Skip to main content

நட்புக்கும் உண்டோ தாழ் - பத்தி .








இந்த நிலாவை மூன்று வருடங்களாகத் தெரியும் என்று முகநூல் சொன்னாலும் எமக்கிடையிலான ஆழமான நட்பு 2011 லேயே ஆரம்பமாகி விட்டது. நான் முதன் முதலாக 2011 இல் தாயகம் சென்ற பொழுது யோ கர்ணனின் கொலம்பஸின் வரைபடங்கள் நூல் வெளியீட்டு விழாவில் என்னை சந்தித்திருந்தார். அன்றிலிருந்து நான் ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும் தொலைபேசி அடித்து என்னை தனது வீட்டிற்கு அழைக்கின்ற சீவன்களில் நிலாந்தனும் ஒருவர். இருவருக்கும் இரண்டு மாத இடைவெளிகள் வித்தியாசத்தால் நான் மூத்தவனாகி விட்டேன். ஒரே வயதென்பதால் கருத்துக்களில் ஒரே நேர் அலைவரிசைகளைக் கொண்டவர்கள் நாங்கள். பச்சை மிளகாய்களையும் சின்ன வெங்காயங்களையும் குறுணியாக வெட்டி, சிறிது உப்பும் கலந்து அவரது கையாலேயே போதும் என்று மறுக்க மறுக்க அவர் ஊற்றுகின்ற மோருக்கு நான் என்றுமே அடிமை. என்னை ஆதர்சம் செய்தவர்களில் இவரும் முக்கியமானவர் . இவரது பேச்சை மனதில் நிறுத்தியே நான் மேடைகளில் பயமில்லாது பேசி வந்துள்ளேன். எல்லோரும் தான் பேசுகின்றார்கள். ஆனால் இவர் பேசுகின்ற பொழுது அதன் சாராம்சங்கள் மனதில் தைப்பதற்கு, சொல்கின்ற விடயத்தை இடைவெளி விட்டு அதேநேரம் அந்த விடயத்தை அழுத்த வேண்டிய இடத்தில் அழுத்தி பேசுவதில் இவர் ஜித்தன். இவரிடம் ஓர் நேர்காணல் முக்கால்வாசியில் நிறைவு பெற்று கடந்த 2 வருடங்களாக இழுபறியில் நின்று கொண்டிருக்கின்றது. அந்த நேர்காணல் குலரலற்றவரின் குரலில் வராமல் போனது எனக்கு மிகவும் மனவலியைத் தந்தது. ஆனால் அடுத்த நேர்காணல் தொகுப்பில் நிலாந்தன் பேசுவார் என்றே நம்புகின்றேன். எமக்கிடையிலான நட்பு வலியது. இந்த நட்பு மேலும் தொடரும்.



கோமகன்
31 ஆடி 2017
Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.

31 உழிஞை - முடக்கொத்தான் - முடக்கறுத்தான் -அல்லது முடர்குற்றான்- the balloon plant - love in a puff winter cherry - Cardiospermum halicacabum. 

முடக்கொத்தான் ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். இது உயரப் படரும் ஏறுகொடி. இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை. இக்கொடியின் வேர், இலை, விதை ஆகிய மருத்துவப் பயன்பாடுடையவை.
முடக்கற்றான் கொடிவகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் முடக்கற்றான் பயிராகும்.தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின்மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்கமுடியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும். இந்தக் கொடியின்தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும்.
இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும். இதன் பூ வெண்நிறமாக இருக்கும். இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வ…