சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் - பத்தி பாகம் 10.


சுறுக்கரும் சம்பந்தனும் 
காட்சி :

விடியக்காலமை குளிச்சு முழுகி நெத்தியிலை பெரிய சைசிலை திருநூறும் பூசி வீட்டு முன்விறாந்தையிலை இருந்த ஈசி செயரிலை ரெண்டு காலையும் கிழிச்சு போட்டுக்கொண்டு ஐமிச்சம் ஐயம்பிள்ளை உதயன் பேப்பர் பாத்துக் கொண்டு இருக்கிறார் .பனைக்கருக்காலை செய்த படலை திறந்து கேட்டது ஐயம்பிள்ளை அரைக்கண்ணாலை படலையை பாக்கிறார் சுறுக்கர் லைட்டான தள்ளாட்டத்தோடை என்றியாகிறார் . இனி .....
சுறுக்கர் : 

மச்சான் ஐமிச்சம் என்னடாப்பா.......... எல்லா மாடும் ஒடீச்சுதெண்டு பாத்தால் சுப்பற்றை கொல்லைக்குள்ளை நிண்ட பேத்தை மாடும் ஒடீச்சுதாம் எண்ட கணக்காய் பேப்பர் படிச்சு கொண்டிருக்கிறாய் .

ஐயம்பிள்ளை : 

உங்களுக்கு என்னோடை தனகாட்டில் பத்தியப்படாதே சுறுக்கர் .

சுறுக்கர் :

சரி....... சரி ......... உன்னோடைதானே தனகலாம் எல்லாரோடையும் செய்யேலுமே . என்ன பேப்பரிலை அவதியாய் படிக்கிறாய் ?

ஐயம்பிள்ளை : 

உங்களுக்கு விசயம் தெரியாதே? சம்பந்தர் எல்லோ எதிர்கட்சி தலைவராய் போட்டார் . உங்களுக்கு ஏதாவது எத்துப்படுதே ?

சுறுககர் : 

எனக்கு எத்துப்படுகிறது இருக்கட்டும் உனக்கு என்ன விளங்கினது அதை சொல்லு ?

ஐயம்பிள்ளை : 

என்ன அண்ணை விளையாடுறியள்? நான் ஐமிச்சத்துக்கெண்டே பிறந்தனான். எனக்கு உதெல்லாம் விளங்காது. நான் சும்மா பொழுதுபோக எழுத்து கூட்டி படிச்சு கொண்டிருக்கிறன். 

சுறுக்கர் : 

சரி அடம் பிடிக்கிறாய். எனக்கு உன்னாலைதான் இண்டைக்கு சனியோ தெரியாது. காலமை தவறணையிலை உதைப்பத்தி புசத்தினவங்கள்தான். உதைப்பத்தி எடுத்து விடு மச்சான் எண்டு கூட்டாளியளும் கேட்டவங்கள் தான். 

இப்ப............... 77 க்கு பிறகு ஒரு தமிழ் ஆள் எதிர்கட்சி தலைவராய் வந்திருக்கிறார் எண்டால் இலங்கையின்ரை பரிசுகேட்டை பாரன் . முதலாவது ஆள் அமுதர். அதுக்கு பிறகு சம்பந்தர். இதுக்கு கிட்டமுட்ட 38 வரியம் செண்டிருக்கு .அமுதர் அவற்றை பெஞ்சாதி சனத்துக்கு முன்னாலை தங்கடை நெத்தியிலை ரத்தப் பொட்டு வைச்சு பெடியளை ஜூவால் ஏத்தி நோகாமல் நொங்கு எடுத்தீச்சினம். இப்ப சம்பந்தர் வந்திருக்கிறார். அவற்றை அசுமாத்தத்தை பாத்தால் பழையபடிக்கு கோட்டு சூட்டு போட்ட ஜென்டில்மன் அரசியல் தான் செய்யப்போறார் போலை கிடக்கு. தன்ரை கூட்டிலை இருந்த இயக்கத்திலை இருந்து வந்து சவுண்ட் விட்ட பார்ட்டியள் எல்லாரையும் காய் வெட்டி போட்டார். மிச்சம் இருக்கிறது நம்ம சித்தார்த்தன் தான். ஆனால் ஒண்டு மச்சான்............ தமிழன்ரை பிரச்சனை முதல் அகண்ட தேசமாய் இருந்து, பேந்து வடக்கு வேறை கிழக்கு வேறையா போய் , பேந்து மாகாண சபையாய் போய் , இடையிலை ஒரு நாடு  ரெண்டு தேசம் எண்டு வந்து ,  இப்ப பார்லிமன்றிலை எதிர்கட்சி தலைவராய் கட்டெறும்பாய் போய் நிக்குது.

இருந்து பார் இன்னம் கொஞ்ச காலத்திலை "யாப்ப கடுவா" இல்லையெண்டால் "யாப்பா பட்டுணா" எண்டு பேர் மாத்துவாங்கள். பேந்தென்ன அகண்ட தமிழீழம் "யாப்ப பட்டுணா" வாய் போடும். கேட்டால் சமஸ்ட்டி எண்டுவாங்கள் எங்கடை ஜென்டிமன் பொலிற்றிசியன்ஸ். சரி மச்சான் ஐயம்பிள்ளை நான் வரப்போறன். 

சுருக்கு சுறுக்கர் 

Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.