சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் -பத்தி -பாகம் 11.01 நாடு ஒரு நபருக்கோ அல்லது ஒரு அணிக்கோ வரையறுக்கப்பட்டதல்ல!– பிரதமர் ரணில்

02 இன்னொரு அரசியல் புரட்சிக்கு தமிழர்கள் தயாராக வேண்டும்: சுமந்திரன் அறைகூவல்

03 முற்றுகைகளை உடைத்து வெல்லட்டும் தமிழ்த் தேசியம்!

சுறுக்கரின் அவதானம் :

01 அதுசரி எல்லாம் பங்கு பிரச்சனைதான் கண்டியளோ மிஸ்டர் பிறைம் மினிஸ்டர் .

02 எங்கை எந்த இடம் எண்டு சொன்னியள் எண்டால் வசதியாய் இருக்கும் .அதுசரி நீங்கள் றெடியோ ?

03 கோல் பேசிலையும் வட்டுக்கோட்டையிலையும் எப்பவோ தமிழ் தேசியம் முற்றுகை உடைச்சு விட்டாச்சு இப்ப ஆர் உங்கை முற்றுகை போட்டிருக்கினம், உடைக்கிறதுக்கு ?

000000000000000000000000

01 மலேசியாவிலிருந்து விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் நாடு கடத்தப்பட்டார்!

02 ஜனாதிபதியின் கடிதத்திற்கு மஹிந்தவினால் பதில் கடிதம் அனுப்பி வைப்பு .

சுறுக்கரின் அவதானம் :

01 புலி இல்லை எண்டு அரசாங்கம் கற்பூரம் கொழுத்தி சத்தியம் பண்ணுறாங்கள் இங்கை என்னடாவெண்டால் புழுக்கை வாசம் என்னம் எடுபடேலை .

02 லெக்சன் கிட்டுது ......சனம் வெளிநாட்டிலை இருந்தெல்லாம் அல்லோலகல்லோலப் படுகுதுகள். இங்கை என்னடாவெண்டால் ரெண்டு பெரும் லவ் லெட்டெர் போட்டுக்கொண்டு இருக்கினம் .

000000000000000000000000000000

அடிமைகளாக வாழ முடியாது இந்த வாழ்வுக்கான முடிவு காலம் நெருங்குகின்றது: பொன்.காந்தன்.

சுறுக்கரின் பார்வை :

ஏதாவது புதுசாய் மாத்தி யோசி ராசா. நான் சின்னனிலை இருக்கேக்கை அடிமைப் பெண் படத்திலை கேட்ட வசனம் உது .000000000000000000000000000000


ஹாய் போய்ஸ் ,

கொஞ்ச மாசத்துக்கு முன்னாலை ஒரு கதை புத்தகம் வந்திது. அது பெரிய எடுப்பிலை வெளியீடு எல்லாம் செய்து பட்டையை கிளப்பீச்சுது. அதுக்கு என்ரை கூட்டாளி ஒருத்தன் விமர்சனம் எழுதினான். அதுவும் பிச்சுக்கொண்டு போச்சுது. என்ன கோதாரியெண்டால் வாக்கணங்கெட்ட கூட்டாளி முதுகு சொறிஞ்சு எழுதாமல் நட்டம் நயத்தை எழுதிப்போட்டான். இது எழுதினவருக்கு சுட்டுப்போட்டுது போலை கிடக்கு. தன்னை பப்பாவிலை ஏத்தி எழுதினவையின்ரையத்தான் போட்டுக்கொண்டிருக்கிறார் எண்டால் பாருங்கோவன். நான் கூட்டாளிக்கு தவறணையிலை வைச்சு சொன்னன், இனிமேல் பட்டாவது பப்பாவிலை ஏத்தி எழுதப் பழகினாய் எண்டால் பிழைச்சு கொள்ளுவாய் எண்டு. பெடி என்னை பேசிப்போட்டு போறான் விசரன் .

0000000000000000000000000000

பரிசு கெட்ட சுறுக்கர்

வணக்கம் போய்ஸ் . 


இண்டைக்கு நாலு நாள் வீட்டிலை குந்தி இருந்துபோட்டு வேலைக்கு போனன். என்ரை கொமாண்டிலை ஏரியா வலுகிளீனாய் போய் கொண்டு இருந்திது .வழக்கமாய் வாற கஸ்டமறோடை ஒரு குரூப்பும் சேர்ந்து காலமை சாப்பாட்டை விசுக்கிக் கொண்டு இருந்தினம். நானும் அவையோடை ரெண்டு ரோக்கை போட்டு அவையளை மனம் கோணாமல் குசிபடுத்தி கொண்டு இருந்தன். பத்து மணிக்கு காலமை சாப்பாடு பூட்டிற நேரம் . ஒரு ஒம்பது முக்கால் போலை ஒரு சிங்கிலி நோனா வந்தா. அவா ப்றொம் எத்தா யூனி ( யூ எஸ் ). இங்கிலிஸ் டோக்கிங் மாம் பட் க(று )ப்பி . வந்து எடுத்த உடனை எனக்கு வணக்கமும் சொல்லாமல் "முட்டை அவிக்கிற மெசின் தண்ணி சூடாய் இருக்கோ ?" எண்டா. இங்கை அரிவரி பழக்கம் என்னவெண்டால் காலமை ஆரை கண்டாலும் வணக்கம் சொல்லவேணும். இல்லாடி அது ஒரு பெரிய அவமதிப்பு . நான் ஒண்டும் சொல்லாமல் அவாவை ஒரு செடில் லுக்கு ஒண்டு விட்டன். ஏக்கனவே அதுக்கை ஆரோ கஸ்டமர் போட்ட ஆறு முட்டை அவிஞ்சு கொண்டு இருந்திது. இவா காலிலை சில்லு பூட்டி கொண்டு நிக்கிறா. பேந்து இந்த முட்டையை எடுக்கேலாதோ எண்டு கேட்டா ."வைச்ச ஆளுட்டை கேள் .அவர் ஒமெண்டால் நீ மாத்து" எண்டு  சொன்னன் . பிள்ளையள் சிவசத்தியமாய் இந்தளவும் தான் சொன்னன். அதுக்கு உடனை கப்பி என்னை பாத்து என்ன சொன்னா தெரியுமோ ? " ஐ பக் யூ ஆஸ் ,( பெஸ்சே ஒன் க்யு ) எண்டா. இது கண்டியளோ பட்டை தூசணம். சனம் எல்லாம் என்னை பாக்குதுகள். எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போச்சு. என்ரை பதினாலு வரிய சேர்விசிலை ஒருத்தரும் என்னோடை இப்பிடி தூசணத்தாலை பேசினது இல்லை கண்டியளோ. கப்பி சூதானமாய் வெளியிலை போற வாசலிலை நிண்டு கொண்டு என்னை பாத்து திருப்பவும் சொன்னா "ஷடாப் யூ இடியட்" எண்டாள். எனக்கு விசயம் கிளியறாய் விளங்கீச்சுது." கப்பி ஒரு சீன் கிரியேட் பண்ணி தின்ன வந்த காசிலையும் 3 நாள் நிண்ட காசிலையும் ஆட்டையை போடப்போறா" எண்டு . கொஞ்ச நேரத்தால் என்ரை கூட்டாளி டைரக்டர் வந்தார். வந்து சொன்னார் "கப்பி முறைப்பாடு வைச்சவா .நீ வடிவாய் கவனிக்கேலையாம். இன்டர் நெட்டிலை போடப்போறாவாம் " எண்டார் .அப்ப நான் சொன்னன், "அவா ஆக்களுக்கு முன்னாலை என்னை தூசணத்தாலை பேசினதைப் பத்தி ஏதாவது உனக்கு சொன்னவாவோ" எண்டு கேட்டன். அதுக்கு பங்காளி சொல்லுறார், "அவை எப்பிடி எண்டாலும் சுறுக்கர்தான் தாங்கி தரிச்சு போகவேணுமாம்". எனக்கு ஏறீட்டுது பிள்ளையள் .அப்பன் நாட்டு நடப்பும் சட்டமும் தெரிஞ்சும், தெரியாதமாதிரி கதைக்கிறாய். நான் இந்த ஏரியாவுக்கு சிண்டிகேட் டெலிக்கே .உன்ரை கஸ்டமர் வேலை நேரத்திலை உன்னட்டை வேலை செய்யிற ஆளை தூசணத்தாலை பேசினதோடை, திண்டதுக்கும் காசுகுடுக்காமல் அட்டையை போட்டு உனக்கு நாமம் அடிச்சு போட்டாள். நீ என்னடாவெண்டால் என்னோடை வந்து கொழுத்தாடு பிடிக்கிறாய். முறைக்கு அவாவை கொண்டு நீ தான் என்னட்டை மன்னிப்பு கேக்கவேணும். கப்பிக்குத்தன் கொமெண்டரி எழுத தெரியும் எண்டில்லை. சுறுக்கனுக்கும் தெரியும் .வசதி எப்பிடி?" எண்டு கேட்டன் .பங்காளி பம்மி கொண்டு போட்டுது. ஆனால் பிள்ளையள் கப்பி என்னை தூசணத்தாலை பேசிப்போட்டாள் எண்டதை நினைக்க மனம் ஆறுதில்லை.

0000000000000000000000000000000

ஹாய் பெடியள்ஸ்.............

இண்டைக்கு என்ரை கூட்டாளி ஒருத்தன் லோக்கல் மாற்றர் ஒண்டை பத்தி செரியாய் பீல் பண்ணி எழுதி இருந்தான். அதை கொஞ்சம் விளப்பமாய் டிஸ்குத்து ( டிஸ்க்கஸ் ) பண்ணுவம் எண்டு பாக்கிறன். சுறுக்கர் இங்கை வந்த காலத்திலை செரியாய் கஸ்ரப்பட்டுத்தான் இந்த பிரெஞ்சை படிச்சு ஒழுங்கு முறையாய் இருக்கிறார். என்னோடை வந்த கொஞ்ச கூட்டுகளும் படிச்சாங்கள். ஆனால் மிச்சம் எல்லாம் நோகாமல் நொங்கு எடுக்கிற கோஸ்ரியள். அவங்கள் கண்டியளோ தங்கடை முகத்தை அப்பாவி மாதிரி வைச்சே சூக்குமமாய் அலுவலை கொண்டோடுவங்கள் எண்டால் பாருங்கோவன். இப்ப..... பெரிய பெரிய மாற்றருக்கு எல்லாம் அவைக்கு பிரெஞ்ச் ஆக்களோடை கதைக்க ஆக்கள் தேள்வைப்படாது. 

ஒரு எக்சாம்பிளுக்கு பாங் கிறடி ( லோன் ) , வீட்டு கிறடி (லோன் ) எல்லாம் தாங்களே தவண்டு எழும்பி காதும் காதும் வைச்ச மாதிரி முடிப்பங்கள். பேந்து அதை லெப்பலாய் மற்றவைக்கு விலாசம் காட்டுவங்கள் . இந்த . பிஸ்கோத்து சோசல் மெடத்துக்கும் ,அகதி காசுக்கும், அசட்டிக் காசுக்கும்( வேலை இல்லாதவைக்கு குடுக்கிற காசு ), வேலை பதியிற இடத்துக்கும், வேலை எடுத்து குடுக்கிற அலுவலுக்கும் இவைக்கு ஒரு சிண் தேள்வைப்படுது? இதிலை என்ன சூக்குமம் என்னெண்டால் , தங்கடை கஸ்ற்றத்தை எங்கள் தரவளிக்கு காட்டுயினமாம் .இந்த விசயத்திலை பாருங்கோ சுறுக்கர் செரியாய் நொந்து நூலாய் போனார். .பாவம் எங்கடை பெடியள் எண்டு என்ரை நேரத்தை மினக்கெடுத்தி ஒரு உதவிக்காய் போறது. சுறுக்கர் ஐஞ்சு சதம் வாங்கிறேலை . ஆனால் மாற்றருகள் முடிஞ்சால் பிறகு சுறுக்கரை ஏன் நாயே எண்டும் எட்டியும் பாக்கிறேலை. பேந்து ஏதாவது சிமோல் மாற்ரறுக்கு இருந்தாபோலை போன் அடிப்பினம். சுறுக்கற்ரை சீவியத்திலை இவங்கள் தரவளிக்கு உதவி செய்யப்போய் உபத்திரையம் தான் கண்டது மிச்சம் . பெடியள்ஸ் உங்களுக்கும் இப்பிடி ஏதாவது நடந்து இருந்தால் எழுதுங்கோ கேப்பம் .

000000000000000000000

வணக்கம் மனமதக் குஞ்சனுகள்,

லவுசிலை பிறேக் எண்டால் நீங்கள் எல்லாம் பெட்டையளுக்கு அசிட் அடிக்கிறதுக்கு ராமாயணம் தான் காரணமாம். இதை சும்மா விடப்படாது பெடியள்ஸ் குலத்துக்கே ஒரு பெரிய இன்சல்ட். கமான் போய்ஸ் ஸ்ரார்ட் ம்யூசிக் ..............

000000000000000000000000000000

ஹாய் கலாச்சார காவலர்ஸ் அண்ட் பூசாரியள் ,

லாச்சப்பலிலை பிள்ளையார் ஹப்பியாய் தேரிலை வரேக்கை நடந்த கூத்துகளை விடியோவிலை பாத்தன். நல்லாய் தான் யூத்ஸ் எல்லாம் தங்கடை வெள்ளை குப்பின் ( கேர்ள் பிரெண்ட் ) மாரோடை குத்து டான்ஸ் எல்லாம் போட்டு, அவளவையை தூக்கி எல்லாம் டான்ஸ் ஆடினாங்கள். சிவசத்தியமாய் சுறுக்கன் புல்லரிச்சு போனான் கண்டியளோ. இதிலை என்ன பிரச்சனை என்னவெண்டால் , இந்த கோஸ்ரியள் தான் அங்கை யாழ்ப்பாணத்திலை பெடி பெட்டையள் பழுதாய் போச்சுதுகள். யாழ்ப்பாணம் கெட்டு போச்சுது. எங்கடை மானம் மரியாதை எல்லாம் கப்பல் ஏத்துகினம். யாழ்ப்பாணம் முந்தினமாதிரி இல்லை. இயக்கம் இருக்கேக்கை என்ன மாதிரி இருந்திது எண்டு சன்னதம் ஆடுறவையும் இவையள் தான். தாங்கள் எல்லாம் அந்த மாதிரி இருந்து கொண்டு அங்கை இருக்கிற சனத்துக்கு வகுப்பு எடுப்பினம் பாருங்கோ........... சொல்லி வேலை இல்லை .

0000000000000000000000000000

செய்தி : எனது பயணம் மெதுவானது: ஜனாதிபதி.

சுறுக்கரின் பார்வை :

தம்பி மோனை நீங்கள் இருக்கப்போறது கொஞ்ச வரியம் தான் இதுக்குள்ளை மெல்லமாய் போகப்போறன் எண்டு சொன்னால் ஆர் விட்டாலும் சனம் உங்களை விட்டுவைக்குமோ எனக்கெண்டால் பொல்லை குடுத்து அடிவாங்கிறியள் .

00000000000000000000000000000000

வணக்கம் போய்ஸ் அண்ட் கேர்ல்ஸ் ,

சந்தானம் மெத்தின புலம் பெயர் டமில்ஸ் எல்லாம் நல்லூரிலை ஒண்டாய் நிக்கிறதாய் கேள்வி.. கந்தனும் ஹப்பியாய் தேரிலை வந்ததாய் கூட்டாளி சொன்னாங்கள். .கந்தன் ஒரு கொஞ்ச நேரம் தேரிலை வாறதுக்கு மில்லியன் கணக்கிலை செலவு எண்டு ஒரு புள்ளி விபரம் சொல்லுது. . எங்கடை டமில்சை எப்பிடி உழுது தள்ளி, பரம்பரையை வேரோடை புடுங்கினாலும் சுறணை கெட்ட சனங்கள் கண்டியளோ .ஒவ்வருத்தரும் தங்கடை விலாசம் காட்டுறதிலை அப்பிடி ஒரு குசிஎண்டால் குசி . . கொஞ்சப்பேர் புறுபுறுக்கிறது எனக்கு கேக்குது .சுறுக்கன் வெறிவளத்திலை வாய்க்குள்ளை சனியனை வைக்கிறான் எண்டு. உதுக்கெல்லாம் நசியிறவன் இல்லை சுறுக்கன். தேர் ஓடத்தான் வேணும் இல்லை எண்டு சொல்லேலை .அனால் சந்தனம் மெத்தின விளையாட்டுகள் காட்டப்படாது கண்டியளோ .

என்ரை பாட்டன் முப்பாட்டன் எல்லாம் தேர் ஓடினவங்கள் தான். கட்டுத்தேரிலை சாமி ஊர்வலமாய் வந்திது .இப்பவும் தமிழ்நாட்டிலை பெரிய கோயிலுகளிலை கட்டுதேரிலை தான் சாமி வாறது .உப்பிடித்தான் ஒருக்கால் சுறுக்கன் சுசீந்திரம் தாயுமானவர் கோயிலுக்கு போனான் . அங்கயும் கட்டுத்தேர்தான் நிக்குது. எவ்வளவு இடம் மிச்சம். இந்த ஜப்னீஸ் க்குத்தான் உந்த செடில் குணங்கள். ஒருக்காலும் முருகன் தனக்கு 3 பனை உயரத்திலை தேரும் முட்டியும் தா எண்டு கேக்கேயில. ஒருபக்கத்தாலை சண்டையிலை சொந்தம் பந்தத்தை எல்லாம் குடுத்துப்போட்டு அடுத்த நேர சாப்பாட்டுக்கும் தொழிலுக்கும் வழி இல்லாமல் இதே தமிழ் சனம் றோட்டு றோட்டாய் அலையுதுகள். இங்காலை பக்கம், சந்தானம் மிஞ்சி டிக்கியிலை தடவுறாங்கள். இந்த காசுகள் எவ்வளவு சனத்தின்ரை பசி ஆத்தி இருக்கும்? இந்த டமில்ஸ் எப்ப திருந்த போகினம்? இதுகளை பாக்க சுறுக்கனுக்கு பிறசர் தான் ஏறுது. நீங்கள் என்னதான் சுறுக்கரை பேசினாலும் சுறுக்கர் சொன்னது மனிசனாய் பிறந்தவனுக்கு ஏறும் கண்டியளோ.

000000000000000000000000000000

ஹாய் போய்ஸ் அண்ட் கேர்ல்ஸ் ,

வந்த விசயத்தை சுருக்கெண்டு குத்துற மாதிரி சுறுக்காய் சொல்லுறன் . காத்தாலை பேஸ் புக்கை திறந்தன். சுறுக்கருக்கு அண்டம் கிண்டம் எல்லாம் பத்திப்போட்டுது கண்டியளோ . இப்ப இருக்கிற பேமசாய் எழுதுறவையோடை தனகிறது இல்லாட்டில் அவையை பத்தி புசத்தாமல் பெடி பெட்டையளுக்கு இருக்கேலாமல் கிடக்கு .அதாலை தங்களுக்கு ஒரு கெத்து எண்டு நினைக்கினம் போலை கிடக்கு .உதை பாக்க சுறுக்கருக்கு பழைய கதை ஒண்டுதான் மண்டையுக்கை அடிக்குது .

கிட்ட முட்ட ஒரு அறுவது வாரியத்துக்கு முன்னாலை பெரிய கியாதியாய் இருந்த ஜீ ஜீ பொன்னம்பலத்தார் லெச்சன் கேட்டார். அப்ப ரெண்டு மூண்டு சேங்குகள் அவருக்கு லெச்சனிலை எதிராய் நிண்டீச்சினம் . சுறுக்கருக்கும் வாய் சும்மா கிடவாது கண்டியளோ . அவையை பாத்து கேட்டன் " ஏன்ராப்பா பொன்னம்பலத்தாரோடை முண்டிறியள் ? உங்களுக்கென்ன கழண்டு கிழண்டு போச்சுதோ ?"எண்டன். அதுக்கு அந்த சேங்குகள் சொல்லிச்சினம், " எங்களுக்கும் தெரியும் சுறுக்கர். ஆனால் பாருங்கோ பொன்னம்மபலத்தரோடை நிண்டு தோத்தால் அது ஒரு கெத்து கண்டியளோ .உதுகள் உங்களுக்கு விளங்காது ." எண்டாங்கள். நான் ஏங்கி விறைச்சு போனன் .

Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.