Posts

Showing posts from August, 2017

டிலீப் டிடியே -சிறுகதை.

Image
பெயர்: டிலீப் டிடியே 
பிறப்பு: நோர்மண்டி 
தொழில் : பல்கலைக்கழக மாணவன் 
அப்பா பெயர் : டிடியே பிரான்சுவா 
தொழில் : மருத்துவர் 
அம்மா பெயர் : மைதிலி தம்பிப்பிள்ளை 
0000000000000000000000000000000 
ஓர் இளவேனிற்காலச் செக்கல் பொழுதில் நோர்மண்டி மத்திய தொடருந்து நிலையத்தில் திலீப் டிடியே-யை இறக்கி விட்டு அந்த தொடரூந்து தனது பயணத்தைக் தொடர்ந்தது. டிலீப் பாரிஸ் சோர்பேண் பல்கலைக்கழகத்தில் அரசியல் பீடத்தில் ஒரு வருடத்தை நிறைவு செய்து விடுமுறைக்காக நோர்மண்டி வந்து கொண்டிருந்தான். டிலீப் அப்பாவைப்போன்று நெடுநெடுவென்று உயரமும் பச்சைக்கண்களும் சுருள்சுருளான கரிய தலைமுடியும் அம்மாவைப்போன்று விளைந்த நெற்கதிரின் நிறமும் அம்மாவையும் அப்பாவையும் கலந்து வைத்த முகமும் என்று பார்போரைக் கிறங்கடிக்கும் அழகனாக இருந்தான். தொடருந்து நிலையத்தை விட்டு வெளியேறிய பொழுது அங்கு அவனது அம்மா மைதிலி காருடன் நின்றிருந்தாள். "மம்மோ ............" என்று கத்தியபடி அம்மாவைக் கட்டிப்பிடித்து கொஞ்சினான். அவளின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.ஒருவருடமாக மகனைக்காணாது அவள் ஏங்கிப்போயிருந்தாள். என்னதான் அவள் ஓர் பிரெஞ…

சமகால சிற்றிதழ் மரபு - கட்டுரை -வே . நி .சூர்யா. .

Image
சமீபமாக தமிழ்ச் சிற்றிதழ் மரபு அதன் சாரமான சில குணங்களை இழந்து வருகிறதோ என்ற ஐயம் எனக்கு உண்டு. இதைத் தமிழின் சென்ற தலைமுறை சிற்றிதழ்காரர்கள் ஒரு புகாராகவே சொல்லி வருகிறார்கள்.
எவ்வளவு இக்கட்டான சூழலிலும் விடாப்பிடியாக போர்குணத்தோடு, அர்பணிப்போடு இதழை தொடர்ந்து நடத்துதல், கொள்கைகளில் நிலைப்பாடுகளில் தீவிரமாக இருத்தல், நண்பர்கள் என்பதால் நிலைப்பாடுகளை கருத்தியல்களை வளைத்துக் கொள்ள தயாராக இல்லாமல் தன் சுயத்தை தக்க வைத்திருத்தல், நட்பு முறிவின் எல்லை வரையிலும் சென்று (சில சமயங்களில் நட்பையே முறித்துக் கொண்டு) கருத்தியல்களை வளர்த்தெடுத்தல், எந்த வகை அதிகார மையங்களோடும் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாதிருத்தல்.. போன்ற சில விழுமியங்கள் சமீபத்தைய சிற்றிதழ்காரகளிடம் குறைவாக உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.
இந்த மனநிலையை உருவாக்கியதில் இடைநிலை இதழ்களின் பங்கு முக்கியமானது. 90களுக்குப்பிறகான தமிழ் வாசக சூழலில் ஏற்பட்ட மாற்றங்களை அவதானித்து உருவான இவ்வகை இதழ்கள் தீவிர இலக்கிய வாசிப்பை பொதுவாசக வெளிக்கு எடுத்துச் சென்றன. இது தமிழ் சிற்றிதழ் சூழலை ஒரளவு ஜனரஞ்சகப்படுத்தியது. இதன் மறுபக்கமாக தமிழ்ச் சிற…

ரகசியத்தின் அரூப நிழல்கள் - டிலீப் டிடியே - ப தெய்வீகனின் இரு சிறுகதைகள் பற்றிய வாசிப்பு அனுபவம்.

'மலைகள்' இணைய இதழில் தோழர் லக்ஷ்மி சரவணகுமார் எழுதியுள்ள 'ரகசியத்தின் அரூப நிழல்கள்' என்ற சிறுகதை கலாச்சார அதிர்வுகளுக்கு பின்னால் அளவுகோல்களுடன் ஓடித்திரிகின்ற "பொறுப்புமிக்க சமூக காவலர்கள்" என்று சுயபிரகடனம் செய்துகொண்டவர்கள் அனைவரினது முகத்திலும் ஓங்கி அறைந்ததுபோல வெளிவந்திருக்கும் தரமான படைப்பு.
ஆணின் உடல்வேட்கையை மாத்திரம் கலவியின் ஆதிக்கப்புள்ளியாக தொடர்ந்தும் பிரகடனப்படுத்திவருகின்ற தமிழ் சமூகத்தில் பெண்களின் இரகசியமான வேட்கைகளையும் அவற்றின் நம்பமுடியாத அந்தரங்க கொதிப்புக்களையும் தனது மொழி வழியாக விளையாடித்தீர்த்திருக்கிறார் லக்ஷ்மி. சமூகத்தில் வெளிப்படையாக பேசப்படவேண்டிய இதுபோன்ற விடயங்களும் - ஆபாசம், சபலம், கலாச்சர கலவரம் என்றெல்லாம் வெங்காயத்தனமாக தொடர்ந்தும் இரகசியம் பேணுவதன் அத்தனை மொண்ணைத்தனங்களும் - இந்த கதையில் பெரும் சேதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இதே 'மலைகள்' இணையத்தில் கடந்த வருடம் 'இவளதிகாரம்" என்ற எனது சிறுகதைக்கு வெளிவந்த படுபாதகமான எதிர்வினைகளை இப்போது எண்ணி இன்புற்றிருக்க விரும்புகிறேன்.
பெண்ணின் உடல்வேட்கைக்காக வாடகை ஆ…

தமிழகத்து படைப்பாளிகள் ஈழத்துக்கு வருகை - பத்தி .

Image
"தமிழ் எழுத்துப்பரப்பில் ஒருவர் மீதுள்ள அபிமானம் என்பது வேறு அடிமைநிலை எனபது வேறு . எனக்கு எனது தோட்டத்து மல்லிகைகளே அதிக வாசம் கூடியவை."
கோமகன்

000000000000000000000000000
இன்று தமிழகத்தில் இருந்து  எஸ் ரா வந்திருக்கின்றார்.  எல்லா ஈழத்து படைப்பாளிகளும் ஏதோ தேவதூதனை கண்டு பரவசப்படுவது போல் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை போடுகின்றார்கள் . இது எனக்கு கவலையளிக்கின்றது . அதற்காக நான் எஸ் ராவுக்கு எதிரானவன் இல்லை . ஏன் நாளை ஜெ மோ, சாரு, மனுஷ்ய புத்திரன் போன்றோரும் ஈழத்துக்கு வரலாம். இதன் பின்னணியில் உள்ள நுண்ணரசியல்களை நாங்கள் விளங்க வேண்டும் என ஆசைப்படுகின்றேன். எமது ஈழத்து மூத்த படைப்பாளிகள் அவர்கள் வாழுங்  காலத்திலேயே கொண்டாடப்படல் வேண்டும் . இதில்  நான் உறுதியாக இருக்கின்றேன். 
அத்துடன் எமது படைப்புக்களமும் தமிழகத்து படைப்புக்களமும் ஒன்றல்ல. இரண்டுமே வேறுபட்ட பாதைகளில் பயணிப்பவை . நாங்கள் நீண்ட நெடிய போரின் பின்னணியில் இருந்து வந்தவர்கள். எமது அனைத்து வளங்களும் காயடிக்கப்பட்டன. காலம் இலக்கியத்துறையில் எமக்குரிய சந்தர்ப்பங்களை தருவதில் வஞ்சனை செய்தாலும் அது நல்லதையே செய்திருக்கின்ற…