Posts

Showing posts from October, 2015

பரிசு கெட்ட பாரிசும், இலக்கியங்களும் ?????- பத்தி .

Image
என்னால் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வை ( தங்களுக்கு தாங்களே பட்டங்கள் சூட்டிக்கொண்ட) ஒரு சில இலக்கிய நண்பர்கள் புறக்கணிக்க இருந்ததாக எனது முக நூல் நட்பு வட்டங்களின் சில நிலைத்தகவல்கள் தெரிவித்திருந்தன . (அவை இப்பொழுது அழிக்கப்பட்டு விட்டன ). இவர்கள் எல்லோரும் எனது நெருங்கிய நண்பர்கள் .அதிலும் இருவரின் பெயர்கள் அழைப்பிதழில் வெளிவந்தும் கூட  இறுதி நேரத்தில் அந்த இருவரும் என் பிறமுதுகில் ஆழமாக குத்தியதை என்னால் இலகுவாக கடந்து போக முடியவில்லை. முதலாமவர் அண்மையில் இறந்த எனது அக்கையாரின் இடத்திலேயே அவரை வைத்திருந்தேன். அவருக்கே சிறப்பு பிரதி கொடுத்து கௌரவிக்க எண்ணியிருந்தேன். அவரது செய்கையால் எனது மனதில் இருந்த இறந்த அக்கையாரின் இடம் நிரந்தரமாகவே நிரப்பப்படாமல் இருக்கின்றது.  பெரிய பிருத்தானியாவில் இருந்து ஜனநாயக விமர்சனத்தின் பால் தீராக்காதல் கொண்ட??????? இரண்டாமவர் இதனை புறக்கணித்திருந்தார் .இருவரின் சம்மதங்கள் பெறப்பட்ட பின்னரே அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டது  இந்தப்புறக்கணிப்புக்கு முக்கிய காரணியாக இருந்தது ஆயுத எழுத்தும் நிகழ்வுக்கு அதன் நூலாசிரியரின்  நே…