Posts

Showing posts from 2017

நேர்காணல்

Image
வணக்கம் வாசகர்களே மற்றும் இலக்கிய ஆர்வலர்களே !!
அண்மையில் நான் தாயகம் சென்றிருந்த வேளையில் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகம் திட்டத்தின் கீழ் ஆவணக்காப்பகம் என்னை ஓர் நேர்காணல் செய்திருந்தது. இதுவரையில் எனது வாசகர்கள் என்னைப்பற்றி அறிந்திராத தகவல்களும் இலக்கிய சங்கதிகளும் இந்த நேர்காணலின் பேசுபொருளாக இருந்தன. நேர்காணலை செய்திருந்த ஜீவநதியின் பிரதம ஆசிரியர் பரணிக்கும் மற்றும் ஆவணக்காப்பகத்துக்கும் மிக்க நன்றிகள். வாசகர்கள் பின்வரும் இணைய சுட்டியில் நேர்காணலின் ஒலிவடிவை கேட்கலாம் என்பதனை அறியத்தருகின்றேன். நன்றி . நேசமுடன் கோமகன்
http://aavanaham.org/islandora/object/noolaham%3A13824

வாசகர்களுக்கு ஓர் அறிவித்தல்

Image
வணக்கம் வாசகர்களே
எனது வலைபூக்களான

koomagan.blogspot.fr

vadakovaiouraan.blogspot.fr

koovaiuraan.blogspot.fr

ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீங்கள் பின்வரும் எனது இணையத்தளத்தின் மூலம் பாரவையிட முடியும் என்பதனை அறியத்தருகின்றேன். வலைப்பூக்களில் உள்ள பதிவுகள் யாவும் புதிய இணையத்தளத்திற்கு மாற்றம் செய்யப்பட்டவுடன் எனது வலைப்பூக்கள் அனைத்தும் செயல் இழக்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றேன்.எனது புதிய இணையத்தளத்தைப் பார்வையிட இந்தக்கதவினுடாக செல்லுங்கள்

www.naduthal.com

தளத்தின் வடிவமைப்பு பற்றிய உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள் நன்றி .

நேசமுடன் கோமகன்

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் - பத்தி - பாகம் 14.

Image
ஹாய் போய்ஸ் அண்ட் கேர்ல்ஸ் ,
சுறுக்கர் காலங்காத்தாலை எழும்பி சுப்பிரபாதம் கேட்டுக்கொண்டு நல்லாய் முழுகி சாமி படத்துக்கு முன்னாலை கிடந்த திருநூத்தை நெத்தி முட்ட அள்ளி பூசிக்கொண்டு கலண்டரை கிழிச்சால் இண்டைக்கு உலக மழலையள் தினம் எண்டு போட்டு கிடந்திது . சின்னன் பொன்னனுகளை ஞாபகப்படுத்திறது நல்ல விசையம் கண்டியளோ . ஆனால் சுறுக்கருக்கு எப்பவும் வில்லங்கமாய் மண்டையிலை ஓடுறது பரவணி புத்தியாய் போச்சுது. நாங்கள் உண்மையிலை சின்னனுகளை நல்லவிதமாய் பாத்தாமோ எண்டு நெஞ்சிலை கைவைச்சு கேட்டால் மனுசனுக்குப் பிறசர் தான் ஏறும்.ஒருகாலத்திலை சண்டை பிடிக்கிறம் எண்டு குஞ்சு குருமனுகளை கொண்டு போய் முன்னாலை விட்டுப்போட்டு பின்னாலை நாங்கள் கவர் எடுத்தம் . அங்காலை மகிந்தனும் சின்னன் பொன்னனுகளைத்தான் எயிம் பண்ணி அடிச்சான் ஏனெண்டால் அதுகள் ரெறறிஸ்ட்டாம். இதுகளுக்கை தப்பி பிழைச்சதுகளை சந்தணம் மெத்தினதுகள் போய் சின்ன வயசிலையே படுக்க வாங்கோ பிள்ளையள் எண்டு கூப்பிட்டீச்சினம். உந்த பழிபாவங்கள் எல்லாம் எங்கடை சனத்தை பிடிச்சு ஆட்டுது கண்டியளோ .
ஆசியாவிலை எங்கடை நாடுதான் மழலைகள் பாலியலிலை கொடிகட்டி பறக்குது . இதுக்கெண்டே…

மிருகமொழி - மூன்று கதைகளை வைத்து ஓர் கதையாடல்.

Image
முதன்முதலாக ஐந்தறிவு மிருகங்கள் பேசுவதை விலங்குப்பண்ணை என்கின்ற நாவல் வடிவில் தந்தவர் இந்திய வம்சாவழியை சேர்ந்த ஆங்கிலேயரான எரிக் ஆர்தர் பிளேயர்(Eric Arthur Blair) என்ற ஜோர்ஜ் ஆர்வெல் (George Orwell) ஆகவே இருக்கமுடியும். அதில் 'அதிகாரபோதையானது ' காலப்போக்கில் நல்ல நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்படுகின்ற புரட்சிகளை எப்படியெல்லாம் நீர்த்துப்போகச்செய்கின்றது என்பதை ஓர் பண்ணையில் ஸ்னோபால் மற்றும் நெப்போலியன் என்ற பன்றிகளை பிரதான கதை சொல்லிகளாகவும் ஏனைய மிருகங்களையும் ஒன்று சேரவைத்துப் பேச வைப்பதன் ஊடாக கம்யூனிசத்தின் மீதான விமர்சனமாகவும் எப்படி ஓர் விலங்குப்பண்ணை அதிகார போதை கொண்ட பன்றிகளின் பண்ணையாக மாறுகிறது என்பதனையும் எல்லாவிதமான அதிகாரங்களையும் நோக்கி நகருகின்ற புரட்சிகள் எப்படியாக முடியும் என்பதனையும் அதில் ஜோர்ஜ் ஆர்வெல் விபரித்திருப்பார்.
இந்த வருடம் விலங்குப்பண்ணையை ஆதர்சமாகக் கொண்டு மூன்றுசிறுகதைகள் பொதுவெளியில் வெளியாகி இருந்தன.
01 ஏறுதழுவல்-கோமகன் 
02 ஒரு தனி ஆட்டின் கதை-உமையாழ் பெரிந்தேவி.
03 நல்லாயனின் ஆடு- கிஷோகர் ஸ்ரனிஸ்லஸ்.


கோமகன் எழுதிய ‘ஏறுதழுவல்’ கதையானது இந்த…

வாசிப்பு அனுபவம் “கேரளா டயரீஸ்” ஐ முன்வைத்து.

Image
மனித நாகரீகம் தோன்றிய காலம் தொட்டு அதிகாரங்களானது வரலாறுகளைத் தமது பிடியினிலேயே வைத்திருந்தன. தமது இருப்பை தகவமைத்துக்கொள்வதற்காக அவை என்றுமே வரலாறுகளுடன் சமரசம் செய்து கொண்டதும் இல்லை. காலத்துக்காலம் இந்த அதிகாரங்கள் புதிய கருத்தியல் உருவாக்கங்களுடன் வரலாறுகளைப் புதுப்பித்துக்கொண்டிருந்தன.அவையே சந்ததி சந்திகளாக கடத்தப்பட்டும் கொண்டிருக்கின்றன.இதற்கு ஈழத்தமிழர்களது வரலாறும் விதிவிலக்கல்ல.ஈழத்தின் பெரும்பான்மை சமூகம் தமது இருப்பை தகவமைத்துக்கொள்ள பல புதிய கருத்தியல் யுத்தங்களை முன்னெடுக்கின்ற அளவிற்கு ஈழத்து தமிழ் சமூகம் தமது வரலாறுகளை தகவமைத்துக்கொள்ளப் பின்நிற்கின்றது. மூன்று கொலனித்தவ நாடுகளின் பிடியில் இருந்த ஈழத்துத் தமிழர்களது வரலாற்றுத் தகவல்கள் போதியளவு ஆவணப்படுத்தவில்லை. அண்மையில் ஈழத்தை சேர்ந்த அருளினியன் பொதுவெளியில் எழுதியிருந்த “கேரளா டயரீஸ்” ஈழத்துத் தமிழர்களது வாழ்வியலையும் பண்பாட்டு விழுமியங்களின் ஆணி வேரை கண்டடைவதில் காத்திரமான பங்கை வகித்திருக்கின்றது. அத்துடன் நில்லாது மலபாரின் வாழ்வியலும் ஈழத்துத்தமிழரது வாழ்வியலும் எந்தவகையில் ஒத்துப்போகின்றது என்பதை கருத்தியல் ரீ…

"துவக்குகள் பேசிய காலத்தில் வண்டிலுக்குப் பின்னால் பூட்டிய மாடுகள் போல் பேனைகள் இருந்தன- வி. ரி. இளங்கோவன்- நேர்காணல்.

Image
அலட்டல்கள் இல்லாத இலகு தமிழ் சொல்லாடல்களுக்குச் சொந்தக்காரர் வி. ரி. இளங்கோவன். அன்றில் இருந்து இன்றுவரை இவரது பேனை ஓய்ந்தது இல்லை. ஈழத்தின் வடபுலமான தீவகங்களில் ஒன்றான புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டு பாரிஸில் வாழ்ந்துவரும் வி ரி இளங்கோவன் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், இடதுசாரிய சிந்தனையாளர், ஊடகவியலாளர், சித்த ஆயுர்வேத மருத்துவர் என்று பல்துறைசார் ஆளுமைகளை தன்னகத்தே கொண்ட பாரிஸின் மூத்த இலக்கிய ஆளுமையாக எம்மிடையே இருக்கின்றார்.கே.டானியலின் பாசறையில் வளர்ந்த முதன்மைப் போராளி. இவர் தனது புனைபெயரை 'அசலகேசரி' என்று வைத்துக்கொண்டாலும் தனது சொந்தப் பெயரிலேயே பல படைப்புகளை எமக்குத் தந்திருக்கின்றார்.இதுவரையில் கவிதைத்தொகுதிகளாக 'கரும்பனைகள்', 'சிகரம்', 'இது ஒரு வாக்குமூலம்', 'ஒளிக்கீற்று' என்பனவும், சிறுகதைத் தொகுப்புகளாக 'இளங்கோவன் கதைகள்', 'Tamil Stories frome France' - இளங்கோவன் கதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பு, 'இப்படியுமா..?','பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க்கதைகள்' - இளங்கோவன் கதைகள் இந்தி மொழிபெயர்ப்பு என்பனவும்…

சுறுக்கரின் இலக்கிய ரசம்- பாகம் 01.

Image
அந்தக்காலத்து லவ்சிலை கொஞ்சம் வித்தியாசமாய் பெடியள் திங்க் பண்ணி இருக்கிறாங்கள் எண்டுதான் சொல்லவேணும் கண்டியளோ . இந்தக்காலத்திலையும் பெடி பெட்டையள் தாய் தேப்பனுக்கு தெரியாமல் லவ்சி உருகி இருக்கினம் . அதுகளை சொன்னால் மனுசனுக்கு பிறஸர் தான் ஏறும் . எப்பிடி பட்டாவது காயை மடக்கி போடவேணும் எண்டு கனக்க றிக்கியளை இந்தகாலத்து பெடியள் வைச்சிருக்கிறாங்கள் கண்டியளோ. பெடிச்சிக்கு பெடிச்சியின்ர பேரை இல்லாட்டில் படத்தை பச்சை குத்தி காட்டிறது. இடையில ஏதாவது ரெண்டு பேருக்கும் ராட்டல் எண்டால் கையிலை பிளேட்டாலை வெட்டிறது ( இதை ரெண்டு பேரும் செய்வினம்). பேந்து தாய் தேப்பனுக்கு மாற்றர் லீக் ஆச்சுதெண்டால் பெடிச்சியை கிளப்பி கொண்டு ஓடுறது எண்டு இவையள் செய்யிற அலப்பரையள் சொல்லி வேலையில்லை கண்டியளோ. உது ஊரிலையும் அப்பிடித்தான் இங்கையும் அப்பிடித்தான். இங்கை கொஞ்சம் கொஞ்சம் டெவலப் எண்டு தான் சொல்ல வேணும் . இங்கை பெடிச்சிக்கு பிள்ளையையும் குடுத்துப்போட்டு பெடிச்சியை கிளப்பி கொண்டு வேறை நாடுகளுக்கு போய் அங்கை இருந்து கொண்டு தாய் தேப்பனோடை கேம் ஐ கேக்கிறது. இது இந்தக்காலத்தியான் பெடி பெட்டையளின்ரை சேட்டை…

‘தமிழ் அடையாளத்தைப் பேணும் அதேவேளை மொழி, இன, மத எல்லைகளைக் கடந்து இலக்கியத்தை நேசிக்க, மதிக்க, கொண்டாட முன்னிற்பவன் நான்.’ - நேர்காணல் -சோ.பத்மநாதன்-இலங்கை.

Image
இலங்கையின் வடபகுதி யாழ்நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட சோ.பா என்றழைக்கப்படும் சோ.பத்மநாதன் பன்முக ஆளுமையுடைய ஓர் முதுபெரும் இலக்கியவாதிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றார். ஓர் மொழிபெயர்பாளராகவும், கவிஞராகவும் எழுத்தாளராகவும் இருக்கும் சோ.பா அவர்கள் ஈழத்து இலக்கிய வெளிக்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இதில் வேற்று மொழிக்கவிதைகளை தமிழுக்குக் கொண்டு வந்தது முக்கியமானது. பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் அதிபராகப் பணியாற்றிய இவரது கவிதைகள் யாவுமே தத்துவச்சிக்கல்களிலோ அல்லது கோட்பாட்டு சித்தந்தங்களிலோ தன்னைக் கட்டுப்படுத்தாது மிகவும் எளிமையாக யாழ்ப்பாணத்து வட்டாரவழக்கில் அனைத்து தரப்பு வாசகர்களையும் சென்றடைந்தது கவனிக்கப்படவேண்டியதாகும். உதாரணமாக அண்மையில் ஜெர்மன், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அப்பிளும் வெள்ளரியும் என்ற கவிதை இவ்வாறு வருகின்றது,
அப்பிளும் வெள்ளரியும்
திருநெல்வேலிச் சந்தை காலை ஏழு மணி நடைபாதையில் இரண்டு குவியல்கள் கள்ளிப் பெட்டியின் மேல் அழகாக அடுக்கப்பட்டிருந்தன அப்பிள் பக்கத்தே – நிலத்தில் - சாக்கின் மேல் குவிக்கப்பட்டிருந்தன வெள்ளரி!