Skip to main content

ரகசியத்தின் அரூப நிழல்கள் - டிலீப் டிடியே - ப தெய்வீகனின் இரு சிறுகதைகள் பற்றிய வாசிப்பு அனுபவம்.


'மலைகள்' இணைய இதழில் தோழர் லக்ஷ்மி சரவணகுமார் எழுதியுள்ள 'ரகசியத்தின் அரூப நிழல்கள்' என்ற சிறுகதை கலாச்சார அதிர்வுகளுக்கு பின்னால் அளவுகோல்களுடன் ஓடித்திரிகின்ற "பொறுப்புமிக்க சமூக காவலர்கள்" என்று சுயபிரகடனம் செய்துகொண்டவர்கள் அனைவரினது முகத்திலும் ஓங்கி அறைந்ததுபோல வெளிவந்திருக்கும் தரமான படைப்பு.

ஆணின் உடல்வேட்கையை மாத்திரம் கலவியின் ஆதிக்கப்புள்ளியாக தொடர்ந்தும் பிரகடனப்படுத்திவருகின்ற தமிழ் சமூகத்தில் பெண்களின் இரகசியமான வேட்கைகளையும் அவற்றின் நம்பமுடியாத அந்தரங்க கொதிப்புக்களையும் தனது மொழி வழியாக விளையாடித்தீர்த்திருக்கிறார் லக்ஷ்மி. சமூகத்தில் வெளிப்படையாக பேசப்படவேண்டிய இதுபோன்ற விடயங்களும் - ஆபாசம், சபலம், கலாச்சர கலவரம் என்றெல்லாம் வெங்காயத்தனமாக தொடர்ந்தும் இரகசியம் பேணுவதன் அத்தனை மொண்ணைத்தனங்களும் - இந்த கதையில் பெரும் சேதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இதே 'மலைகள்' இணையத்தில் கடந்த வருடம் 'இவளதிகாரம்" என்ற எனது சிறுகதைக்கு வெளிவந்த படுபாதகமான எதிர்வினைகளை இப்போது எண்ணி இன்புற்றிருக்க விரும்புகிறேன்.

பெண்ணின் உடல்வேட்கைக்காக வாடகை ஆண்களை அழைத்து இன்புற்றுக்கொள்வதென்பது நெதர்லாந்தில் சட்டபூர்வமான தொழில். தமிழகத்தில் பிக் - பொஸ் நடப்பதைப்போல நெதர்லாந்தில் நடைபெறுகின்ற மிகப்பிரபலமான ரியாலிட்டி ஷோவின் பெயர் அடம் அன்ட் ஈவ். யாருமில்லாத சிறு தீவொன்றில் நிர்வாணமாக இரு பெண்களையும் ஒரு ஆணையும் அல்லது இரு ஆண்களையும் ஒரு பெண்ணையும் அல்லது ஒரு பெண்ணையும் ஒரு ஆணையும் படகு மூலம் கொண்டுபோய் இறக்கிவிட்டு வந்துவிடுவார்கள். தனக்கு தேர்ந்த துணைணை அவரவர் தேர்தெடுத்து காதல் செய்து வெற்றிகொள்ளவேண்டிய போட்டி இது. ஆகஇ காதல் என்ற கண்மூடித்தனமாக உணர்வில் விழுந்து காலப்போக்கில் நிர்வாணங்களை தரிசித்த பின்னர்இ உறவுகள் வெறுத்துப்போவதிலும் பார்க்கஇ நிர்வாணத்திலேயே காதலை ஆரம்பித்துக்கொண்டால், அந்த காதல் எவ்வாறானதாரு பாதையில் செல்கிறது என்பதை கண்டுகொள்வதற்கான பரிசோதனை முயற்சியாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். அப்படியானால்இ இந்த நிகழ்ச்சியை தீவில் போய் நின்று வீடியோ எடுப்பவரும் ஒண்டுமில்லாமல்தான் நிற்பாரா என்ற அறிவுஜீவித்தனமான கேள்விகளை கேட்கப்படாது.

ஆக, உயிரின உற்பத்தியின் ஊற்றுக்கண்ணாக வழிபடப்படுகின்ற கலவிப்பொறிமுறைகளின் தற்கால நீட்சிளும் அவற்றின் இரகசிய பெறுமானங்களும் பொதுவெளிகளில் தாராளமாக பேசப்படுகின்ற விடயங்களாகிவிட்டன. அவற்றினால் சமூக மட்டங்களில் ஏற்படுகின்ற சமகால அதிர்வுகள் தவிர்க்க முடியாதவை. இவற்றினை பதிவுசெய்யவேண்டியதில் இலக்கியத்திற்கு முக்கிய பொறுப்புள்ளது. அந்த வகையில் லக்ஷ்மி செய்திருப்பது துணிச்சலான கட்டுடைப்பு. பின்னிரவுகளில் சிறிய விண்டோக்களாக கணனித்திரைகளில் ஓரமாக வைத்து வாசித்து வந்த விடயங்களை - குனிந்த தலைகளுக்குள் மாத்திரம் ரகசியங்களாக அடைகாக்கப்பட்டுவந்த உண்மை கதைகளை - பொதுவெளியில் குலைத்துப்போட்டிருக்கிறார்.

இதேவேளை 'வல்லினம்" இதழில் போன வாரம் கோமகன் எழுதியுள்ள 'டிலீப் டிடியே" என்ற பாலியல் விரக்திகொண்ட பெண்ணில் மனநிலையை மையமாக கொண்ட கதையும் கவனத்தை ஈர்த்துள்ள சிறுகதை.
'யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். எனது மனதில் தொந்தரவு செய்துகொண்டிருந்த கதைக்கருவொன்றை எழுதுவதற்கு இந்த சமூகம் உட்பட நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் " - என்பதை நிரூபித்துள்ள இரு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ரகசியத்தின் அரூப நிழல்கள்
http://malaigal.com/?p=10547

டிலீப் டிடியே
http://vallinam.com.my/version2/?p=4468
Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.

31 உழிஞை - முடக்கொத்தான் - முடக்கறுத்தான் -அல்லது முடர்குற்றான்- the balloon plant - love in a puff winter cherry - Cardiospermum halicacabum. 

முடக்கொத்தான் ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். இது உயரப் படரும் ஏறுகொடி. இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை. இக்கொடியின் வேர், இலை, விதை ஆகிய மருத்துவப் பயன்பாடுடையவை.
முடக்கற்றான் கொடிவகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் முடக்கற்றான் பயிராகும்.தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின்மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்கமுடியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும். இந்தக் கொடியின்தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும்.
இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும். இதன் பூ வெண்நிறமாக இருக்கும். இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வ…