Posts

Showing posts from June, 2015

கோமகனின் 'தனிக்கதை ' - என்னுரை.

Image
எனது வாசகர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் பணிவான வணக்கங்கள். இன்றைய நாள் வரை வலைப்பூவிலும், இலக்கிய சஞ்சிகைகளிலும், இணையங்களிலும் எழுதி வந்து கொண்டிருந்த எனது முதலாவது சிறுகதை தொகுதி முயற்சி இது.
இந்த சிறுகதை தொகுதியில் மொத்தம் பதினாறு சிறுகதைகளைக் கதைகளாகத் தொகுத்திருக்கின்றேன் . இந்தக் கதைசொல்லிகள் ஏற்கனவே இலக்கிய சஞ்சிகைகளிலும் இணையத்தளங்களிலும் வெளிவந்து பலவாசகர்களது நெஞ்சை அள்ளிச்சென்றவை. ஒரு அம்மா தன் பிள்ளையைப் பெறும் பொழுது தான்பட்ட வலியையும் கஸ்ரத்தையும் மறந்து மகிழ்ச்சியாக இருப்பது, தனது பிள்ளை அப்பாவாலும், மற்றயவர்களாலும் சீராட்டிப் பாராட்டிக் கொஞ்சப்படுகின்ற வேளையிலேயே. 
ஒரு எழுத்தாளனுக்கு மனச்சந்தோசத்தை தருவது வாசகர்களது விமர்சனங்களும், அவர்களது அங்கீகாரங்களுமே ஒழிய பட்டையங்களோ பணமுடிப்புகளோ இல்லை. அந்த வகையில் இந்த முதல் முயற்சியை வாசகர்களாகிய உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.
இந்த சிறுகதை தொகுதியில் நான் எழுதிய ஆரம்பகாலக் கதைகளும், பின்னர் எழுதிய கதைகளும் அடங்குகின்றன. நான் எழுதிய ஆரம்ப கால சிறுகதைகளை இப்பொழுது பார்க்கும்பொழுது,எழுத்து வசப்பட்டதால் ஏற்பட்ட அனுபவம் தந்த ம…

கோமகனின் "தனிக்கதை " முன்னுரை -தாட்சாயணி.

Image
எழுத்து என்பது எப்படி சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது? எழுத்தை நேசிப்பவர்கள் வாசிப்பின் மூலம் தம் நேசத்தைக் காட்டுபவர்களாகவும், எழுதுவதன் மூலம் அதை வசப்படுத்துபவர்களாகவும் இருக்கின்ற வேளைகளில் எழுத்து சிலரை இளம் பருவத்தில் ஆகர்சித்துக் கொள்வதாகவும், சிலருடைய வாழ்வில் நடுப்பகுதியில் வந்தமர்வதாகவும், இன்னும் சிலருக்கு அவர்களின் ஓய்வுக்காலத்தில் அவர்களது உணர்வுகளுக்கு வடிகாலாவதாகவும் அமைந்து விடுகின்றது. சிறு சோம்பலுணர்வு, எழுத்துச்சூழலின் கிறுக்குத்தன்மை பல பேனாக்களுக்கு ஓய்வு கொடுத்ததுண்டு. எழுதாத பேனாக்கள் இன்னுமிருக்கின்றன.எழுதக்கூடாத பேனாக்கள் எழுதிக் கொண்டுமிருக்கின்றன. எவ்வகையிலோ எழுத்துக்கள் நகர்கின்றன. தக்கன நிலைக்கின்றன. அல்லன காலப்போக்கில் காணாமல் போகின்றன.

இவ்வகையிலேயே கோமகனின் எழுத்துக்கள் அவரது நடுவயதில் அவரைத் தேடி வந்து சேர்ந்திருக்கின்றன. வாழ்க்கையில் போராடி ஈழத்தின் யுத்தச் சூழலுக்குள் அலைக்கழிந்து, புலம் பெயர் தேசமொன்றில் கரையேறிய அவரது உணர்ச்சிப் பெருக்குகள் சொற்சித்திரங்களாகியிருக்கின்றன. கோமகனை நான் முதலில் அறிந்து கொண்டது அவரது வலைப்பூக்கள் வழியாகத்தான். இயற்கை மீதான …

"இலக்கியங்களில் உண்மைகள் இருக்கலாம். ஆனால் எல்லா உண்மைகளும் இலக்கியமாகிவிட முடியாது." -நேர்காணல் -ஆதவன் கதிரேசர்பிள்ளை.

Image
ஆதவன் கதிரேசர்பிள்ளை என்று பலரால் அறியப்படும் ஆதவன் தாயகத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆதவன் கதிரேசர்பிள்ளை இப்பொழுது தாயகத்தை விட்டுப் புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார். இவர் 1980 களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். கவிதை, நாடகம், நாவல், குறும்படம் ஆகியவற்றில் தமது பன்முக ஆழுமையை வெளிப்படுத்தியவர். ‘தெருவெளி’ என்ற நாடக ஆற்றுகையை யாழில் அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவராக ஆதவன் கதிரேசர்பிள்ளை எம்மிடையே இருக்கின்றார் .1980 களின் பின்னரான ஈழத்து அரசியல் நிலையை எடுத்துக் காட்டும் இவரின் கவிதைகள் அடங்கிய ‘உள்வெளி’ என்ற கவிதைத்தொகுப்பு 1985 இல் தமிழ் நாட்டில் இருந்து வெளியாகி இருந்தது .ஆதவன் கதிரேசர்பிள்ளை தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த பின்னர் நோர்வேயில் இருந்து வெளிவந்த ஆரம்பகால இதழ்களில் ஒன்றாகிய " சுவடுகள் " சஞ்சிகையில் " மண்மனம் " என்ற தொடர்கதையை எழுதியுள்ளார். புகலிடத்தில் சிறுவர் அரங்கு தொடர்பான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறார் என்பது இங்கே குறிப்படத்தக்கது . அத…

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் - பத்தி - பாகம் 08

Image
ஐமிச்சம் ஐயம்பிள்ளையும் அம்மாக்குஞ்சியும்
மெய்யே பிள்ளையள்......... இதை ஒருக்கால் கேளுங்கோவன். இப்ப ரெண்டு மூண்டு நாளைக்கு முன்னம் ஒருத்தனும் ஏன் நாயே எண்டு கேக்காத நேரத்திலை முகப்புத்தகத்துக்கு நான் மண் எடுத்துக்கொண்டிருந்தன். அப்ப அதிலை ஒரு விசையத்திலை எல்லாரும் லைக்கி மோர் கடைஞ்சு கொண்டு இருந்தினம். நானும் ஐமிச்சத்திலை என்ன ஏது எண்டு எட்டிப்பாத்தால் அங்கை இந்த பேரன் பேத்தியளை எப்பிடி அவையின்ர அம்மம்மாமார் பாக்கினம் எண்ட மாற்ரர் ஓடிக்கொண்டிருந்திது.
ஐயம்பிள்ளையருக்கு உந்த பொசிப்பெல்லாம் சிவசத்தியமாய் கிடைக்கேலை பாருங்கோ.அவற்றை அம்மம்மாவும் அம்மப்பாவும் ரிக்கெட் எடுத்துப்போட்டினம். ஆனால் ஐயம்பிள்ளை உறுக்கிணிக்குழுவனாய் இருக்கேக்கை அவற்றை பூட்டியோடை தான் சிங்கன் வாலாயம். அவாவின்ரை பேர் சிதம்பரம் எல்லாரோடையும் கொழுத்தாடு பிடிக்கிற கிழவி இவரோடை மட்டும் ஒரு தனகலும் இல்லாமல் ஒட்டெண்டால் அப்பிடியொரு பிலக்காய்பால் ஒட்டு.
அந்த நேரத்திலை ஐயம்பிள்ளைக்கு ரெண்டு எளிய பழக்கம் இருந்தீச்சுது. ஒண்டு விரல் சூப்பிறது. மற்றது கேட்டு கேள்வியில்லாமல் கண்ட கடியளையும் வாயுக்கை போடிறது. எல்லாரும் தான் சின்னில…