Posts

Showing posts from July, 2017

நட்புக்கும் உண்டோ தாழ் - பத்தி .

Image
இந்த நிலாவை மூன்று வருடங்களாகத் தெரியும் என்று முகநூல் சொன்னாலும் எமக்கிடையிலான ஆழமான நட்பு 2011 லேயே ஆரம்பமாகி விட்டது. நான் முதன் முதலாக 2011 இல் தாயகம் சென்ற பொழுது யோ கர்ணனின் கொலம்பஸின் வரைபடங்கள் நூல் வெளியீட்டு விழாவில் என்னை சந்தித்திருந்தார். அன்றிலிருந்து நான் ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும் தொலைபேசி அடித்து என்னை தனது வீட்டிற்கு அழைக்கின்ற சீவன்களில் நிலாந்தனும் ஒருவர். இருவருக்கும் இரண்டு மாத இடைவெளிகள் வித்தியாசத்தால் நான் மூத்தவனாகி விட்டேன். ஒரே வயதென்பதால் கருத்துக்களில் ஒரே நேர் அலைவரிசைகளைக் கொண்டவர்கள் நாங்கள். பச்சை மிளகாய்களையும் சின்ன வெங்காயங்களையும் குறுணியாக வெட்டி, சிறிது உப்பும் கலந்து அவரது கையாலேயே போதும் என்று மறுக்க மறுக்க அவர் ஊற்றுகின்ற மோருக்கு நான் என்றுமே அடிமை. என்னை ஆதர்சம் செய்தவர்களில் இவரும் முக்கியமானவர் . இவரது பேச்சை மனதில் நிறுத்தியே நான் மேடைகளில் பயமில்லாது பேசி வந்துள்ளேன். எல்லோரும் தான் பேசுகின்றார்கள். ஆனால் இவர் பேசுகின்ற பொழுது அதன் சாராம்சங்கள் மனதில் தைப்பதற்கு, சொல்கின்ற விடயத்தை இடைவெளி விட்டு அதேநேரம் அந்த விடயத்தை அழுத்த வேண்ட…

மிருக பந்தம் - நாயர் - பத்தி .

Image
பெயர் : ஜூனியர்
இனம் : ஜெர்மன் ஷெப்பேர்ட்
வாழ்விடம் : லனி தொர்னே - Lagny - thorigny.
எனது அண்ணை வடகோவை வரதராஜன் இயற்கை ஆர்வலராகவும் பிராணிகள் ஆர்வலராகவும் இருந்தமையால் எனது சிறிய வயதிலேயே மிருகங்கள் மீது கட்டற்ற பந்தம் ஆரம்பமாகியது. இதன் விழைவாகவே எனது " றொனியன் " மற்றும் "வெந்துர்டி திறைஸ்" சிறு கதை உருவானது. கோப்பாயில் இருந்த மரித்துப்போன றொனியன் ஆகட்டும் இப்பொழுது பருத்திதுறையில் இருக்கும் டைசன் டேவிட் ( கருப்பையா , சுப்பையா ) ஆகட்டும் , நேற்று நான் சந்தித்த இந்த ஜூனியர் ஆகட்டும் தங்கள் நடத்தைகள் மூலம் என் மனதை அள்ளியவர்கள்.
நேற்று அயல் நாட்டில் இருந்து என்னிடம் வந்திருந்த தோழி ஒருவரை அவரது தோழியான அல்விட் வசந்தராணியிடம் அழைத்து செல்ல வேண்டியிருந்தது. பாரீஸ்-இல் இருந்து ஏறத்தாழ 50 கிலோமீட்டர் தொலைவில் லனி தொர்னே என்ற இடத்தில் அவர்கள் இருந்தார்கள். தொடரூந்தில் அரை மணியில் அங்கு சென்று விடலாம். வேலைநாட்களில் நான் நண்பர்களை சந்திப்பதை தவிர்த்தே வந்திருக்கின்றேன். அதற்கு காரணங்களும் உண்டு . எல்லோரும் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது, எனது நாளானது அதிகாலை 3 மணி…

யூலை 83 உன்னை மறப்பேனோ ? - கவிதை - கோமகன் .

Image
காலம் என்ற காலச்சுவட்டில்
என் நினைவுத்தடங்கள் பல
ஆழப்புதையுண்டு அழிந்தாலும் ,
இந்தமாதமும் இந்த நாளும்
என்மனதின் ஓரத்தில்
ஆழமாய்க்கீறி
ஆறாவடுவாய் போனது…..
மாம்பழத்தீவை இனவாத
வண்டுகள் அரித்து ,
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
கருக்கட்டிய இனத்துவேச மேகங்கள் ,
உக்கிர இரத்தமழை பொழிந்ததும்
இந்த மாதமே……….
சிங்கத்தின் வம்சங்கள்
தமிழ் பெண்டுகளை வகைதொகையாயாய்
வேட்டையாடி கொக்கரித்ததும்
இந்த மாதேமே !!!!!!!!
அட பனங்கொட்டைத்தமிழா
நீ எங்கள் அடிமையடா
என்று சொனதும் இந்த மாதமே !!!!
அடிமைப்பட்ட தமிழன் (ர்கள் )
ஊரிலே பொங்காது ,
உயிரை மட்டு காப்பாற்ற
உலகெங்கும் பொங்கச் சென்றதும் ,
புலிபிடிக்குது சிங்கம் பிடிக்குது
என்று பொய் சொல்லி
வெளிநாட்டில்
ஒருபகுதி போய்ச்சேந்ததும்
இந்தவருடமே !!!!!!!!!!!!!!!
வல்லிபுரத்தான் கண்ட கனவில்
வசந்தமாய் வந்தவனே
உன்னை நான் எப்படி மறப்பேன் ????????
எல்லோரும் ஒருதிசையில் ஓட
நீ மட்டும் எதிர்திசையில் ஓடினாயடா…..
ஊனை உருக்கி
தமிழன் மானம் காத்தவனே
கந்தகநெடியில் கடுகியே கரைந்தாயே !!!!!!!
உனையும் இந்தவருடத்தையும்
நான் எப்படி மறப்பேன் ?
கோமகன்
5 யூலை 2013
மகளிர் தினம் ஓர் நோக்கு - கட்டுரை.

Image
சர்வதேச மகளிர் தினத்தின் மூலவேர் பிரான்ஸ் -ஐச் சேர்ந்தது. 17 ஆம் நூற்றாண்டில் சுதந்திரம் சகோதரத்துவம் சமத்துவம் என்ற கோசத்துடன் பிரெஞ் புரட்சி முன்னெடுக்கப்பட்ட பொழுது பெண்களும் ஆண்களுக்குரிய அதே உரிமைகளான வேலைக்கேற்ற சம்பளம் , எட்டு மணித்தியால வேலை , வாக்குரிமை , பெண்ணடிமைத்தனத்தில் இருந்து விடுதலை போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் தாக்கம் ஐரோப்பாவெங்கும் பரவியது. பலவருடங்களாக தொடர்போராட்டமாக நடைபெற்ற இந்த போராட்டம் அப்போதைய மன்னரான லூயிஸ்  பிளாங்க் மூலம் பெண்களின்  அரசவை ஆலோசனைக்குழுக்களில் பிரதிநிதித்துவம் மற்றும் வாக்குரிமை போன்ற தீர்வுகளால் 08 மார்ச் 1848 ஆம் ஆண்டு நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இன்றய கால கட்டத்தில் மகளிர் விடுதலை உண்மையில் மகளிருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதா என்றால் இல்லை என்பதே வலியான விடையாகின்றது. எவ்வளவுதான் அறிவிலும் பொருளாதாரத்திலும் பெண்கள் உயர்ந்து நின்றாலும், அவர்களை உழைப்பு சுரண்டல் ,பாலியல் சுரண்டல், அங்கீகார சுரண்டல் போன்றவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை அன்றாடம் வருகின்ற செய்திகள்  உறுதி செய்துகொண்டுதான் இருக்கின்…

நடு சஞ்சிகையின் "கிழக்கிலங்கை சிறப்பிதழ்" பற்றி இவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள்.

Image
தமிழில் வெளியாகும் இணைய இதழ்களில் வெளியாகும் எழுத்துகள் அனைத்தையும் வாசித்து முடிப்பதில்லை. ஆனால் பிரான்சிலிருந்து வரும் நடு இதழின் முக்கால்வாசியை வாசித்துவிடுவதுண்டு. லண்டனிலிருந்து வரும் எதுவரை இதழும் அப்படி வாசிக்கும் இதழ்.
தமிழ் இலக்கியத்தின் உலகப்பரப்பை அறியவிரும்பினால் இவற்றை வாசித்தே ஆகவேண்டும். ஆம் தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டிலிருந்து கழண்டுபோய் வெகுகாலமாகிவிட்டது.இப்போது வந்திருக்கும் நடு-வின் விவரங்கள் இங்கே.
00000000000000000000000000000
இதழ் 05 கிழக்கிலங்ககை சிறப்பிதழ். இவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள் ஓவியம் கட்டுரை கலைக்கூடம் கவிதை , குறுநாவல். சிறப்புக்கதை சொல்லி, சிறப்புக்கவிதை சொல்லி, சிறுகதை, நூல்விமர்சனம், நேர்காணல், பத்தி, புகைப்படம், மொழிபெயர்ப்பு, விமர்சனம்.
எழுத்தாளர்கள் :
அனார் இசாத் றெஹானா, உமா வரதராஜன், உமையாழ் பெரிந்தேவி, எம் .ஏ . ஷகி, ஏ.நஸ்புள்ளாஹ், கோ நாதன், சாஜீத் அஹமட், சாம்சுடீன் நளீம், ஜிஃப்ரி ஹாஸன், ஜெம்சித் ஸமான், தேவகி கணேஷ், பரீட்சன், றஷ்மி, லறீனா அப்துல் ஹக், லலித கோபன், விஜய் எட்வின், ஸர்மிளா ஸெய்யித்.
நன்றி : பேராசியர் அ ராமசாமி - இந்தியா .
0000000000…

"நடு" வுக்கு இன்று வயது ஒன்று.

Image
வணக்கம் வாசகர்களே , மற்றும் படைப்பாளிகளே !!
நடு இணைய சிற்றிதழானது இன்று தனது ஒரு வயதை கடக்கின்றது. இந்த ஒரு வயதில் வரவிருக்கும் கிழக்கிலங்கை சிறப்பிதழுடன் இரண்டு சிறப்பிதழ்களையும் மூன்று இதழ்களையும் நடு வாசகர்களுக்காகப் பதியமிட்டிருக்கின்றோம்.
ஐந்து இதழ்களிலும் எம்முடன் தோளோடு தோள் நின்று பயணித்த அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எமது நன்றிகள். நடுவானது மேலும் மேலும் வளர்ந்து விரீட்சமாக வளரவேண்டுமானால் படைப்பாளர்களது பங்களிப்பும் வாசகர்களது ஊக்கமும் எமக்கு அவசியமாகின்றது. இந்த ஒரு வருடத்தில் நடுவின் வளர்ச்சிபற்றி தீர்மானிக்க வாசகர்களாகிய உங்கள் கைகளிலேயே விடுகின்றோம். நடு பிறந்த பொழுது அது பற்றி வெளியாகிய கருத்துக்களை வாசகர்கள்  கீழே  வாசிக்கலாம் .நன்றி .
நடு குழுமம்
000000000000000000000000
"நடு" காலாண்டு இணைய இதழின் முதலாவது பதிப்பு தமிழ் இலக்கிய பரப்பில் தனது பிஞ்சுக்கால்களால் அடி எடுத்து வைத்திருக்கிறது. "தமிழ் இலக்கியத்தின் சிரியா" எனப்படும் பிரான்ஸிலிருந்து வெளிவந்திருக்கும் இந்த புதிய இதழை தோழர் கோமகன் நெறிப்படுத்துகிறார்.
இப்போது தாயகத்திலும் சரி புலம்பெயர் தேசத்திலும…