலை குளிரைப் போக்க எரிந்த நெருப்பின் புகை வந்துகொண்டிருந்தது. நரேன் அந்த அதிகாலையின் பிறப்பை அணுவணுவாக அனுபவித்து தேநீர் அருந்திகொண்டிருந்தான். அவன் இரவு செய்த வேலையால் கண்முழித்ததால் கண்கள் சிவந்து இருந்தன. காலை வேலையால் வந்தவுடன் தனது அம்மா மீனாட்சிக்கு போன் பண்ணியிருந்தான். நரேனுக்கு கிழமையில் ஒருமுறையாவது அம்மாவுடன் கதைக்காது போனால் விசரே பிடித்து வி…

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் - பத்தி - பாகம் 06.

Image
இண்டைக்கு விடிய காத்தாலை புஸ்பமாய் குளிச்சு நெத்தி முட்ட திருநூத்தை அள்ளி பூசிகொண்டு ஒரு சாம்பிராணி குச்சியும் கொழுத்திப்போட்டு கொம்பியூட்டரை திறந்து அதிலை சுப்பிரபாத்தை மெதுவாய் போட்டுக்கொண்டு ( இங்கையும் பக்தி கமழ வேணுமாம் ) பேப்பருகளிலை பூராயம் பாக்கத் தொடங்கினன். எல்லா பேப்பருகளும் ஒரு உழுந்தை வித்தியாசம் வித்தியாசமாய் அரைச்சு பலகாரம் பலகாரமாய் சுடுறாங்கள்.ஆனால் பாருங்கோ பலகாரத்துக்கு உப்பு புளி காணுமோ எண்டு ஒருத்தரும் வாயை திறக்கிறாங்கள் இல்லை.இண்டைக்கு சுறுக்கர் என்ன குளிரிலை பினாத்திறார் எண்டு எல்லாரும் கொடுப்புக்குள்ளை சிரிக்கிறது விளங்காமல் இல்லை. உதுகளுக்கெல்லாம் இந்த சுறுக்கர் மசியிற ஆள் இல்லை கண்டியளோ.
நாலு வரியத்துக்கு பிறகு ஐரோப்பிய நீதிமானுகள் புலியளின்ரை தடையை நீக்கி இருக்கினமாம் எண்டது தான் இண்டையான் ஹொற் ரொப்பிக் கண்டியளோ. இந்த நீதிமானுகள் தான் கிட்ட முட்ட ஏழு வரியத்துக்கு முன்னாலை சனமெல்லாம் றோட்டிலை நிண்டு குழற கையை கட்டிக்கொண்டு பாத்துக்கொண்டு நிண்ட கோஸ்ரியள். ஒரு தமிழனாய் பிறந்த குற்றதுக்காய் டெய்லி சனங்களை வகைதொகையாய் போட்டுத்தள்ள அதிலை குளிர் காஞ்ச கனவானுகள்…

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் - பத்தி - பாகம் 05.

Image
வணக்கம் பிள்ளையள் கனகாலத்துக்கு பிறகு சுறுக்கன் வந்திருக்கிறன். இண்டைக்கு இருபத்தி நாலு வாரியத்துக்கு பிறகு யாழ்ப்பாணத்துக்கு யாழ்தேவி வந்துட்டுது எண்டு சனங்களும், இணையங்களும் ஒரே அல்லோலகல்லோலம். பாக்க பம்பலாய் இருக்கு. ஆனால் பாருங்கோ எனக்கு கொஞ்சம் டவுட்டுகள் மண்டையுக்கை டண்டணக்கா ஆடுது கண்டியளோ. அது என்னெண்டால் உண்மையிலை யாழ்ப்பாணம் சுதந்திர மண்ணாய் கிடக்கா எண்டு. இப்ப பாருங்கோ பாதுகாப்பு வலையங்கள் முழுக்க எடுபடேலை . நிழல் இராணுவ கெடுபெடியள் இன்னம் போகேலை .

இப்பவும் மகிந்தர் வாற ரெண்டு நாளைக்கும் வெளி சனங்கள் எம் ஒ டி பாஸ் எடுக்கவேணும் எண்டு படிச்சன் . இன்னும் புலிவாசம் மணக்குதோ எண்டு மூக்கை நீட்டி கொண்டு திரியிறாங்கள் . ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலை கண்ணாய் இருக்கவேணும் எண்டமாதிரி , கிளிநொச்சியிலை நாடுகடந்த அரசாங்கம் வந்ததாய் மகிந்தர் கடுப்படிசிருக்கிறார் ( அடுத்த லிஸ்ட் றெடி ). இந்த பயங்கராவாத தடை சட்டம் என்னம் ரோட்டலாய் எடுபடேலை. அதோடை கொழும்புவாழ் டமில்சை குழுத்திப்படுத்த கல்கிசையிலை இருந்து யாழ்தேவி டிரக்ட்டாய் யாழ்ப்பாணம் வருகுது எண்ட நியூசையும் படிச்சன். உண்மையிலை எனக்கு …

சுவைத்(தேன்) - கவிதைகள் -பாகம் 01.

Image
01 மரபுவழிபட்ட இயல்புகள்சரித்திர ஆசிரியர்களின் பதிவுகளிலோ
குறிசொல்வான் எதிர்வு கூறலிலோ
அவர்களைப் பற்றிய தகவல் இல்லை .
வேத நூல்கள் -
அழிவுகால ஆதரங்களுள் ஒன்றாய்
அக்கூட்டத்தவரின் வருகை பற்றி எச்சரித்திருக்கவும்மில்லை

செவ்வரியோடிய கனத்த அவர்தம் கண்களில்
மதுவின் நெடியிருந்தது
ஆயுதந்தரித்த கைகளின் இரேகைகள் மறைந்து
இரத்தக்கறை படிந்திற்று .
பிறழ்ந்த பாலுறவுகள் பற்றியும்
பெண்களின் பிறப்புறுப்பைச் சுட்டுவதுமாயுமிருந்த
அவர்களின் பேச்சுமொழிக் கொச்சை
எந்த நாகரீகத்திலும் புழங்கியதாய் இல்லை .

அவர்கள் முதலடி வைத்தபோது :
ஈரம் உலர்ந்த வேர்கள் நாவை நீட்டியபடி பூமிக்கு
வெளியாகி அலைந்தன .
அடுத்ததிற்கு -இலைகள் மஞ்சள்பாரித்து
இருளில் தடுமாறின .

சில்லூறுகளுக்குப் பேச்சு நின்றுபோயிற்று.
வானம் நடுங்கி - வெள்ளிகளை தவறவிட்டது
பொழுதின் வெண் இழைகள் எரிந்து கறுப்பு மீய
ஆயுள்ளுக்குமாய் சூழ்ந்திற்று இருள் .

பிள்ளைகளுக்குப் -
படுக்கையில் சிறுநீர்கழிக்கப் பழக்கிய அவர்கள் :
இன்னும் ஏழேழு தலைமுறைக்கும்
தூக்கத்தை மிரட்டப் போதுமானதாயிருந்த
தடயங்களைப் பதிந்துவிட்டு ஓசைப்படாது
அழுது தேம்பிக்கொண்டிருந்த குழந்தைகளின்
அகல விரித்த மிரண்ட விழிகளுக்குள்
இறங…