Posts

Showing posts from September, 2016

ஈஸி ஜெட்டில் ஈசியில்லா பயணம் – பத்தி -கோமகன்.

Image
போன மாசம் வியாழன் மாறினது மற்றாக்களுக்கு நல்லதோ கூடாதோ எண்டது எனக்கு சிவசத்தியமாய் தெரியாது. ஆனால் நான் இந்த ஒருநாள் லண்டன் பயணத்தாலை எனக்கு வந்த குளறுபடியளை உங்களுக்கு சொல்லுறன் கண்டியளோ. ஒருநாள் என்ரை மனுசி எனக்கு சொன்னா ‘இஞ்சரப்பா நியூசிலாந்திலை இருந்து என்ரை கூட்டாளி குடும்பம் லண்டனிலை இருக்கிற அவையின்ரை தமக்கை வீட்டை வருகினமாம்.
எங்களை லண்டனிலை வந்து பாக்க சொல்லி கேக்கினம். ஒருக்கால் போட்டு வருவமே ‘எண்டு கேட்டுது. சரி என்னட்டை பெரிசாய் ஒண்டும் கேட்டு அரியண்டம் பண்ணாத மனிசி கேக்கிறாதாலை சரி போவம் எண்டு சொன்னன். நான் பேந்து வேலை பிராக்கிலை உதுகளையெல்லாம் அயத்து போனன்.

ஒருநாள் நான் வேலை முடிஞ்சு தும்பாகி போய் வர , என்ரை மனுசி கையிலை லண்டனுக்கு போக ரிக்கற்ரோடை நிண்டா. என்ன ஏது எண்டு வாங்கி பாத்தன். அந்த ரிக்கற் எனக்கும் சேத்து மனுசி ஈசி ஜெட்டிலை போறதாய் இருந்துது. எனக்கு கண்டியளோ நாடி விழுந்து போச்சுது . ஏற்கனவே என்ரை கூட்டாளி ஒருத்தன் இந்த ஈசி ஜெட்டிலை போய் நொந்து நூடில்ஸ் ஆன கதை மண்டையிலை லைட் அடிச்சுது .நான் மனுசியை கேட்டன் ‘கட்டாயம் இதிலை போகவேணுமோ ? யூறோ ஸ்ராறாலை போகேலாதோ ‘எண்டு …

உயிரணை - நூல் விமர்சனம்-கோமகன்.

Image
ஈழத்தில் போர்க்காலப் படைப்புகள் பல வந்தன / வந்து கொண்டிருக்கின்றன .இவைகள் பல சுயவிமர்சனங்களையும் சுய பரிசோதனைகளையும் மேற்கொண்டன . இந்தப்படைப்புகளை படைத்தவர்கள் எல்லோருமே மிக முக்கியமாக "உண்மைகளை எடுத்து சொல்கின்றோம்" என்று போரியலைத்தளமாகக் கொண்ட படைப்பாளிகளால் முன்நிலைப்படுத்தப்பட்டன.போரியல் படைப்பாளிகளை மக்கள் சந்தேகக்கண் கொண்டு பார்த்தனர். இதற்கு மிக முக்கிய காரணியாக அவர்களில் பலர் இறுதி போரில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வாழ்வு பெற்று வெளியே வந்தவர்கள். இந்தப் போரியற்படைப்பாளிகள் கூறிய சங்கதிகளை தமிழ்த்தீவிர தேசிய உபாசகர்களும் அவர்சார் படைப்பாளிகளும் மறுதலித்து, இல்லையில்லை அவைகள் எல்லாம் உண்மைக்குப் புறம்பானவை. இவைதான் உண்மை என்று தங்கள் தரப்புப் படைப்புகளின் ஊடாக வாசகர் முன்னே வைத்தனர். ஆக இங்கு "உண்மை" என்பது இரண்டு பக்கமும் அல்லாடியது எனலாம் . அந்தவகையில் நேசக்கரம் சாந்தியின் "உயிரணையும் " உண்மைநிலையை எடுத்து சொல்வதாக சொல்லி நிற்கின்றது .
இலக்கியத்தில் உண்மை நிலை பற்றி தத்துவமேதை ஹெகல் பின்வருமாறு வரையறை செய்கின்றார் "உண்மை&quo…

"கலை என்பது அதுசார்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருத்தல் வேண்டும்" - நேர்காணல் -ஷாலினி சாள்ஸ்.

Image
ஈழத்தின் வடபுலத்தில் உள்ள சாவகச்சேரியைப் பிறப்பிடமாக கொண்டு யாழ்நகரில் வசித்துவரும் ஷாலினி சார்ல்ஸ், வளர்ந்துவருகின்ற இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பன்முக ஆளுமையுடையவராக எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்டவர். திரைப்பட நெறியாட்கை,குறும்படத்தயாரிப்பு , சமூக சேவை , யாழ்என்ரர்ரெயிமென்ற் ,மற்றும் யாழ் அறக்கட்டளை ஸ்தாபகர் என்று பலதுறைகளில் தனி முத்திரை பதித்து இருக்கின்றார் இவரே தொடர்ச்சியாக திரைப்படங்களைத் தந்துகொண்டிருக்கின்ற ஈழத்தின் முதல் பெண் இயக்குனர் என்ற தகமையையும் பெறுகின்றார்.இவரது "உயிர்வலி" குறும்படம் விருதை தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது . திரைப்படம் ,சமூகம், அரசியல் என்று தனது எண்ணப்பாடுகளை " வல்லினம் "  இலக்கிய சஞ்சிகை வாசகர்களுடன் ஷாலினி சார்ல்ஸ் மனம் திறகின்றார். அண்மையில் நான் தாயகம் சென்றிருந்த பொழுது மலேசியாவில் இருந்து வெளியாகும் வல்லினம் இலக்கிய சஞ்சிகை வாசகர்களுக்காக பிரத்தியேகமாக பதிவுசெய்யப்பட்ட நேர்காணல் இது.
கோமகன்

உங்களை எப்படியாக தெரிந்து கொள்வது ?
அடிப்படையில் நான் மிகவும் சாதாரணமானவள்.என்னைப்பற்றி நான் சொல்வதைவிட ம…