Posts

Showing posts from December, 2015

கோமகனின் 'தனிக்கதை ' -அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய வாசிப்பு அனுபவப்பகிர்வில் சமர்ப்பிக்கப்பட்ட நயப்புரை.

Image
கோமகனின் ஒவ்வொரு கதையும் புனையப்பட்டதாக தெரியவில்லை. நடந்த நிகழ்வுகளின் பதிவாகவே தோன்றுகிறது. குறும்படமோ திரைப்படமோ தயாரிக்கத்தக்க கதைகள்.
0000000000000000000000000
இந்த 16 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் பெரும்பாலான சிறுகதைகள், சமூKomakan Book Coverகப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள், சாதிப் பிரச்சினைகள் இவற்றின் பிரதிபலிப்பாகவே அமைந்துள்ளன.
சமூகத்தின் அவலங்களை அப்படியே தத்ரூபமாக தனக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார். இவர் பயன்படுத்தும் கிராமிய வட்டார வழக்குச் சொற்கள் இன்றைய இளையதலைமுறையினர், குறிப்பாக புலம்பெயர்ந்து பல திசைகளில், வெளிநாடுகளில் சிதறியிருக்கும் அம்மண்ணுக்குச் சொந்தங்கள் அறிவார்களா?
ஒவ்வொரு கதையும் புனையப்பட்டதாக தெரியவில்லை. நடந்த நிகழ்வுகளின் பதிவாகவே தோன்றுகிறது. அதற்கு கோமனின் கிராமிய மண்வாசனை கலந்த வார்த்தைகளின் அழகும், அதில் அவர் புகுத்தியிருக்கும் உணர்வுகளின் அழுத்தமும் மிகப் பெரிய காரணிகளாக இருக்கின்றன.
‘சின்னாட்டி’ கதையின் நாயகன், சின்னாட்டி ஒரு கீழ்ச்சாதிக்காரன், பறையடிப்பதில் வில்லாதி வில்லன். ஊரில் சாவு விழுந்தால் நடக்கும் சடங்குகள் அப்படியே தெள்ளத்தெளிவாக வர்ணிக்க…

சகோதரி அருண். விஜயராணிக்கு பிரியாவிடை

Image
மேதாவிலாசம் கொண்டவர்களுக்கு அற்பாயுள்தான் என்பது எழுதப்படாத விதி. எம்மிடமிருந்து விடைபெறும் எமது அருமைச்சகோதரி, எங்களுக்கெல்லாம் ஒரு பாசமலராக வாழ்ந்தவர். இவ்வளவு சீக்கிரம் அவருடைய பெற்றவர்களும் மாமா மாமியாரும் இவரை அழைத்துக்கொள்வார்கள் என்று நாம் கனவிலும் நினைத்திருக்க மாட்டோம்.
ஆனால் கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்துபோகும் மேகங்கள்தான் என்று விஜயராணியின் ஆதர்சக்கவிஞர் சொல்லியிருக்கிறார்.
அந்தக்கவிஞரே மரணத்தின் தன்மை சொல்வேன். மானிடர் ஆன்மா மரணம் எய்தாது மறுபடி பிறந்திருக்கும் என்றும் சொல்லிவிட்டுத்தான் சென்றார். அவ்வாறு எங்கள் விஜயராணிக்கு ஆதர்சமாகத்திகழந்தவர்களிடம்தான் இவரும் செல்கிறார் என்று நாம் எமது மனதை தேற்றிக்கொள்வோம். அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும் பன்முகம்கொண்டவை. இப்படியான அபூர்வமான மனிதர்கள் ஆயிரத்தில் ஒருவராகத்தான் இருப்பார்கள்.
குடும்பப்பாசம் சகோதர வாஞ்சை உறவுகளுடன் தீராத நேசம் ஆன்மீக நம்பிக்கைகள் நட்புகளை பேணும் இயல்பு கலை இலக்கியம் ஊடகம் வானொலி திரைப்பட ரசனை சமூகம் குறித்த கரிசனை மனிதநேயத்தொண்டுணர்வு இவற்றுக்கிடையே சிறுமைகண்டு பொங்கிடும் தர்மாவேசக்குரல் அ…

" இலங்கையில் நீடித்த போருக்குப் பிந்திய இலக்கியப்படைப்புகள் காலத்தின் தேவை "

Image
" ஈழத்து இலக்கியவளர்ச்சியில் முன்னர் மறுமலர்ச்சிக்காலம், முற்போக்கு - பிMr.Vanniyakulam.02JPGரதேச இலக்கியம் - மண்வாசனை, தேசிய இலக்கியம் என்பன பேசுபொருளாக இருந்தமைபோன்று, யுத்தம் தொடங்கியதும் போர்க்கால இலக்கியமும் ஈழத்தமிழர்களின் வெளிநாட்டு புலப்பெயர்வையடுத்து புகலிட இலக்கியமும் பேசுபொருளாகின. இன்று யுத்தம் முடிந்துள்ளது. இனி எழுதப்படும் இலக்கியங்கள் போருக்குப்பிந்திய இலக்கியமாகப் பேசப்படவிருப்பதனால் ஷோபா சக்தியின் (BOX) பொக்ஸ் முதலான படைப்புகள் வெளியாகத் தொடங்கிவிட்டன. எனவே இதனை வளர்த்தெடுக்கவேண்டிய கடமை அனைத்து படைப்பாளிகளிடமும் இருக்கிறது. " 

என்று அண்மையில் அவுஸ்திரேலியா - மெல்பனில் நடந்த வாசிப்பு அனுபவப்பகிர்வில் உரையாற்றிய இலக்கியத்திறனாய்வாளர் திரு. சி. வன்னியகுலம் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய வாசிப்பு அனுபவப்பகிர்வு சங்கத்தின் நடப்பாண்டு துணைத்தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் மெல்பனில் Mulgrave Neighborhood House மண்டபத்தில் நடந்தது.

வாசிப்பு அனுபவப்பகிர…

மாதுமை - சிறுகதை - கோமகன்.

Image
ராகவனின் சொந்த மண் கோண்டாவிலாக இருந்தது. அவன் அவனது மச்சாள் மகேஸ்வரியை கலியாணம் செய்து மாதுமை என்ற பெண் குழந்தைக்கும் அப்பாவாக இருந்தான் .நாட்டு நடப்புகள் அவனை சிப்பிலி ஆட்டின. ரெண்டு பக்கத்து சீருடைகளுக்கும் இடையில் அவனது உயிர் மங்காத்தா விளையாடியது .கோண்டாவில்  இந்து கலவன் பாடசாலையில் அதிபராக பேராய் புகழாய் ராஜகுமாரன் போல் இருந்த ராகவன், ஒருநாள் பல தேசங்கள் கடந்து நொந்த குமாரானாய் ஓர் இலையுதிர் காலமொன்றில் பாரிஸுக்கு என்றியானான். அவனுடன் படித்த குணாவின் அறையில் எட்டுடன் ஒன்பதானான். முப்பது மீற்ரர்  பரப்பளவை கொண்ட ரகுவின் அறையில் ராகவனுக்கு நிலத்திலேயே படுக்க இடம் கிடைத்தது. அந்த அறை ஒன்றும் பெரிய மாளிகை இல்லை. அந்த அறைக்குள்ளேயே குசினி இருந்தது. ஒரு காஸ் குக்கர், ஒரு பானை, ரெண்டு பெரிய சட்டிகள், தேத்தண்ணி போட ஒரு லெக்ரிக் கேத்தில், இவ்வளவும் தான் அந்த குசினியின் அசையாச் சொத்துக்கள். அறையின் ஓரத்தில் சின்ன மறைப்பு போட்டு ரொய்லெட் பிளஸ்  நிண்டு குளிக்கிற அறை இருந்தது. அந்த  ரொய்லெட்டில் யாரும் விட்டுவீதியாக ரொய்லெட் போக முடியாது. எட்டுப் பெடியளுக்கு முன்னால் அவதானமாகத்தான் போகவேண்டும்…

ஒரு சில படைப்பாளிகளின் பார்வையில் பாலியல் தொழிலார்கள்

Image
ஒரு சில படைப்பாளிகளின் சிந்தனைப்போக்குகளை பார்க்கையில் எனக்கு அவர்களின் அறியாமை மீது இரக்கமே ஏற்படுகின்றது. தங்கள் படைப்புகளில் பெண்களின் மீது உள்ள பார்வைகளை முற்போக்கு சிந்தனைகளாகக் காட்டும் இந்தப்படைப்பாளிகள், நடைமுறைகளில் அவ்வாறு காட்டிக்கொள்வதில்லை. அண்மையில் எனது சக படைப்பாளியான ஒரு கவிஞர் டெல்லியில் இருந்த பாலியல் தொழிலார்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்த மனிதாபிமான உதவிகளை எள்ளி நகையாடி இருந்தார்.அத்துடன் மற்றயவர்களுக்கு போதனையும் செய்திருந்தார். அதில் அவரது பெண்கள் மீதான இழி பார்வையும், ஆணாதிக்க மனோபாவவுமே மேலோங்கி இருந்தது .
குகைகளில் விலங்குகளுடன் விலங்குகளாக இருந்த மனிதனின் சிந்தனை போக்குகளில் ஏற்பட்ட மாற்றங்களே நாகரீகங்களின் வளர்ச்சி நிலையும் அத்னூடாக வந்த இன்றைய வாழ்வு முறைமைகளும். ஆனால் ஒருசிலருக்கு இந்த வளர்ச்சிகள் ஒவ்வாமையாகக் காணப்படுகின்றது. மானுட வாழ்வில் ஓர் ஆணும் பெண்ணும் சம அளவிலான உயிரிகள். .ஆனால் மானுட நாகரீகப் போக்குகளிலே உடல்வலுவால் பலம் கொண்ட ஆண்களால் பெண்ணானவள் இரண்டாம் தரப்பிரஜையாக நடாத்தப்பட்டாள். இதற்கு உலகிலுள்ள மதங்கள் அனைத்துமே ஊக்கிகளாக ச…

நிலவு குளிர்சியாக இல்லை -திறனாய்வு நோயல் நடேசன்.

Image
கனடா எழுத்தளர் மாரக்கிரட் அட்வூட்‘ மற்றவர்கள் கதைகளை நாம் படிப்பதன் மூலம் நாங்கள் நல்ல கதை சொல்லிகளாக மாறுகிறோம்’ என்றார். கதை சொல்வது காலம் காலமாக ஒவ்வொரு சமூகத்திலும் இருந்தது. அச்சு எழுத்துகள் வருவதற்கு முன்பு கதை சொல்லலே எமது ஊடகம்.
சிறுகதை ஒரு இலக்கியவடிவமாக வரும் போது அங்கு பாத்திரம், மொழி ,உணர்வு, மற்றும் நோக்கம் என பல விடயங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சாதாரணமான குடிசையாக இருந்தது அழகியவீடாக வருவதற்கு ஒத்தது.
நமது சமூகத்தில் சிறுகதை எழுத்தாளர் அதிகம் காரணம் சிறுகதைகளை உடனே படித்துவிடுவது வாசகர்களுக்கு மடடுமல்ல,அவற்றை பிரசுரிக்கும் மாத,வாரப்பத்திரிகைகளுக்கும் இலகுவானது. இந்த இலகு தன்மையையே இந்த வகையான இலக்கியத்தை உருவாக வழி வகுத்தது. மற்ற நாடுகளில் சிறுகதை இலக்கியம புகழ் பெற்றாலும் அமரிக்காவே தாய்நாடு என்கிறார்கள். தற்போது பல சஞ்சிகைகள் சிறுகதையை பிரசுரிப்பதில்லை. ஆனால் இன்னமும் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் மொழிபெயர்ப்பு செய்தும் நியோக்கர் சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும்.
சமீபத்தில் அமரிக்கா சென்றபோது ஒரு நியூக்கர் சஞ்சிகையை வாங்கிப் வாசித்தபோது அதில் இஸ்ரேலிய ஹிப்ரு மொழியில் வ…

அவுஸ்திரேலியா - மெல்பனில் (05-12-2015) நான்கு நூல்களின் வாசிப்பு அனுபவப்பகிர்வு லெ .முருகபூபதி

Image
கல்லிலிருந்து கணினி வரையில் அனைத்து மொழிகளும் பயணித்துக்கொண்டிருக்கின்றன. இனிவரும் யுகத்தில் மொழிகள் எதில் பதிவாகும் எனக்கூறமுடியாது. ஆனால் மொழிகள் வாழும். மறையும்.
வாசகர்களிடத்தில்தான் மொழியின் வாழ்க்கை தங்கியிருக்கிறது. அதனால்தான் வாசிப்பு மனிதனை முழுமையாக்கும் என்று எமது முன்னோர்கள் சொன்னார்கள். ஆனால், இந்த நூற்றாண்டில் மக்கள் வாசிப்பதற்காக தேர்ந்தெடுத்துள்ள சாதனங்கள் இலகுவாகிவிட்டது. அவற்றில் படிக்கலாம். பார்க்கலாம். ரசிக்கலாம். சிரிக்கலாம், கோபிக்கலாம். உடனுக்குடன் பதில்களையும் பதிவேற்றலாம். ஆயினும் அச்சில் வெளியாகும் படைப்புகளுக்கும் பத்திரிகை இதழ்களுக்கும் மதிப்பு இன்னமும் குறையவில்லை. இணையத்தளங்கள் , வலைப்பூக்கள் வந்தபின்னரும் அவற்றில் எழுதுபவர்கள், பின்னர் நூலுருவாக்குவதற்கு விரும்புவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. இன்றும் கணினி அறிவு அந்நியமாகியிருக்கும் வாசகர்களுக்கு, குறிப்பாக முதியவர்களுக்கும் மூத்ததலைமுறையினருக்கும் அச்சுப்பிரதிகள்தான் வாசிப்புத்தாகத்தை தணித்துவருகின்றன. தமிழ் சமூகத்தில் புத்தகசந்தைகள் - கண்கா…