சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் - பத்தி - பாகம் 09.
தவறணையில் தத்துவ விசாரணை -தேர்தல்.
லொக்கேசன் : பருத்தித்துறை (கூவில்)

முகத்தில் ஆயிரம் சோகத்தை வைத்துக் கொண்டு சுறுக்கர் கள்ளுப் போத்தலையும் வானத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் . ஐமிச்சம் ஐயம்பிள்ளை கையில் சுறுட்டுக்கட்டுடன் தவறணைக்குள் என்ரர் ஆகின்றார் .

ஐயம்பிள்ளை : என்னைக் காய் வெட்டிப்போட்டு வந்திட்டாய் என்ன? 

சுறுக்கர் : இல்லையடா பங்காளி எனக்கு இண்டைக்கு மனம் கொஞ்சம் சரியில்லை கண்டியோ . வா இதிலை குரு மண்ணுக்கை இரு .

ஐயம்பிள்ளை : வானமே பிஞ்சு கொண்டுண்டாலும் கிறுங்க மாட்டாய் நீ .உனக்கென்ன கோதாரி இப்ப வந்தது ?

சுறுக்கர் : இப்ப உனக்கே தெரியும் நேற்று காலங் காத்தாலை ரெண்டுபேரும் போய் உந்த சுமந்திரன் வரக்கூடாது எண்டுதானே போட்டுட்டு வந்தம் இப்ப பார் எல்லாம் தலைகீழாய் கிடக்கு .

ஐயம்பிள்ளை : அண்ணை உண்மையிலை லெக்சன் எண்டால் என்ன ?

சுறுக்கர் : இரண்டு பேருக்கும் கள்ளை வார்த்தவாறே நக்கல் சிரிப்புடன்," தம்பி இங்காலை ஐயம்பிள்ளைக்கு மூளை பிரட்டல் குடு ராசா" . ஆ ........ என்ன கேட்டனி ? உனக்கு விளங்கிற மாதிரி சொல்லுறன் .லெக்சன் எண்டால் மச்சான், ஒருத்தனை சனம் எல்லாம் ஒண்டு கூடி ரகசியமாய் வாக்கு போட்டு எங்கடை அடுத்த நாட்டாம்மை நீதான் எண்டு முடிக்கிறது தான் லெக்சன் .ஆனால் இப்ப என்னடாவெண்டால் சனங்களை வெறும் மடயராக்கி சனங்களுக்கே தெரியாத முதலாளியளும், பெரிய பெரிய வங்கியளும், வேறை நாடுகளும் தான் எங்கடை நாட்டிரை நாட்டாமையை டிசைட் பண்ணுகினம். இதுகள் விளங்காமல் இங்கத்தையான் சனங்கள் எதோ தங்கடை கோயில் திருவிழா மாதிரி கூடி கும்மியடிக்கிறதும், ஒருத்தனை ஒருத்தன் டக்கால்ட்டி பண்ணுறதும் தாங்கேலாமல் கிடக்கடா ஐயம்பிள்ளை. இல்லாட்டில் எப்பிடி சுமந்திரன் வரேலும் ? சொல்லு பாப்பம்? அதோடை பார் அடுத்த கூத்தை, சிவாஜி லிங்கம் மகிந்தரோடை கேம் கேட்டு கவிண்டு கொட்டிண்டிருக்கிறார். அதோடை கண்டியோ பிள்ளைப் பெறப்போறவள் சும்மா கிடக்க பக்கத்திலை கெல்ப்புக்கு நின்டவள் வயித்து வலியிலை ஊரைக் கூட்டின மாதிரி உந்த வெளிநாட்டிலை இருக்கிற எங்கடை சனங்கள் பட்ட பாட்டை பாத்தியே ? விட்டால் இவையே எங்களுக்கு தமிழ் ஈழம் எடுத்து தந்து போடுவினம் எண்ட மாதிரி பேஸ் புக்கிலை அவையின்ரை டான்சுகள். இங்கை சனம் படுற பாடுகளை பத்தி அவைக்கு அக்கறை இல்லை . தங்கடை குடும்பத்திலை இங்கை இருக்கிறவையை வைச்சு கொண்டு வடக்கு கிழக்கு சனம் எல்லாம் சோக்காய் இருக்கினம் எண்ட நினைப்பு அவைக்கு . இதெ ல்லாம் எனக்கு பண்டி விசர் கண்டியோ. உதுகள் எல்லாம் சந்தனம் மெத்தின கேசுகள் . இல்லாட்டில் சும்மா கிடந்த சைக்கிளுக்கு காத்து அடிச்சு விட்டிருப்பினமே ?

அதோடைமச்சான் ஐயம்பிள்ளை, சனம் எல்லாம் இப்ப எல்லாம் வலு முன்னேத்தம் கண்டியோ. அவைக்கு முந்தின மாதிரி அமுதர் மங்கையர்கரசி மாமி, இங்காலை சிவசிதம்பரம் மாதிரி டக்கால்ட்டி பேச்சுகள் எல்லாம் எடுபடாது. என்னத்துக்கு கூட்டத்துக்கு போய் மினைக்கெடுவான் எண்ட நினைப்பு சனத்துக்கு . சனம் எல்லாம் வெள்ளனவே டிசைட் பண்ணிப் போட்டு எல்லாற்றையும் உரு ஆட்டத்தைப் பாத்து சிரிச்சு கொண்டு நிண்டுதுகள். ஆனாலும் மச்சான், மைத்திரி சும்மா இருக்காமல் பொலிஸ் காணி அதிகாரத்தோடையாவது பிரச்சனயை சோட் அவுட் பண்ண வேணும். அதோடை வீட்டுக்காறர் உள்ளுக்கை போய் கடிபடாமல் வெளியாலை நிண்டு மைத்திரிக்கு சப்போர்ட் பண்ணவேணும் கண்டியோ. இதுதான் இண்டையான் சுறுக்கன்ரை தவறணை பேச்சு மச்சான் ஐயம்பிள்ளை .

சுருக்கு சுறுக்கர்

18/08/2015 
Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.