Posts

Showing posts from November, 2015

வேலி- சிறுகதை - கோமகன்.

Image
அதிகாலை மூன்று மணிக்கு வேலையால் அறைக்கு வந்து படுத்து, செத்த சவம் போலக் கிடந்த என்னை ஐந்து மணிக்கு அடித்த போன் வெறி கொள்ள வைத்தது. மறுமுனையில் நரேன் என்ன மச்சான் நித்திரையாய் போனியே  என்று லூசுத்தனமாக தனது கதையை தொடங்கினான் . "உனக்கு தெரியும் தானே மச்சான் என்னம் ரெண்டு கிழமையிலை  எங்கடை சூராவத்தை பிள்ளையார் கோயில் கொடி ஏறுது . நீ நாளையிண்டைக்கு ஊருக்கு போறாய் தானே அதுதான் உனக்கு ஞாபகப்படுத்த எடுத்தனான்" என்றான் நரேன் .நித்திரை கலைந்த கோபத்தில் தூசணத்தால் நரேனை பேசிவிட்டு மீண்டும் படுத்தேன். எனக்கு இன்னும் கோபம் அடங்கியபாடாகத் தெரியவில்லை .நட்பு என்ற போர்வையில் நாகரீகம் தெரியாத மனிதர்களாக இருக்கின்றார்களே என்று மீண்டும் தலைகணியைக் கட்டிப்பிடித்தேன் .போன நித்திரை திரும்பி என்னிடம் வர சண்டித்தனம் செய்தது. ஆவி பறக்கும் தேத்தண்ணியை போட்டுக்கொண்டு அறையில் கிடந்த செற்றியில் இருந்தேன் .தேத்தண்ணி சாயத்தின் மணம் மூக்கில் நுழைந்து உடம்பை முறுக்கேற்றியது. தேத்தண்ணியைப் பார்த்துக்கொண்டு இருந்தேன் இந்தக் காலமை நேரத்தில் எனக்கு சூராவத்தை பிள்ளையார் கோயிலின் கொடியேத்தம் முக்கியமா ? என்று மன…

வெள்ளி 13 இன் அடுத்த நாள் - பத்தி.

Image
நேற்றில் இருந்து மனதுக்கு மிகவும் சோர்வாக இருக்கின்றது. இரவு நித்திரை வரவில்லை. காலை 4 மணிக்கு தொடங்கிய எனது இன்றைய நாள் சற்றுமுன் மாலை 4 மணிக்கே நிறைவுக்கு வந்தது . நான் அதிகாலை தொடரூந்து நிலையத்தடியில் நின்றபொழுது எனது தொடரூந்து சேவை முற்றாக நிறுத்தப்பட்டது. இது ஸ்ரட் து பிரான்ஸ் புகையிரதநிலயத்தை ஊடறுத்து பாரிஸ் செல்லும் தொடரூந்து.என் மனதில் இனம் புரியாத பயஉணர்வு பரவியது.ஏறத்தாழ 60 வருடங்களுக்குப் பின்னர் நாட்டில் வந்த இரண்டாவது அவசரகால நிலைபிரகடனம் அதிகாலை 12 மணியில் இருந்து ஆரம்பமாகியது. மக்களை வெளியில் எங்குமே செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசே கேட்டுக்கொண்டது. வெள்ளி இரவே ஆரம்பமாகும் ஹப்பி அவேர்ஸ் ஒவ்வரு பார்களிலும் அதிகாலை 4 மணிவரை களைகட்டும். நடக்கப்போகும் விபரீதம் தெரியாது பியரிலும் சாப்பாட்டிலும் இருந்த அப்பாவி மக்கள் என்ன பாவம் செய்தார்கள் ?? எல்லாமே மனக்கண் முன்னே சுழன்றடித்தன . வேறு வழியில் போய் பாதாள ரெயிலில் ஏறி இருந்தால் ஒரு பெட்டிக்கு நான்கு ஐந்து பேரே இருந்தார்கள். காலை வேளை 6 மணியளவில் போர் வீர்களின் நினைவு ஸ்தூபி இருக்கும் பகுதியான ஆர்க் து ட்ரிய…

ஒரு விசரனப்பற்றி இன்னொரு விசரன் எழுதிய கதை -வாசிப்பு அனுபவம்.

Image
நான் ஏறத்தாழ இரண்டு வருடங்களாக லண்டன் காரனாக இருந்த காரணத்தால் நாவலின் தலைப்பை பார்த்தவுடன் லண்டன் பீப்பிள்ஸ் உடைய அதிமேதாவித்தனங்களையும், அதனுடன் பயணிக்கின்ற அவர்களுடைய வாழ்வியல் விழுமியங்களையும் சேனன் புதிதாக என்ன சொல்லப்போகின்றார் என்று எண்ணிக்கொண்டே பக்கங்களைப் புரட்டினேன் . எடுத்த எடுப்பிலேயே நான் இருந்த வாழ்கை காலத்தின் மிச்ச சொச்சங்களை லண்டன்காரர் பேசத்தொடங்கியது . உலக மக்களால் "லண்டன்" என்று வாய்பிளந்து பார்க்கப்படுகின்ற பெருநகரின் அடித்தட்டு (இழி ) மக்களது வாழ்வின் அவலங்களையும், அதனூடே பயணிக்கின்ற மூன்றாம் தர அரசியல் நிலைப்பாடுகளையும் , ஓரினசேர்க்கையாளர்கள் தொடர்பான பார்வை, அண்மையில் நடைபெற்ற கலவரம், அந்தக் கலவரத்தின் நுண்ணரசியல் என்று பல கதைக்களங்களையும் கதை மாந்தர்களையும் லண்டன்காரர் மனத்திரையில் விரியச்செய்தது. இதில் சாந்தெலா "சோசலிஸ்ட் "ஆக சோசலிஸ்ட் கட்சியில் இணைவதும், அதுசம்பந்தமான உரையாடல்களும், கோட்பாடுகள் மற்றும் தத்துவங்கள் எப்படி ஓர் அமைப்பில் புனிதமாக பாதுகாக்கப்படுகின்றது என்பதை நூலாசிரியர் எள்ளி நகையாடியிருக்கின்றார்.  
"நாவல் என்றால் எத்த…

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் - பத்தி - பாகம் 12.

Image
ஹாய் யூத்ஸ் அண்ட் கேர்ல்ஸ் ,
என்ரை ஐ போனை பாத்துப்போட்டு அதென்ன நீ மட்டும் புது புது போனுகள் வைச்சிருக்கலாம் நான் என்ன குறைச்சலோ? எண்டு கொஞ்ச காலத்துக்கு முன்னாலை என்ரை தறும பத்தினி , எனக்கொரு ஐ பாட் வாங்கி தாங்கோப்பா எண்டு என்னட்டை ஆசையாய் கேட்டாள்...சரி பெரிசாய் அவள் ஒண்டும் கேக்கிறேலைத்தானே எண்டு நானும் ஒரு " ஐ பாட் எயார் "வாங்கி குடுத்தன் ..ஆளுக்கு அப்பத்தான் தானும் என்னை மாதிரி ஈக்குவலாய் இருக்கிறதெண்டு புள் ஹப்பியாய் இருந்திச்சுது . றோட்டாலை போற சனியை தூக்கி நடுவீட்டுக்கை செற்றியிலை இருத்தி வைச்சிருக்கிறன் எண்டு எனக்கு சிவசத்தியமாய் தெரியேலை பிள்ளையள் . இண்டைக்கு ஒரு அலுவலாய் வெளியாலை போனன். அலுவலை முடிச்சு போட்டு வீட்டை வர பிந்திப்போச்சுது. நான் பசி அவதியிலை சாப்பிடேக்கை மனுசி கேட்டுது , இன்ன இன்ன இடத்திலை எல்லாம் நிண்டனி. அங்கை உனக்கு என்ன வேலை எண்டு ? நான் போன இடமெல்லாம் எந்த கிரகம் நான் இங்கை வாறதுக்குள்ளை போட்டுக்குடுத்தவன் எண்டு எனக்குள்ளை யோசிச்சு கொண்டு, "என்னப்பா இவ்வளவு நேரமும் அலுவல் பாத்துப்போட்டு வாறன். விசர் ஞாயம் பறையிறீர்" எண்டன். அதுக்கு அவா ச…

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

Image
அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…