பரிசு கெட்ட பாரிசும், இலக்கியங்களும் ?????- பத்தி .என்னால் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வை ( தங்களுக்கு தாங்களே பட்டங்கள் சூட்டிக்கொண்ட) ஒரு சில இலக்கிய நண்பர்கள் புறக்கணிக்க இருந்ததாக எனது முக நூல் நட்பு வட்டங்களின் சில நிலைத்தகவல்கள் தெரிவித்திருந்தன . (அவை இப்பொழுது அழிக்கப்பட்டு விட்டன ). இவர்கள் எல்லோரும் எனது நெருங்கிய நண்பர்கள் .அதிலும் இருவரின் பெயர்கள் அழைப்பிதழில் வெளிவந்தும் கூட  இறுதி நேரத்தில் அந்த இருவரும் என் பிறமுதுகில் ஆழமாக குத்தியதை என்னால் இலகுவாக கடந்து போக முடியவில்லை. முதலாமவர் அண்மையில் இறந்த எனது அக்கையாரின் இடத்திலேயே அவரை வைத்திருந்தேன். அவருக்கே சிறப்பு பிரதி கொடுத்து கௌரவிக்க எண்ணியிருந்தேன். அவரது செய்கையால் எனது மனதில் இருந்த இறந்த அக்கையாரின் இடம் நிரந்தரமாகவே நிரப்பப்படாமல் இருக்கின்றது.  பெரிய பிருத்தானியாவில் இருந்து ஜனநாயக விமர்சனத்தின் பால் தீராக்காதல் கொண்ட??????? இரண்டாமவர் இதனை புறக்கணித்திருந்தார் .இருவரின் சம்மதங்கள் பெறப்பட்ட பின்னரே அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டது  இந்தப்புறக்கணிப்புக்கு முக்கிய காரணியாக இருந்தது ஆயுத எழுத்தும் நிகழ்வுக்கு அதன் நூலாசிரியரின்  நேரடியான வருகையுமே .

இந்த நிகழ்வை புறக்கணித்த அந்த சில நண்பர்கள், நிகழ்வுக்கு நேரடியாக வந்து என்னென்ன காரணங்களுக்காக இதை புறக்கணிக்கின்றோம் என்று ஓர் துண்டுப் பிரசுர வாயிலாக சொல்லியிருந்தால் அந்தப் புறக்கணிப்பு உண்மையில் அர்த்தமுடையதாக இருந்திருக்கும். இதுவே இலக்கியப்பரப்பில் உள்ள அறமுமாகும். இறுதியில் அவர்களது புறக்கணிப்பானது ஐந்து பேர் கூடியிருந்து ஈர் பேன் பார்த்து பரஸ்பரம் முதுகு சொறிதலிலேயே முடிந்துவிட்டது. தங்களது கருத்துக்களை பொதுவெளியில் சொல்வதற்கு தில்லும், தினாவெட்டும் இல்லாத இவர்கள் இனி வருங்காலங்களில் பாரிஸ் இலக்கியப்பரப்பில் இலக்கியம் பற்றி பேசுவதற்கு எதுவித அருகதையும் யோக்கியத்தையும் அற்றவர்களாகின்றர். அத்துடன் ஆயுத எழுத்துக்கு அருகிலே ஆக்காட்டி எட்டாவது இதழும் வைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. அப்படியிருந்தும் ஆக்காட்டி தலைமை ஆசிரியர் மற்றயவர்களுடன் சேர்ந்து ஈர் பேன் பார்த்துகொண்டு பரஸ்பரம் முதுகு சொறிந்தது ஆக்காடியின் பறப்பின் மீதான சந்தேகங்களை ( ஓர்  குறிப்பிட்ட தளத்தின் கைப்பொம்மையாக மாறுதல் ) வலுப்படுத்துகின்றது . மேலும், ஆயுத எழுத்து நாவலானது யாழ்ப்பாணத்தில் மட்டுமே பலத்த ஆதரவுடன் பல்வேறு தளங்களில் இருந்து வந்த இலக்கிய ஆளுமைகளின் பங்களிப்பில் வெற்றிகரமாக நடந்தது . அங்கு இருக்கின்ற நாகரீகத்தை கடக்க புலம்( ன் ) பெயர்ந்தவர்களுக்கு நீண்டகாலம் .எடுக்கும் போல் தெரிகின்றது. இந்த ஐந்தாறுபேர் இல்லாவிடிலும் நிகழ்வு உண்மையான இலக்கிய ஆர்வலர்களுடன் வெற்றிகரமாக நிறைவேறியது. நன்றி

பிற்குறிப்பு :

எனது நிகழ்வுக்காக இவர்கள் வரவில்லையே என்ற காழ்புணர்வில் எழுதப்பட்ட ஓர் நிலைத்தகவல் இல்லை. இலக்கியப்பரப்பில் உள்ள வறுமை நிலையில் உள்ள இவர்களது பார்வையை வாசகர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்டது.


கோமகன்
25 ஐப்பசி 2015


Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.