Posts

Showing posts from December, 2017

உயர்தர பரீட்சை முடிவுகள் சொல்கின்ற சங்கதிகள் -ஒரு கதையாடல்

Image
உலகமயமாதல் கல்வியை அறிவு வளர்ச்சிக்கல்லாது அந்தஸ்துகளையும் நிதிகளை உருவாக்குகின்ற சந்ததிகளை வழங்குகின்ற ஒரு பொறிமுறையை உருவாக்கிப் பல காலமாகின்றது. கடந்த இரவு வெளியாகிய உயர்தரப்பரீட்சை முடிவுகளும் இதையே சுட்டி நிற்கின்றன.பரீட்சையில் வெற்றி பெற்றவர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடுவதும் தோற்றவர்கள் மனமொடிந்து போய் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
இந்தக்கதையாடல் தோற்றவர் பக்கமே சார்ந்து செல்கின்றது.ஏனெனில் தோல்விகளே எந்த இடத்தில் நாம் தவறுகளை செய்தோம்? அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற பல இன்னோரன்ன கேள்விகளை எமக்குள் எழுப்பி அடுத்த கட்ட நகர்வுக்கு எம்மைப் பக்குவப்படுத்த வல்லது.பரீட்சையில் தோற்றவர்கள் மனமொடிந்து போகாது தங்களை சுற்றி இருப்பவர்களின் எதிர்மறை கருத்துக்களை கேட்காது தங்களுக்கு எது முடியகூடியதோ அதனைத் தேர்வு செய்வதே வினைகளை அதிகரிக்கும் செயலாகும்.பரப்பளவிலும் குடிப்பரம்பலிலும் கொண்ட ஒரு சிறிய நாட்டில்
எல்லோருமே மருத்துவராகவும் பொறியியலாளராகவும் வரவேண்டுமானால் அந்த நாடு அது தொடர்பான வேலைவாய்ப்புகளை எப்படி உருவாக்குவது? இரண்டாவதாக இந்த இரு துறைகளை முடிப்பதற்கு எடுக்க…

புகைப்படக்காரன் பொய் சொல்லமுடியாது - குரலற்றவர்களின் குரல் ஆகியவை முன்நிறுத்தி ஒரு கதையாடல்

Image
சில மாதங்களுக்கு முன்னர் தமிழ்கவியுடன் பேசிக்கொண்டிருந்தபோது "ஜீவ நதி" நூலுருவாக்கிய இலக்கிய ஆளுமைகளின் செவ்வி தொகுதியொன்றை படித்துக்கொண்டிருப்பதாக புளகாங்கிதம் அடைந்தார். தான் முன்னொரு காலத்தில் எழுத்துக்களின் ஊடாக பிரமித்து பார்த்த பல இலக்கிய ஆளுமைகள் தங்களது பேட்டிகளின் ஊடாக பதிவு செய்திருக்கும் பல்வேறு சம்பவங்களை வாசிக்கும்போது சுவாரஸ்யமாக இருப்பதாகவும் வரலாற்றை வேறொரு கோணத்திலிருந்து படிப்பது போன்ற புது அனுபவம் ஏற்படுவதாகவும் அவர் பூரித்துக்கொண்டார். "ஜீவநதி" தொகுப்பு தமிழ்கவிக்கு வரலாற்று ஆவணமாக நிலைநிற்பது போல அடுத்த தலைமுறையினருக்கு ஒரு சிறந்த வரலாற்று ஆவணமாக - செவ்விகளின் தொகுப்பாக - துணைநிற்கக்கூடிய வகையில் - அண்மைக்காலத்தில் - வெளிவந்த இரண்டு நூல்கள் ஒன்று கருணாகரனின் "புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது" மற்றையது "மகிழ்" பதிப்பினால் வெளிவந்திருக்கும் கோமகனின் "குரலற்றவர்களின் குரல்" கருணாகரனின் நூலில் செவ்வி காணப்பட்டவர்கள் பிரபலங்கள் அல்லர். அவர்கள் மக்களால் பெரிதும் அறியப்படாதவர்கள். பேசப்படாதவர்கள். ஆனால், இந்த நூலை வாச…