Posts

Showing posts from February, 2015

என் பார்வையில் ஃ -ஆயுத எழுத்து - வாசிப்பு அனுபவம்.

Image
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை. அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ??? என்று ஓர் கேள்வியை நான் எழுதிய " சின்னாட்டி " என்ற சிறுகதையில் எழுப்பியிருந்தேன். நாங்கள் எப்பொழுதுமே உண்மையைவிடக்  கற்பனையில்  மிகுந்த ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கின்றோம் . உண்மையைவிடப் பொய்தான்  மிகவும்  உண்மையாகத் எங்களுக்குத் தெரிகிறது. கற்பனைகள் என்றுமே  பலவகைகளில்  எங்களுக்கு திருப்தியைக் கொடுக்கின்றன .எங்களுடைய கற்பனைகள்  எங்கள் அகங்காரத்திற்கு  திருப்தியை  அளித்துக் கொண்டிருகின்றது. இன்றைய இலக்கிய  வெளியில் பெரும்பாலானவர்கள் உண்மைகளை பேசாது விடுகின்றனர். உண்மை பேசுவோர் பேசுவது உண்மை என்று தெரிந்திரிந்தும், இந்தப் பெரும்பாலானவர்கள் வெறும் கற்பனை வடிவங்களுக்கே   முண்டு கொடுக்கின்றனர் . இவர்கள் உண்மைகளைப் பேசுவோரை கள்ளத்தனமாக ரசித்து அவர்களை  ஓர் செப்படிவித்தைக்காரர்கள் போல் பார்க்கின்றார்கள். ஆனால் உண்மை பேசுவோரை ஓர் பேசுபொருளாக இவர்கள் அங்கீகாரம் கொடுக்கத்தயாரில்லை. இந்த உண்மைகள் பேசுவோரை பெரும்பாலானவர்கள் இழிசனங்களாக, தீட்டுப்பட்டோராக கருதுகின்ற வேளையில், பிரான்ஸ…

சொக்கப்பானை - சிறுகதை - கோமகன்.

Image
காலம் 1987. எமது தாயகத்து காற்று வெளியிலும் , வயல் வரப்புகளிலும், வீதிகளிலும், ஒழுங்கைகளிலும் எமது சனங்களின் கதறலின் கண்ணீரை துடைத்து சமாதானம் பேசுகின்றேன் என்று வந்த சமாதானப்புறாக்கள் தங்கள் முகங்களை மாற்றி ஆயுததாரிகளான ஓர் இரவின் இருட்டும் காலம் பிந்திய கார்த்திகை மாதத்து பனிப்புகாரும் அந்த ஊரில் மண்டியிருக்க. அவைகளை விரட்டும் பணியை கதிரவன் எடுத்துக்கொண்டிருந்தான். அது அவ்வளவு சுலபமாக அவனுக்கு இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவனது கையே ஓங்கியிருந்தது. படுதோல்வியை தழுவிய இருட்டும்மண்டியிருந்த பனிப்புகாரும் மெதுமெதுவாக அவனிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டிருந்தன. ராமசாமிக்குருக்களின் வீட்டு மா மரத்தில் குடியிருந்த பக்கத்து வீட்டு சேவல் ஒன்று தனது முதல் கூவலை ஓங்கி ஒலித்தது. அதனைத் தொடர்ந்து அந்த ஊரில் இருந்த சேவல்கள் முறைவைத்து தங்கள் கூவலை தொடங்கிக்கொண்டிருந்தன. தூரத்தே கிழக்கில் வானமகள், கதிரவன் அவள் மீது கொண்ட காதலினால் தன் முகத்தை மெதுவாக சிவக்கத்தொடக்கினாள். அந்த முகத்திலே ஒரு கூட்டம் அந்நியப்பறவைகள் ஆரை வடிவில் சத்தமிட்டவாறே பறந்து சென்றன. ராமசாமி குருக்களின் வீட்டு பட்டியில் இருந்த …

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 07 ( ஒழிச்சு வை )

Image
ஹாய் பெடியள்ஸ்!!!!!!!!!! 
வந்த விசையத்தை சுறுக்காய் சொல்லிப்போட்டு போறன். நேற்று பொழுது போகாமல் இருந்ததாலை ஒருக்கால் லாச்சப்பல் பக்கம் தலையை காட்டினன். போனதுதான் போனம் எண்டு நான் வழக்கமாய் போற புத்தகக்கடைக்கு போய் கொஞ்சம் லோ எடுப்பம் எண்டு அங்கை போனன். கடைக்காற மாத்தையா நிண்டதாலை பலதும் பத்தும் பறைஞ்சு கொண்டு பம்பலாய் பொழுது போச்சுது. நான் மாதையாவோடை லோ எடுத்துக்கொண்டு வந்த புத்தகங்களை ஒரு லுக்கு விட்டு கொண்டு இருந்தன். அப்ப ஒரு பெடி வந்தான். ரெண்டு பேருக்கும் சுத்ததமிழிலை வணக்கம் சொல்லிப்போட்டு, "அண்ணை ஆயுத எழுத்து புத்தகம் இருக்கோ "?? எண்டான். என்ரை காது இதை கேட்டு கொஞ்சம் பொங்கீச்சுது. மாத்தையா , "உமக்கு ஆரையும் தெரியுமோ "? எண்டு ஒரு சேமணை கேள்வியை கேட்டார் .
வந்த பெடி உரு ஏறி "உங்களிட்டை இருக்கோ இல்லையோ?? இல்லாட்டில் நான் வேறை கடை பாக்கிறன் " எண்டு புத்தக அலுமாரியளை பாத்தான். அங்கை புத்தகத்தை காணேலை .வந்த பெடி திரும்பி போக என்ரை மாத்தையா " நில்லு தம்பி புத்தகம் கிடக்கு" எண்டு உள்ளுக்கை போய் ஒழிச்சு வைச்சிருந்த ஆயுத எழுத்து புத்தகத்தை எடுத்து…

மறைந்தான் ஈழத்தின் மாபெரும் கலைஞன்

Image
எனக்கும் வில்லிசை மன்னர் சின்னமணிக்கும் ஓர் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கின்றது சிறுவயதில் இவரின் வில்லிசையை முன்வரிசையில் இருந்து பார்த்திருக்கின்றேன் இவர் வில்லிசையில் கதை சொல்லும் பொழுது இவர் சிரித்தால் நான் சிரித்திருக்கின்றேன் , இவர் அழுதால் நானும் அழுதிருக்கின்றேன். இவர் கோவிக்கும் முகபாவம் வந்தால் நானும் கோவித்திருக்கின்றேன். இப்படி ஒரு அதிசயத்தை சிறுவயதில் கோயில் திருவிழா நிகழ்ச்சிகளில் இவரது வில்லிசை நடைபெறும் பொழுது உணர்ந்திருக்கின்றேன். இவரது வில்லிசை திறனுக்கு ஈழத்தில் யாருமே மாற்றீடாக இருக்கவில்லை. இவரது வில்லிசை ஈழத்தில் மட்டும் முடங்கி விடாது உலகில் தமிழர் செறிந்து வாழும் நகரங்களில் எல்லாம் ஓங்கி ஒலித்து இருக்கின்றது .
சின்னமணி என்று பலராலும் அழைக்கப்பட்ட இவரின் உண்மையான பெயர் க. நா. கணபதிப்பிள்ளை ஆகும். இவர் மார்ச் மாதம் 30 ஆம் திகதி 1936 ஆம் ஆண்டு பருத்தித்துறையில் மாதனை என்ற கிராமத்தில் பிறந்தார். சின்னமணி தனது ஆரம்பக்கல்வியை மாதனை மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும், உயர்தரக் கல்வியை ஏழாலை உயர்தரப் பாடசாலையிலும் கற்றுக் கொண்டார். இவர் வில்லிசைக்கலையில் மட்டுமல்லா…