Posts

Showing posts from August, 2015

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் - பத்தி - பாகம் 09.

Image
தவறணையில் தத்துவ விசாரணை -தேர்தல்.
லொக்கேசன் : பருத்தித்துறை (கூவில்)
முகத்தில் ஆயிரம் சோகத்தை வைத்துக் கொண்டு சுறுக்கர் கள்ளுப் போத்தலையும் வானத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் . ஐமிச்சம் ஐயம்பிள்ளை கையில் சுறுட்டுக்கட்டுடன் தவறணைக்குள் என்ரர் ஆகின்றார் .
ஐயம்பிள்ளை : என்னைக் காய் வெட்டிப்போட்டு வந்திட்டாய் என்ன? 
சுறுக்கர் : இல்லையடா பங்காளி எனக்கு இண்டைக்கு மனம் கொஞ்சம் சரியில்லை கண்டியோ . வா இதிலை குரு மண்ணுக்கை இரு .
ஐயம்பிள்ளை : வானமே பிஞ்சு கொண்டுண்டாலும் கிறுங்க மாட்டாய் நீ .உனக்கென்ன கோதாரி இப்ப வந்தது ?
சுறுக்கர் :இப்ப உனக்கே தெரியும் நேற்று காலங் காத்தாலை ரெண்டுபேரும் போய் உந்த சுமந்திரன் வரக்கூடாது எண்டுதானே போட்டுட்டு வந்தம் இப்ப பார் எல்லாம் தலைகீழாய் கிடக்கு .
ஐயம்பிள்ளை :அண்ணை உண்மையிலை லெக்சன் எண்டால் என்ன ?
சுறுக்கர் : இரண்டு பேருக்கும் கள்ளை வார்த்தவாறே நக்கல் சிரிப்புடன்," தம்பி இங்காலை ஐயம்பிள்ளைக்கு மூளை பிரட்டல் குடு ராசா" . ஆ ........ என்ன கேட்டனி ? உனக்கு விளங்கிற மாதிரி சொல்லுறன் .லெக்சன் எண்டால் மச்சான், ஒருத்தனை சனம் எல்லாம் ஒண்டு கூடி ரகசியமாய் …

சோபசக்தியின் BOX நாவல் -வாசிப்பு அனுபவம்.

Image
அண்மையில் கறுப்புப் பிரதி வெளியீடான ஷோபாசக்தியின் "பெட்டி"  நாவல் வாசிக்க நேர்ந்தது. அந்த வாசிப்பின் பொழுது என்மனதில் வந்த தீர்மானங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன்.
பொதுவாகவே கதை சிருஷ்டிகர்த்தாக்கள் தங்கள் கதையைச்சுற்றி வரும் சுற்றுப்புறச் சூழல்களை உவமானத்துக்காகவே பயன்படுத்துவார்கள். இந்த உவமான உவமேயங்கள் அச்சுப்பிசகாமல் சங்ககால இலக்கியத்தில் இருந்து இன்றுவரை  இருந்து வந்துள்ளது. ஆனால் ஷோபாசக்தியின் BOX ("பெட்டியை ") வாசிக்கும் பொழுது முதன் முறையாக முதலாவது கதை சொல்லியாக வானத்தில் இருக்கும் நிலாவும், இரண்டாவது கதைசொல்லியாக ஓர் குழந்தையும் நாவலினூடாக கதைசொல்லிகளாக நகர்ந்து சென்று கொண்டிருந்தன. இதற்காக நூலாசிரியருக்கு ஓர் கைதட்டல் கொடுக்கலாம். நாவல் ஒருபக்கத்தில் இருந்து மட்டும் வாசகரை நோக்கிச் சுழலாது, கதைக்களத்திலே இருந்த பலதரப்புக் கதைமாந்தர்களினூடாக, அவர்களினுடைய பார்வையில் இருந்துகொண்டே கருத்தியல் வாதங்களை முன்வைக்கின்றது. இதுவும் நூலாசிரியரின் புதிய கதைசொல்லும் பாணியாக என்னால் உணரமுடிந்தது. அத்துடன் வாய் பேச முடியாத குழந்தைக்கு …

சுவைத்(தேன்) - கவிதைகள் - பாகம் 05.

Image
01 ஆராதனை

உனது ரசனைகள் எவை என்பது எனக்குத் தெரியாமலே போய்விட்டது.
பறவைகளின் வீரக ஒலி, வெளிறிய வானில் சுடரும்  ஒற்றை நட்சத்திரம் காற்றின் சிறு சலசலப்பு: சில சமயம் அதன் சங்கீதம், தூரத்தில்… வெகுதூரத்தில் தெளிவற்றுக் கேட்கும் மழலைச் சொல். பிரியமான உனது விழிமலரின் மருட்சி. கழுத்தோரம் தெரியும் சிறுமச்சம் என்று இவை எல்லாம் எனக்கு…. எனக்கானவை உனக்கு…..?
கால தாமதமாய்தான் அந்த செய்தி எனக்குத் தெரியவந்தது. நீ என்னை விரும்பினாயாம்!
மரணப்படுக்கையில் நீ