சமகாலத்து ஜீவநதி பற்றிய எனது பார்வை - விமர்சனம்

நான் இங்கு வெளிக்கிடுவதற்கு இரண்டு நாட்கள் முதலே பரணியுடன் நேரடியாக கதைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எனக்கு நேரம் இல்லாத காரணத்தால் அதில் விடுபட்ட கருத்துக்களையும் சேர்த்து இன்னும் சிறிது விரிவாக்கலாம் என எண்ணுகின்றேன். ஜீவநதி தொடர்ச்சியாக வெளியாக வேண்டுமானால் அடிப்படையில் சில மாற்றங்களை செய்வது அத்தியாவசியமாகின்றது.

01 மாதாந்த சஞ்சிகை என்ற நிலையில் இருந்து விலகி காலாண்டு சஞ்சிகை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சஞ்சிகையாக அச்சுப்பதிப்பில் வெளியாக வேண்டும். அப்பொழுது போதிய கால அவகாசம் இருப்பதால் சஞ்சிகையின் தரத்தை உயர்த்த முடியும். அத்துடன் நிர்வாக செலவுகளையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

02 எழுத்தாளர்கள் என்பது தனிய தாயகத்தில் மட்டும் இருப்பதில்லை. புலம்பெயர்ந்த நாடுகள் மற்றும் தமிழகத்தை உள்ளடக்கியுள்ளதே எழுத்தாளர் வட்டம் . ஜீவநதியில் இதுவரை தமிழகத்து எழுத்தாளர்களது ஆக்கங்களை நான் பார்க்கவில்லை. எழுதுபவர்கள் துடக்குப் பார்க்கின்றார்கள் என்று சொல்வதை விடுத்து ஜீவநதியும் துடக்கு பார்க்கும் நிலையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.

03 சந்தைப்படுத்தல் விடயத்தில் எனக்குத் தெரிந்து தாயகத்தில் கிழக்கு, மலையகத்தில், மந்தமான நிலையே இருக்கின்றது. அத்துடன் தமிழகத்திலும் இந்த சஞ்சிகை கிடைக்க செய்ய வேண்டும்.

04 மேற்சொன்ன பரிந்துரைகள் நிறைவேற வேண்டுமானால் தொடர்பாடல் முக்கிய இடத்தை வகிக்கின்றது. அதற்கு இப்பொழுது இருக்கின்ற "மாதமொருமுறை பிரசுரம்" நிலையில் மாற்றங்களை கொண்டுவரும் பொழுது தொடர்பாடலுக்கு நேரம் கிடைக்கும் அத்துடன் யாழ்ப்பாணத்தில் நிகழ்கின்ற இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளுக்கு பரணி விருப்பமோ விருப்பமில்லையோ கட்டாயம் பிரசன்னம் ஆகவேண்டும். நிகழ்வுகளிலேயே ஜீவநதியை ஒழுங்கு செய்பவர்களிடம் கதைத்து சந்தைப்படுத்தலாம். இங்கு நாங்கள் அப்படியொரு முறையை செய்து வருகின்றோம்.

எனவே பிரசுர மாற்றம், ஆக்கங்களில் மாற்றம், சந்தைப்படுத்தல், தொடர்பாடல் போன்ற விடயங்களில் பரணி கைவைத்தால் வெற்றி நிச்சயம். இவைகள் எனது பரிந்துரைகள் மட்டுமே. கலாநிதி ஐயாவும் பரணியும் மனம் வைத்தால் ஜீவநதியை மேலும் ஓடச்செய்யலாம்.நன்றி .

கோமகன் 


Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.