Posts

Showing posts from April, 2015

மழைக்காலக் குறிப்புகள் - வாசிப்பு அனுபவம்.

Image
பட உதவி : கருணாகரன் 
மழைக்காலம் என்பது ஓர் சமூகத்தின் வசந்தகாலம். இந்த மழைக்காலத்திலேயே ஓர் சமூகம் தமது இருத்தலுக்கு வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்யும். விவசாய நிலங்கள் மழையினால் மீண்டும் எழுச்சி பெறும். மாந்தர்களிடையே காதல், காமம், ஊடல், கூடல், இனப்பெருக்கம் என்று உச்சம் பெறும் காலமே மழைக்காலம். அதுவும் கோடை வெய்யில் காலத்தில் வெக்கை வாட்டி எடுக்க, திடீரென வானம் கருமையாகி சிறிய துளிகளாகத் தொடங்கி சோவென்று மழைத்துளிகள் நிலத்தை அணைக்கும் அடைமழையை யாருமே விரும்பாமல் இருக்க மாட்டார்கள். மழையின் ஆரம்பத்தில் மூக்கை அடைக்கும் புழுதிவாசமும், மழை விட்டதன் பின்னர் வரும் தவளைகளின் ஒலியும், ஈசல்களின் படையெடுப்பும், நுளம்புக்கு போடும் வேப்பங்கொட்டைப் புகையும், நிலத்திலே வெள்ளம் வடிந்து அந்த ஈரலிப்பான மண்ணில் நெளியும் சரக்கட்டைகளும், நாக்கிளிப் புழுக்களும், கம்பளிப் பூச்சிகழும், என்று கோடை காலத்தின் இறுதி பகுதிகளில் இந்த உணர்வுகள் அத்தனையையுமே கொண்டு வரும் மழைக்காலத்தை யாருமே விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட ஓர் மழைக்கால வேளையொன்றில் வேலணையூர் தாஸ் எழுதிய "மழைக்காலக் குற…

கருத்துச்சுதந்திரம் ( Freedom of speech, liberté d'expression ) - பத்தி.

Image
நகரின் மத்தியில் ஓர் பிரபல்யமான சீன உணவகம் இருந்தது. அதன் சிறப்பம்சம் என்னவென்றால் உடனுக்குடன் உயிர் மீனை பிடித்து வெட்டி விதம் விதமான மீன் கறிகளை நாவுக்கு ருசியாக அதன் தலைமை சமையல்காறர் செய்து கொடுப்பார். இதனால் எப்பொழுதும் அந்த சீன உணவகத்தில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதும். அந்த சீன உணவகத்தில் அழகான ஓர் பெரிய விசாலமான மீன் தொட்டி இருந்தது. அதில் பலவகையான மீன்கள் தங்களுக்குள் கதைத்தும் பேசியும் மகிழ்வாக ஓடித்திரிந்தன. அந்த மீன்களுக்கு இந்த உலகமானது மிக மிகப்பிரமாண்டமானது என்றதோர் மிகப்பெரிய எண்ணம் இருந்தது. 
அதில் இருந்த ஓர் மீன் வடிவாக மீன் தொட்டியை சுற்றி விட்டு வந்து மற்ற நண்பர்களுக்கு சொன்னது, "நீங்கள் எண்ணுவது பிழை. இந்த மீன்தொட்டிதான் எங்கள் உலகம். இடையில் ஓர் கண்ணாடி இருக்கின்றது" என்று சொன்னது. மீனின் இந்தப் பதிலால் சில மீன்கள் கடும் கோபமுற்று அந்த மீனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கின அந்த மீனும் மனம் தளராமல் " நண்பர்களே நீங்களும் ஒருமுறை நான் சொன்னதை பரிசோதனை செய்துபாருங்கள் அப்பொழுது நான் சொன்னதன் உண்மை தெரியும்" என்று சொன்னது. அந்த நேரம் மீன் தொட்டிக்கு வ…

சுவைத்(தேன்) - கவிதைகள் - பாகம் 03.

Image
01  பூவால் குருவி

நெஞ்சுக்குள் தொலையாதிருந்து
ஒரு சிற்றாறாய் ஊருகின்ற
என் முதல் காதல் பெட்டை
ஒரு வழியாய் உன்சேதி அறிந்தேனடி.
பேய்கள் கிழித்தெரிக்கும் எம்முடைய தேசத்தில்
வன்னிக் கிராமத் தெருவொன்றில்
வெள்ளிச் சருகை மினுங்கும் தலையும்
பொன் சருகை கலையா முகமும்
இன்னும் ஓயாமல் முந்தானை திருத்த எழும் கையுமாய்
போனாயாம் உந்தன் பூப்படைந்த பெண்ணோடு
போட்டிச் சிறு நடையில்.
அது என்ன போட்டி.

காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய்.
அவளிடத்தில் உன்பாட்டி தோற்றதையும் நீ அறிவாய்.
என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில்
இன்று நீ அன்னை.

நீ தோற்க்க வாழ்வு மேலும் ஒரு வெற்றி பெறும்.
ஆனாலும் நீ எனக்கு இன்னும் சிறுக்கிதான்.
இன்னும் விடாயும் அச்சமுமாய் மிரண்டடிக்கும்
குளக்கரையின் மான் குட்டி.

நானுமுன் நெஞ்சத்தில் சிற்றாறா.
இன்னும் காலில் விழுந்து கையேந்தி இரக்கின்ற
திருட்டுச் சிறு பயலா.
அஞ்சி அஞ்சி நாங்கள் அன்று
உடற் கடலில் கை நனைத்து கால் நனைத்து
நீந்த முயன்றதெல்லாம் எண்ணில்
மேனி இன்பத் துணுக்குறுதே.

எறிகுண்டாய் வானத்தியமன்
கூரை பிரித்துன் பின்வீட்டில் இறங்கிய நாள்
உன் முன்வீட்டுப் பிள்ளை தொலைந்தாளாம்.
பின் ஒருநாள் ஊர் காண
காக்கி உடையோடு வந்து காட்டோரம் ப…